Quote Originally Posted by irir123 View Post
ஏதோ சொல்லனுமேன்னு சகட்டுமேனிக்கு சொல்ல கூடாது - even assuming that these albums were not of a standard he has set for himself - which most hubbers would disagree with - these were definitely a cut above the other albums that came out in respective periods/years in terms of creativity and context of the respective film(s)..

I did not even go near albums like Azhaghi, or a few others in malayalam, or the more recent Rudramma Devi in telugu
அவர் அடிச்சிதான் விடுவார். அதை இனம் பார்த்து கண்டறிந்து தாண்டிப் போய்கொண்டே இருக்கணும்னு ஒரு முடிவுக்கு நான் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஏனெனில் நாமும் இணையத்தில் பல நல்லதொரு இசைரசனை கொண்ட மக்களது அபிப்ராயங்களை, அனுபவங்களை வாசிக்கிறோம், அதனால் ஒருவர் ஒரு அபிப்ராயத்தை திட்டவட்டமாக பகிரும்போது அது ஏற்கக் கூடியதா, இல்லையா என சுலபத்தில் உணர, கடக்க பரந்து பட்ட வாசிப்பு அனுபவம் உதவுகிறது. மறுபடியும் படம் வெளிவந்த ஆண்டு 1993. பின்னணி இசையில் குறிப்பிடத்தக்க படைப்பு ராஜாவிடமிருந்து. குறிப்பிடத்தக்க என பதம் எதோ எல்லா இசையமைப்பாளருக்கும் பொருத்திவிடக் கூடிய ஒன்றே அல்ல. நல்ல இசையறிவு கொண்ட மக்கள் அப்படத்தின் பின்னணி இசையை சிலாகித்து எழுதியிருக்கிறார்கள். இப்படி ஒன்றல்ல.. திரு கோபால் சொன்ன 91-க்கு பிறகும் ராஜாவிடமிருந்து ஐம்பது திரைப்படங்களை சொல்லிடவிட முடியும். திரு கோபால் போன்றவர்களின் தராசு எப்போதுமே பாடல்கள், அதன் மெலடியின் கட்டுமானம் இவற்றை மட்டுமே மையக் கருத்தாக வைத்து எடை போட்டு, அதற்கேற்ப அபிப்ராயங்களை அமைத்துக்கொள்ளும். இப்படி ராஜாவின் இசைப் பங்களிப்பை அணுகுவது ராஜாவின் மொத்த பங்களிப்பில் இருபது/முப்பது சதவிதத்தை மட்டும்தான்.