Results 1 to 8 of 8

Thread: Ilaiyaraja after the age of 50

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இது படு தவறான வாதம்.

    சத்யஜித்ரேயின் உன்னதங்கள் அப்பு trilogy (பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,அபுர் சன்ஸார் ),சாருலதா,ஜல்சா கர் எல்லாமே அவருடைய 35 ஆம் வயதுக்குள் சாதித்தவை. பின்னாட்களில் எடுத்ததெல்லாம் படமே அல்ல.

    கண்ணதாசன் 53 வயதில் இயற்கை எய்தினார். அவருடைய காதல்,தத்துவம்,அரசியல் ,தன்னுணர்வு சார்ந்த இயற்கை பாடல்கள்,இலக்கியத்தை இலகுவாக்கி கொடுத்த பாடல்கள் எல்லாமே அவருடைய 30 வயது முதல் 40 வரையே எழுத பட்டன.

    வாலி எழுதிய உன்னத பாடல்கள் என்று அவரே குறிப்பிட்டவை ,அவர் அறிமுகமான 32 வயதிலிருந்து 42 வயதுக்குள் எழுத பட்டவை. (இதயத்தில் நீ, படகோட்டி, இரு மலர்கள் என்று நீளும்).பின்னாட்களில் பழக்கத்தின் பால் எழுதி தள்ளினாலும் சிறந்தவை என்று சொல்ல முடியாது.

    நடிக மேதை நடிகர்திலகத்தின் ,அதி உன்னத நடிப்பு திறன் கொண்ட படங்கள் 1958-1973 வரை அவரது முப்பது வயதில் இருந்து 45 வயதுக்குள் வந்தவை.

    கலைஞானி கமலின் மிக சிறந்த பத்து என நான் கருதும் படங்கள் 1987 முதல் 1999 வரை வந்தவை .(அவருடைய 33 வயதில் இருந்து 45 வரை)

    குருதத் இள வயதிலேயே மரணம்.(தற்கொலை). அவருடைய பியாசா,காகஸ் கி பூல் எல்லாமே இளம் வயது.

    இன்னும் இசை மேதைகள் விஸ்வநாதன்,ராமமூர்த்தி,இளையராஜா,ரகுமான் எல்லாருடைய உன்னதங்களும் 20 முதல்- 45 வயது வரையே.

    இன்னும் பாரதி, ஜெயகாந்தன்,மௌனி,புதுமை பித்தன்,ஆதவன்,அசோக மித்திரன் என்ற எழுத்தாளர் வரிசை.

    (உலக அளவில் செல்லாமல் நமக்குள்ளே கணக்கெடுத்தவை)
    தேவர்மகன், இதயம், மறுபடியும், வள்ளி, அவதாரம், சிம்பொனியில் திருவாசகம், பாரதி, மகாநதி, சேது, சிறைச்சாலை, குரு, காதலுக்கு மரியாதை, காதல் கவிதை, ஹேராம், காசி, அழகி, ரமணா, பிதாமகன், ஜூலிகணபதி, விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ், சீனி கம், நான் கடவுள், நந்தலாலா, அழகர் சாமியின் குதிரை, ஸ்ரீராமஜெயம், தோணி, நீதானே பொன்வசந்தம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், ருத்ரமாதேவி, தாரை தப்பட்டை - இதெல்லாம் திரு கோபாலின் சட்டகத்திற்கு அப்பால் உள்ள ஆண்டுகளில் இருந்து ராஜாவிடமிருந்து படைக்கப்பட்டவை. ஒருவர் தனது இசைரசனைத் தளதிற்குள்ளெ இருந்து ராஜாவை எப்படிப்பட்ட சட்டகம் அமைத்துக்கொண்டு விமர்சித்தாலும், அதையெல்லாம் விட்டு விலகி ஒரு பிரபஞ்சமாக விஸ்வரூபமெடுத்து நிற்பார் ராஜா. சிலர் திறந்த மனதுடன் தனது சட்டகங்கத்தின் நீல அகலங்களை காலப்போக்கில் தளர்த்தி கொள்வார்கள். சிலர் குண்டு சட்டியில் குதிரையோட்டுவார்கள். அவர்களை அப்படியே விட்டுவிடனும்.
    Last edited by venkkiram; 23rd May 2015 at 11:36 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Likes Gopal.s liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •