Results 1 to 10 of 12

Thread: Mrs. Padmavathi ( sister of Ilayaraaja ) writes about him

Threaded View

  1. #1
    Senior Member Senior Hubber
    Join Date
    Dec 2005
    Posts
    402
    Post Thanks / Like

    Mrs. Padmavathi ( sister of Ilayaraaja ) writes about him

    பண்ணைப்புரம் என்ற பெயர் வரக்காரணம்...

    வானம் பார்த்து வழிகாட்டிய பூமி,
    வாழவைக்கும் வளம்மிக்க பூமி.
    தெய்வங்கள் விரும்பும் பூமி,
    தெய்வீகம் நிலைபெற்ற பூமி,
    பண்ணைப்புரம் என்று இந்த இடத்திற்கு பெயர் வருவதற்கு முன் இந்த இடத்தில் வாழ்க்கை நடத்துவதற்க்காக வந்தவர்கள் "பண்பாளர்களான பாவலர்கள்".
    இந்த கிராமத்தைச்சுற்றிலும் நாலாபுறங்களிலும் கேரளத்தின் மலைதொடற்சிகளுடன் மலைகள் உயர்ந்து நின்று கூர்மைகளுடன் தன் மனங்களிலுள்ள
    உயர்ந்த குணங்களை காட்டுவதைப்போல அந்த கிராமத்தின் அழகை மெருகுகள் ஏற்றும்படி வெளியில் காட்சி தந்து கொண்டு இருந்தன பசுமைகளுடன்.
    மலையின் அடித்தளங்களில் நின்ற மரங்கள், படர்ந்த கிளைகளோடும், பொலிவோடும் வெளியில் தங்களின் செழிமைகளைக்காட்டி அங்கே சுதந்திரமாக
    பறந்து வரும் பறவை இனங்களுக்கெல்லாம், எல்லோருமே இங்கே வந்து எங்களது மரக்கிளைகளில், கூடு கட்டி குடியிருங்கள், எங்களிடங்களில் இன
    வேறுபாடுகள் கிடையாது என்று பாராபட்சங்களின்றி கூறுவதைப்போல, அங்கே வளர்ந்த மரங்களுடைய கிளைகள் காட்சி தந்து பறவைகளுக்கு இடம் தந்தன.
    மலைகளின் கீழே வளர்ந்த மரங்களின் நிழல்களில் வளர்ந்த செடிகளும்,அதனடியில் வளர்ந்த கொடிகளும்,பந்தங்களையும் பாசங்களையும் எங்களின் பிணைப்புதனைப்
    பார்த்த பின்தான் நீங்கள் கற்றுக்கொள்வதற்கு தெரிந்து கொள்ளவேண்டும் என்பதைப்போல், அங்கே வளர்ந்துள்ள செடிகளுடன் கொடிகள் பின்னிப்பிணைந்து,
    மரங்களின்மீது தாவி வளர்ந்துகொண்டு, பந்தபாச உணர்வுகளைக்காட்டுவதைப்போல் மிகச்செழிமைகள் நிறைந்து வான வெளிகளுக்கு காட்சி தந்து கொண்டு இருந்தன
    இயற்கையின் வளங்கள்.
    இதனைக்கண்ட வானமேக மண்டலங்கலோ, தன் பருவகாலத்தில் உதயமான கடமைகளின் உணர்வுகளுடன், எதையும் மறந்திடாது, யாரிடங்களிலிருந்துமே எந்தவித
    பிரதியுபகாரங்களையுமே எதிர் பார்த்திடாமல், பருவகால மழை மாரியாகி வந்து, பூமியின் மீது பூமாரிப் பொழிந்து, அந்த பண்ணிசைத்துப்பாடும் பண் பாளர்களுக்கு
    அக்கிராமத்தில் பாலூத்து என்று பெயர் விழங்கும்படி நீரூத்துக்கள், மேலே மலைமீதிருந்து கீழ்நோக்கி விழுந்தோடிக்கொண்டிருந்தன.
    நீரோட்டங்கள் பள்ளங்களைப் பார்த்து ஓடி வந்து, எங்களை ஏற்றத் தாழ்வு என்ற எண்ணங்கள் நெருங்கிடவோ, அணுகிடவோ இயலாது என்பதைப்போல, அந்த இடங்களில்
    ஓடைகளிலும், மலை மேலிருந்து விழும் நீரோட்டங்கள் கூறிடாது கூறி செயல்கள் மூலமாக காட்சியளித்துக்கொண்டிருந்தன.
    அத்தனை செழிமைகளும் இயற்கையின் வளங்களுடன் அங்கே வாழ்கின்ற இனங்களுக்கு புத்தி புகட்டுவதைப்போல் பெருமையுடன் இருந்தது. அத்தனை இயற்கையின்
    அழகும் சேர்ந்து கொண்டு அந்த சின்னஞ்சிறிய கிராமத்திற்கு ஆடை ஆபரணங்களை போலவே அழகுகளை மெருகேற்றி காட்டியது. அக்கிராமத்தின் மீது விழுந்த
    சூரிய ஒளி மென்மேலும் அழகுடன் விளங்கச் செய்தன. இரவு நேரங்களில் விழும் சந்திர வெளிச்சங்கள் குளுமைதனைக்காட்டி, அங்கே வாழும் மனிதர்களுடைய மனங்களைப்
    பசுமைகளாக்கச் செய்தன.
    கிராமங்களைச் சுற்றிலுமுள்ள இயற்கையின் வளங்கள் பகட்டான வாழ்வையோ,படாடோப அடம்பரங்களையோ, யாரையுமே எதிர்பார்க்கவிடாமல் மிகதெழிவான
    தெய்வ கடாஷியங்கள் நிரந்த வளமிக்க பூமியாக இருந்தன. அங்கே முதன்முதலாக வாழ்ந்தவர்கள் பண்பாடும் பாவலர்கள்தான். பாடுவதற்காக என்று பயிற்சிகளே பயிலாத
    பாடகர்கள்,பாட பிறந்தவர்கள், சங்கீதத்தை முறையோடு கற்றுக்கொள்ளாத இங்கீதம் நிறைந்த இனிமைகளை அறிந்தவர்கள். வாயில் வரும் வார்த்தைகளை தளமறிந்திடாது,
    தாளங்களை தவறவிடாது பாடும் தரமிக்கவர்கள். பண்ணைப்புரம் என்ற பூமி மாதாவைக் குளிரச் செய்ய வந்த கானமேகங்கள், ராகதீபங்கள், அங்கு வாழவந்த பாடகர்கள்.
    இங்கே வாழவந்த வர்ணராகங்கள், பண்பாளர்கள் பண்ணிசைக்கும் புறம் அதனால் தான் பண்ணைப்புரம் என்று பெயர் வந்தது.

    -பத்மாவதி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •