Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 22



    Cauvery (1955)

    Filmography link:
    http://www.mayyam.com/talk/showthrea...=1#post1015395

    காவேரி . 1955ல் வெளிவந்த நடிகர் திலகத்தின் 20வது திரைக்காவியம். இப்படம் நல்ல வெற்றி பெற்றதற்கு அத்தாட்சி, வேலூர் ராஜா திரையரங்கில் 100 நாட்களைக் கடந்து ஓடியதாகும்.
    இருந்தாலும் ரசிகர்களிடம் இப்படம் மிக மிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏனென்று காரணம் தெரியவில்லை. ஆனால் உத்தம புத்திரனுக்கே பெப்பே காட்டும் அட்டகாசமான ஸ்டைல் காட்சிகள் நடிகர் திலகத்தால் நமக்கு இப்படத்தில் வாரி வழங்கப்பட்டுள்ளன. ஒரு காட்சியை சொல்ல வேண்டும். இளவரசன் விஜயனாக வரும் நடிகர் திலகத்திடம் வேற்று நாட்டுத் தூதாக வரும் பி.எஸ்.வீரப்பா, தங்கள் அரசர் விஜயனை தன் புதல்விக்கு மணாளனாக்க விரும்புகிறார் என்று சொல்லும் போது..

    பார்க்க 1.09.39 வினாடியில்

    ஹோ.. என்று ஒரு Reaction தருவார் பாருங்கள்..
    வசனமின்றி கேலியாக நக்கலாக சிரிப்பார் பாருங்கள்..
    கதைகளில் எழுத்தாளர்கள் வர்ணிக்கும் அந்த ஏளன சிரிப்பிற்கான அர்த்தம் அங்கே செதுக்கப்பட்டிருக்கும்.

    படம் முழுதும் அங்கங்கே மிக நுணுக்கமான ஸடைல் காட்சிகள் இன்றைய கால கட்டத்தில் திரையரங்கில் இப்படம் திரையிடப்பட்டால் ரசிகர்கள் ஒரு வாரத்தில் அத்தனை காட்சிகளையும் பார்த்து விடுவார்கள்.

    குறிப்பாக இரு பாடல் காட்சிகள் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    இளவரசன் சந்தர்ப்ப வசத்தால் மன நலம் குன்றியவனாக நடிக்கிறான். தன் தந்தையையும் குருசுவாமியையும் நம்ப வைப்பதற்காக அவ்வப்போது ஆடிப் பாடுகிறான். பேசிக் கொண்டிருக்கும் போதே பாடுகிறான். இப்படி ஒரு காட்சியில் தான் இரு பாடல்கள் இடம் பெறுகின்றன.

    சிந்தையறிந்து வாடி..



    இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்களின் குரல் யாருக்குப் பொரூந்தியதோ இல்லையோ நடிகர் திலகத்திற்கு மிகச் சிறப்பாக அமைந்தது. டி.எம்.எஸ். வந்த பிறகு கதை மாறியது வேறு விஷயம். வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஓரிரு படங்களில் வி.என்.சுந்தரம் பாடியிருந்தார். என்றாலும் சி.எஸ்.ஜெயராமன் குரல் நன்கு அமைந்த்து என்பது மறுப்பதற்கில்லை.

    சிந்தையறிந்து வாடி பாடல் காட்சியுடன் துவங்குவது இளவரசன் விஜயனின் மனநலம் குன்றிய நடிப்பு. அது சிறப்பாக அமைய வேண்டும், தான் நினைத்த்து நிறைவேற வேண்டும் என்பதற்காக செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டு பாடலைத் துவங்குகிறார். அங்கேயே ஆரம்பித்து விடுகிறது அவருடைய ஆளுமை.

    வலது கையை மார்பின் மீது வைத்துக் கொண்டு இடது உள்ளங்கையைத் தரையைப் பார்த்தவாறு வைத்து தொங்க வைத்து அபிநயத்தைத் துவக்குகிறார்.

    பின் அப்படியே இடது கையை இடுப்பின் மீது வைத்து, வலது கையை பின்புறம் கொண்டு சென்று வாடி என்பதை உணர்த்தும் விதமாக முன்னால் கொண்டு வருவதும்,

    செல்லக் குமரன் என்ற வார்த்தைக்கு முருகனைக் குறிக்கும் வகையில் இடது கை கட்டை விரலை உயர்த்தி, வலது கையில் மூன்று நடுவிரல்களை மட்டும் உயர்த்திக் காட்டுவதும்,

    செந்தூர் இடம் தங்கும் குன்றாள் மலர்க்கந்தன் என்ற வரிகளின் போது வலது கையை பின்னாலிருந்து கொண்டு வநது இரு கைகளையும் குவித்து இடத்தை உணர்த்துவதும் அதே சமயம் கழுத்திலிருந்து தலையை மட்டும் தனியே வலப்புறமும் இடப்புறமும் ஆட்டி அபிநயம் புரிவதும்,

    இப்போது சிந்தை என்ற சொல்லுக்கு தன் வலது கை விரல்களால் மார்பை சுற்றி சிந்தையை உணர்த்துவதும், அப்போது ஒலிக்கும் வீணையிசையின் போது ஒய்யாரமாக புன்னகைத்த படியே பின்புறம் நடந்து செல்வதும்,

    சின்னஞ்சிறு வயதில் என்னை மாலை ... என்று கூறும் போது இரு கைகளையும் குவித்து பின் இரு கைகளிலும் கட்டை விரலையும் சுட்டு விரலையும் இணைத்து கழுத்தைச் சுற்றிக் கொண்டு சென்று மாலையை உணர்த்துவதும்,

    கைகளைத் தொட்டானே என்ற வரிகளின் போது வலது கையால் இடது கை மணிக்கட்டைத் தொட்டு வளையலை உணர்த்துவதும்,

    அதே சமயம் முகத்தில் அந்த வெட்கத்தை அப்படியே சித்தரிக்கும் முக பாவம்,

    அன்னம் பாலும் வெறுக்க அவனியை கைவிட்டானே என்கின்ற வரிகளின் போது முகத்தில் பாவத்துடனும், இருபுறமும் திரும்பி தலையில் கை வைத்து ஒரு விதமான வெறுப்பை சித்தரிப்பதும்

    அடிமை செய் என்னை என்றே முடிய மறந்திட்டானே என்கின்ற வரிகளின் போது முகத்தை வேறு பக்கம் திருப்பி கைகளை வேறு பக்கமாக் கொண்டு சென்று வெறுப்பாக உதறும் விதமும்,

    அதே பாவத்துடன் திரும்பி சென்று திவானில் அமரும் போது கைகளை முகவாய்க்கட்டையில் ஊன்றி தலையைக் குனிந்து சிந்திப்பதும்..

    ... தெய்வமே... இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் உன்னை மிஞ்ச எவனாலும் முடியாது என்பதை ஆணித்தரமாக அப்போதே நிரூபித்து விட்டீரே எனக் கூவுகிறது மனது..

    இப்பாடல் காட்சி முடிந்த சற்று நேரத்தில் மற்றோர் பாடல் காட்சி.. மாங்காய்ப் பாலுண்டு மலை மேலிருப்போர்க்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி...

    மாங்காய்ப் பாலுண்டு




    இசைச்சித்தர் குரல் பின்னணியில் ஒலிக்க காமிரா சாலையில் துவங்கி அப்படியே அறைக்குள் நுழைகிறது. இரு கால்கள் பாட்டுக்குத் தாளம் போடுகின்றன.
    இப்போது திரும்புகிறார் பாருங்கள் அந்த ஸ்டைல் மன்ன்ன்.. ஆஹா.. அந்தப் புன்னகை அப்படியே நம்மை மயக்கிப் போட்டு விடும்... அதற்கேற்ப காமிரா க்ளோஸப்பில் அவரைக் காட்டும் போது ... இந்தப் புன்னகை தவழும் மதிமுகத்தை பெரிய திரையில் கற்பனை செய்து பாருங்கள்... மெய்மறந்து போவீர்கள்...

    இப்போது தான் ஒரு புதிய இலக்கணத்தை வகுக்கிறார் நடிகர் திலகம். பொதுவாக கன்னத்தில் கை வைத்தால் முகம் சோர்வாக, வாட்டமாக, இருக்கும் மனநிலை சோகமாக இருக்கும். ஆனால் அதை சந்தோஷமான பாவனைக்கும் பயன் படுத்தலாம் என்ற இலக்கணத்தை இக்காட்சியில் நடிகர் திலகம் நிரூபித்திருப்பார்.. கன்னத்தில் கை வைத்து ஒரு புன்னகையை உதிர்ப்பார் பாருங்கள்... ஆஹா... சொர்க்கம் என்பது இது தானோ என மனம் குதூகலிக்கும்..

    பாடும் போதே யாரோ வரும் அரவத்தைக் கவனிக்கும் முக பாவனையைத் தன் கண்கள் மூலம் சித்தரிக்கும் பாங்கு.. குருசுவாமி வருவதைக் கவனித்து எழுந்து வந்து வெட்ட வெளி தன்னில் என்ற வரிகளைப் பாடும் போது இரு கைகளையும் 180 டிகிரி க்கு விரித்து விரல்களின் மூலம் அலையைப் போன்று அசைத்து மேடும் பள்ளமுமான ஒரு வெட்டவெளி தன்னை சித்தரிக்கும் அபிநயம்,

    பட்டயம் ஏதுக்கடி என்கின்ற வரிகளின் போது முகத்தில் ஓர் அலட்சியத்தை வெளிப்படுத்தும் விதம்,

    இப்போது அவர் உதிர்க்கும் ஓர் விஷமப் புன்னகையை கவனியுங்கள்..

    உடனே சிரித்துக் கொண்டே மாங்காய்ப் பாலுண்டு என்ற வரிகளைப் பாடுகிறார். அப்படியே ரிவர்ஸில் ஆடிக்கொண்டே போகும் ஸ்டைல்...
    ஆஹா... அனுபவிக்க வேண்டும் சார் ... சிவாஜியை ரசிக்க வேண்டும் சார்.. அவர் வெறும் நடிகர் திலகமல்ல ... ரசனையை ஊட்டிய கலைத் தெய்வம்...

    இப்போது கவனிக்க வேண்டும்.. ஒரு விதமான உள்ளர்த்த்த்தோடு மலைமேலிருப்போர்க்கு என்று வலது கையை உயர்த்தி சொல்லும் நேர்த்தி.. அதில் பொதிந்துள்ள உள்நோக்கங்கள்..

    தேங்காய்ப்பால் ஏதுக்கடி என்ற வரிகளின் போது இடது கையை மடித்துக் கொண்டு அதன் மேல் வலது கையை வைத்து முகவாய்க் கட்டையில் விரல்களை வைத்து அழுத்தும் பாவனை, மீண்டும் அதே பாவனையை செய்து கொண்டே கட்டிலில் அமரும் போது ஒரு அலட்சியம்,

    இப்போது இசை மேதையின் கைவண்ணம், தாளத்தை வேகப்ப்டுத்துகிறார். அதற்கேற்ப தலையைப் பக்க வாட்டிலும் முன்னும் பின்னும் ஆட்டும் ஸ்டைல், கைகளை இடமும் புறமும் ஆட்டும் வேகம்,

    கூட்டைக் குழியிலே மண்ணை எடுத்து ... இந்த வரிகளின் போது உடம்பை சிலிர்க்கும் அட்டகாசம் (திருவிளையாடலுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே காவேரி வந்து விட்டதாக்கும்), வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம் என்று சொல்லும் போது தலைமேல் பானை வைத்திருப்பது போல் ஒரு பாவனை, அதே வரிகள் மீண்டும் பாடும் போது திரையில் நம்மைப் பார்த்து அந்த உடல் மொழியையும் சிலிர்ப்பையும் சித்தரிக்கும் போது,,.
    நம்முடைய கை என்ன பூவையா பறித்துக் கொண்டிருக்கும்.. திரையரங்கில் எழுந்து குதிக்க மாட்டோமா என்ன.. நினைத்துப் பாருங்களேன் தியேட்டர் அனுபவத்தை..

    இத்திரைக்காவியத்திற்கு இசை மேதை ஜி.ராமநாதன் அவர்கள் இசையமைத்திருந்தார். சில பாடல்களை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராம்மூர்த்தி இசையமைத்திருந்தனர்.



    காவேரி திரைக்காவியத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் எழுதியவர் உடுமலை நாராயண கவி.


    இன்று மே 23.05. அவருடைய நினைவு நாள். இந்தப் பதிவு அவருக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.

    பி.கு.

    இப்பதிவில் குறிக்கோள் காட்டப் பட்டுள்ள பாடல் வரிகளில் சில இடங்களில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •