Results 1 to 10 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

Hybrid View

  1. #1
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    மலைக்கள்ளனுக்கு மணிவிழா

    மக்கள் திலகத்தின் "மலைக்கள்ளன்" காவியத்துக்கு மணிவிழா ஆண்டு துவக்கம்

    [22.7.1954 - 22.7.2013]


    வைரவிழா துவக்க சிறப்புப் பதிவு

    சிங்காரச் சென்னையில் சிருங்கார மலைக்கள்ளன்

    CULT CLASSIC என்கின்ற செல்லுலாய்ட் காவிய அந்தஸ்தில் என்றென்றும் போற்றப்படும் கலைச்செம்மலின் "மலைக்கள்ளன்" முதல் வெளியீட்டில், 22.7.1954 வியாழக்கிழமையன்று சென்னையில் காஸினோ, பிரபாத், சரஸ்வதி ஆகிய மூன்று திரையரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.

    சென்னையைப் பொறுத்தவரை, 'காஸினோ'வில் 22.7.1954 முதல் 3.11.1954 வரை 105 நாட்கள் மெகாஹிட் ரேஞ்சில் ஓடியது. 4.11.1954 வியாழனன்று 'காஸினோ' திரையரங்கில் "பெத்த மனுஷுலு" என்கின்ற தெலுங்கு மொழித் திரைப்படம் வெளியானது.

    'பிரபாத்' திரையரங்கில் 22.7.1954 முதல் 24.10.1954 வரை 95 அபார வெற்றி நாட்கள். தீபாவளித் திருநாளான 25.10.1954 திங்களன்று தீபாவளி வெளியீடாக நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் ALL TIME GREAT மேடை நாடகமான "ரத்தக்கண்ணீர்"-ன் வெள்ளித்திரைவடிவம், நேஷனல் பிக்சர்ஸ் திரு.பெருமாள் முதலியார் அவர்களின் தயாரிப்பில், 'பிரபாத்' திரையரங்கில் வெளியானது.

    'சரஸ்வதி'யில் 22.7.1954 தொடங்கி 24.9.1954 முடிய 65 வெற்றி நாட்கள். 25.9.1954 சனிக்கிழமையன்று 'சரஸ்வதி'யில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாகவும், நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடித்த வைத்யா ஃபிலிம்ஸாரின் ஹாஸ்யச் சித்திரமான "வைரமாலை" திரைப்படம் வெளியானது.

    எனவே, மக்கள் திலகத்தின் மகத்தான மாணிக்கப் படைப்பான "மலைக்கள்ளன்", முதல் வெளியீட்டில், சென்னையில் ஓடிய நாட்கள் Crisp-ஆக:

    காஸினோ - 105 நாட்கள்
    பிரபாத் - 95 நாட்கள்
    சரஸ்வதி - 65 நாட்கள்

    மொத்தத்தில், சென்னை மற்றும் தென்னகமெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் ரேஞ்சில் ஓடி ஒரு பாக்ஸ்-ஆபீஸ் புரட்சியை உருவாக்கிய திரைக்காவியம் "மலைக்கள்ளன்".


    குறிப்பு:
    "மலைக்கள்ளன்" திரைக்காவியத்தை CULT CLASSIC எனப் புகழ்ந்ததால் மற்ற திரைப்படங்கள் காவியங்கள் அல்ல என்று பொருள்கொள்ள வேண்டாம். மக்கள் திலகத்தை இதயதெய்வமாக பூஜிக்கும் பக்தர்கள் அனைவருக்கும் அவரது 134 திரைப்படங்களுமே திரைக்காவியங்கள்தான்.


    அன்புடன்,
    பம்மலார்.
    Last edited by pammalar; 23rd July 2013 at 03:36 AM.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •