ராஜாவின் படைப்புத்திறன் 1991க்கு பிறகும் மங்கிவிடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவரது படைப்புகளுக்கு உள்ள மதிப்பு வர்த்தக ரீதியாக மங்கியது என்பது உண்மை. வர்த்தக ரீதியான மதிப்புக்கு மதிப்பில்லை என்று நீங்கள் வாதிட்டால் அதற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால் பின்பு எதற்குத்தான் மதிப்பு என்ற கேள்வி எழும். எனக்கு பிடித்ததுதான் மதிப்பானது என்று குதர்க்கம் பேசினால் அதோடு பேச்சுக்கே வேலையில்லை. ஏன் என்றால் உங்களுக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இதனால் தான் பொதுவான ரசனை மேல் பாய்பவர்களை கண்டால் கடுப்பாகிறது. அப்படி என்னய்யா உங்கள் ரசனை மேலான ரசனை. யார் தரம் பிரிப்பது? எனக்கும் அனிருத் இசை பொதுவாக பிடிக்காது. ஆனால் அது பிடித்தவரை விட எனது ரசனை எந்த வகையில் மேலானது?

நீங்கள் கூறிய சில படங்களிலேயே எடுத்துக் கொள்வோம். "சக்கரை தேவன்". கேப்டனின் மற்றுமொரு குப்பை படம். "குங்குமம் மஞ்சளுக்கு" பாடலை தவிர வேறு எதுவும் தேறாது. மகளிர் மட்டும், சேதுபதி ஐபிஎஸ், செவ்வந்தி, வியட்நாம் காலனி ஆகியவை மிகவும் சுமார் ரகம் தான்.

ராஜகுமாரன் *"சித்தகத்தி பூக்களே" தேறும். மற்றவை சுமார். "புதுப்பட்டி பொன்னுதாயி" * "ஊரடங்கும் சாமத்திலே" பாடல் ஒன்று மட்டும்தான் தேறும். இது போல் தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்களில் பல*.