இந்த மூன்று வருடங்களிலேயே சிலபல படங்களை நான் தவற விட்டிருக்கலாம். நேரம் கிடைக்கையில் தொடர்ச்சியாக 2016 வரையிலான ராஜாவின் தொடர் வீச்சினை பதிவு செய்து, ராஜாவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அடைக்க முற்படும் எல்லா விமர்சகர்களின் போலி முகங்களை அகற்றுவேன்..


போலி முகங்களை அகற்றுவீர்களா? அதற்கெல்லாம் அவசியமில்லை. ராஜாவின் சமீபத்திய "தாரை தப்பட்டை" வரை ரசித்துக் கேட்பவர்கள்தான் நாங்களும். அதற்கு பிறகு வந்த "ஒரு மெல்லிய கோடு", "அப்பா", "அம்மா கணக்கு" பாடல்கள் எல்லாம் சுமார் தான். "அம்மா கணக்கு" பின்னணி இசை நன்றாக இருந்தது. "குற்றமே தண்டனை" படத்தின் முன்னோட்டத்தில் வரும் பின்னணி இசை படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. மற்ற இசையமைப்பாளர்களையும் ரசிப்பதால் எங்களுக்கு போலி முகங்கள் என்று அர்த்தமில்லை. நாங்களும் ராஜாவின் இசையை விரும்பி கேட்பவர்கள்தான் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமுமில்லை.

கோபால் அவர்கள் கூறியதில், குறிப்பாக படைப்புத்திறன் பற்றி, எனக்கு உடன்பாடு இல்லை என்பது வேறு விஷயம். அவரை பொறுத்த வரை அது உண்மை. ஆனால் அந்த கருத்து கொண்டவர்களை போலிகள் என்றும், அவர்கள் முகத்திரையை கிழிப்பேன் என்றும் பேசுவது சிறுபிள்ளைத்தனம்.