Results 1 to 10 of 13

Thread: உலகம் சுற்றும் இசைஞானி கச்சேரிகள்

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    2016 செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் வெவ்வேறு மாகாணங்களில் ஏழு இடங்களில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி நடத்தி முடித்திருக்கிறார் இசைஞானி. பதினாறு நாட்கள் இடைவெளியில் ஏழு கச்சேரிகள் என்பது வேறு யாராலும் செய்யமுடியாத சாதனைதான். சாதனைகள் ராஜாவுக்கு புதிதல்ல. 73 என்ற வயதும் ஒரு பொருட்டல்ல அவருக்கு. ஒவ்வொரு கச்சேரியில் மூன்றரை மணி நேரங்கள் கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் நின்று கொண்டே அதுவும் மேடையில் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு வாத்தியங்களையும், பாடும் பாடகர்களின் குரல் வீச்சினையும் கவனிப்பதிலும், தானும் பாடிக்கொண்டும் சுறுசுறுப்புக்கு இலக்கணமாக திகழ்ந்தார் ராஜா.

    கடந்த 2013ம் ஆண்டு அமேரிக்கா வந்த குழுவில் SPபாலா, ஹரிஹரன் போன்ற பாடகர்கள் இந்தமுறை இடம்பெறவில்லை. ஆனால் அது ஒரு பெரிய இழப்பாக தோன்றாத வண்ணம் கார்த்திக், மனோ, சித்ரா, புதிய பாடகர்கள் மற்றும் ராஜா என திறம்பட பாடகர்கள் பாடி முடித்தனர். பாடல் தேர்வுகளும் இந்த முறை சிறப்பாக இருந்தது.

    கச்சேரிகள் நடைபெற்ற இடங்கள் - நடந்தேறிய தினங்கள்

    San Jose - Sep 10 (முழுவதும் தெலுங்கு)
    San Jose - Sep 11 (முழுவதும் தமிழ்)
    Seattle - Sep 14
    Texas- Sep 17
    Atlanta- Sep 18
    New Jersey - Sep 24
    Virginia (Washington DC) - Sep 25

    இசை ரசிகர்களுக்கு ஒவ்வொரு கச்சேரியும் தங்களது வாழ்நாளில் மறக்கமுடியாத தருணங்களாக அமைந்துவிட்டது.

    வாழ்க ராஜா கச்சேரிகள் !
    Last edited by venkkiram; 1st October 2016 at 12:32 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •