-
20th November 2014, 01:46 AM
#881
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
arulraj
Muthir kanni ..... nadikira padaththa paathaa confirm pannikalaam . ......
mudhir kanni ellam kaasu illama erukiravangalukku than not applicable here...
Karthik -Happy Illa
-
20th November 2014 01:46 AM
# ADS
Circuit advertisement
-
3rd December 2014, 12:08 PM
#882
Senior Member
Veteran Hubber
புதிதாக துவங்க உள்ள தாம்பரம் விலங்குகள் காப்பகத்தில் த்ரிஷா க்ளீன் இந்தியா பணி!
pic link- http://cinema.vikatan.com/articles/news/24/7573
-
7th January 2015, 12:23 PM
#883
Senior Member
Veteran Hubber
மார்ச் மாதம் திருமணம்: த்ரிஷாவின் கடைசி படம் 'என்னை அறிந்தால்'? - tamil hindu
மார்ச் மாதம் திருமணம் என்பதால், நடிகை த்ரிஷாவின் தமிழ்த் திரையுலக வாழ்க்கையில் 'என்னை அறிந்தால்' கடைசி படமாக அமையும் வாய்ப்பு நிலவுகிறது. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா நடித்திருக்கும் 'என்னை அறிந்தால்'. ஜனவரி 29-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
த்ரிஷா நடிப்பில் வெளிவரும் கடைசி படமாக 'என்னை அறிந்தால்' இருக்கும் என்கிறது, அவரது நெருங்கிய திரையுலக வட்டாரம்.
இது குறித்து த்ரிஷாவிற்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, "ஆமாம். த்ரிஷாவுக்கு மார்ச்சில் திருமணம் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தாமல், வருண் மணியனின் தயாரிப்பு நிறுவனத்தில் கவனம் செலுத்துவார்" என்றார்கள்.
த்ரிஷா, வருண் மணியன் மற்றும் இருவரின் நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து தாஹ்மஹால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கண்டு களித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நவம்பர் 16-ஆம் தேதி மாலை த்ரிஷாவின் செனடாப் சாலையில் உள்ள வீட்டில் வைத்து திருமணப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. த்ரிஷா மற்றும் வருண் மணியன் ஆகிய இரு குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
இரு குடும்பங்கள் பேசி முடித்துவிட்டதால், திருமண நிச்சயதார்த்தம் என்பது இம்மாதம் திரையுலக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. இந்த மாதத்துக்குள் மற்ற மொழியில் நடித்து வரும் படங்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு, த்ரிஷா நிச்சயதார்த்தம் செய்துகொள்ள இருக்கிறார்.
திருமணப் பேச்சுவார்த்தையின்போது இருவருமே மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். 2015 மார்ச்சில் இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
-
23rd January 2015, 05:59 PM
#884
Senior Member
Veteran Hubber
த்ரிஷா- தொழிலதிபர் வருண் நிச்சயதார்த்தம்: சென்னையில் நடந்தது!
பிரபல தமிழ் நடிகை த்ரிஷா- தொழிலதிபர் வருண்மணியன் நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடைபெற்றது.
சினிமாவில் 12 ஆண்டுகளாக நீடித்து வரும் த்ரிஷாவின் திருமணம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது.இதனிடையே, தொழிலதிபரான வருண்மணியனுடன் சேர்ந்து த்ரிஷா இருப்பது போன்ற படங்கள் வெளியானது. இதனால் த்ரிஷாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை த்ரிஷா மறுத்தார்.
இந்நிலையில், திடீரென வருண்மணியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த ஜனவரி 7ஆம் தேதி த்ரிஷா திடீரென அறிவித்தார். மேலும், ஜனவரி 23 ஆம் தேதி ( இன்று) திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, சென்னையில் இன்று காலை த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
த்ரிஷா சிவப்பு நிற பட்டுப்புடவையும், வருண்மணியன் பட்டு வேஷ்டியும் அணிந்திருந்தனர். திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
-
27th January 2015, 11:21 AM
#885
Senior Member
Veteran Hubber
-
10th June 2015, 05:09 PM
#886
Senior Member
Veteran Hubber
ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாச கருத்து: நடிகை விஷாகாவின் பதிலடிக்கு த்ரிஷா ஆதரவு!
`கண்ணா லட்டு தின்ன ஆசையா` உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகியான நடிகை விஷாகா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாகப் பதிவிட்ட ஒருவருக்கு காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.அவரின் துணிச்சலைப் பாராட்டியுள்ள நடிகை த்ரிஷா விஷகாவிற்கு ஆதரவை அளித்துள்ளார்.
நடிகை விஷாகா சிங் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில், வெள்ளை நிற டிஷர்ட் அணிந்த படம் ஒன்றை வெளியிட்டார். அதில் (Everybody is somebody’s foreigner) என்கிற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு நபர் மிக மோசமான முறையில் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில்,ஆபாசமான கருத்தை பதிவிட்டிருந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை விஷாகா சிங் ஆபாசமாக கமெண்ட் செய்த நபருக்கு மிகக் காட்டமாக பதிலடிக் கொடுத்திருந்தார்.
" நான் பெண் என்று எனக்குத் தெரியும். பொது அறிவு இருக்கா. உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை , தோழிகளுக்கு இருப்பது போலத்தான் எனக்கும் உள்ளது. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பதுதான். உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை, தோழிகளுக்கும் இது பொருந்தும். அவர்களிடம் போய் இப்படி அசிங்கமாக கமெண்ட் அடிக்க முடியுமா? உனக்காக நான் வருத்தப்படுகிறேன். தைரியம் இருந்தால் என் முன்னால் வந்து சொல். இல்லையென்றால் என்னுடைய பக்கத்தை விட்டு வெளியே செல்" என்று பதிவிட்டார்.
பிறகு அந்தப் புகைப்படத்தையும் அதனால் உருவான கமெண்ட்டுகளையும் விஷாகா நீக்கிவிட்டார். தேவையில்லாத விமர்சனங்கள் உருவாகும் என்பதால் அந்த பதிவை நீக்கிவிட்டேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
விஷாகாவின் விளாசல் பதிலைப் பாராட்டியுள்ள நடிகை த்ரிஷா "இத்தகைய கோழைகளை எதிர்கொண்ட விதம் அற்புதம். பெண்களின் சக்தியையே இது காட்டுகிறது" என்றுன் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
-
16th September 2015, 05:40 PM
#887
Senior Member
Veteran Hubber
தூங்காவனம் டிரெய்லர் வெளியீடு...கலக்கல் சேலையில் த்ரிஷா!
தூங்காவனம் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை நிகழ்ச்சி தற்சமயம் நடந்துவருகிறது. இந்நிலையில் த்ரிஷா தூங்காவனம் டிரெய்லர் நிகழ்ச்சிக்கு அழகிய சேலையில் வந்துள்ளார். இந்த சேலை பிரபல ஆடை வடிவமைப்பாளர் வருண் பாலால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெளிர் சந்தன நிறத்தில் பூ போட்ட சேலையில் பூக்கள் ப்ரிண்ட் செய்யப்பட்ட ப்ளவ்ஸும் அஸ்தக் ஜக்வானியால் டிசைன் செய்த கல் பொருத்தப்பட்ட தோடும் என த்ரிஷாவின் இந்த புகைப்படம் இணையத்தில் சுற்றிவருகிறது.
வருன் பாலின் எந்த ஒரு சாதரண உடையும் ஆரம்ப விலை 15 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் த்ரிஷாவின் கிராண்டான சேலை குறைந்த பட்சம் 50,000 முதல் 1.50 லட்சத்தைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருண் பால் த்ரிஷா மட்டுமின்றி பல நாயகிகளின் சினிமா நிகழ்ச்சிகளுக்கான பிரத்யேக ஆடை வடிவமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா தூங்காவனம் டிரெய்லர் நிகழ்ச்சிக்காக தயாராகிவிட்டார் என்பதை தெரிவித்துள்ளார் மேக்கப் ஆர்டிஸ்ட் நீரஜா கோனா.
-
24th January 2016, 10:06 PM
#888
Senior Member
Veteran Hubber
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
30th January 2016, 06:13 PM
#889
Senior Member
Veteran Hubber
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
7th February 2016, 11:37 AM
#890
Senior Member
Veteran Hubber
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
Bookmarks