Page 114 of 154 FirstFirst ... 1464104112113114115116124 ... LastLast
Results 1,131 to 1,140 of 1540

Thread: IR News and Other Titbits Ver.2009

  1. #1131
    Senior Member Regular Hubber
    Join Date
    Jul 2005
    Posts
    205
    Post Thanks / Like
    RPO's Wikipedia site has no mention of IR... hmmm..!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1132
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    sari vidungappA, album veli vara IR veetu munnadi oru dharna pOrattam nadathuvOm

  4. #1133
    Senior Member Senior Hubber raagas's Avatar
    Join Date
    Jun 2008
    Posts
    855
    Post Thanks / Like
    What are the upcoming albums by IR in 2010?
    Just 7 notes behold a beauty of life...

  5. #1134
    Senior Member Veteran Hubber Hulkster's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    3,083
    Post Thanks / Like
    25 Titbits about Ilaiyaraaja

    Courtesy of Orkut IR Comm - HeartA

    Quote Originally Posted by இளையராஜா 25

    - நா.கதிர்வேலன்

    தாய்ப்பாலைப் போல சுரக்கும் ராஜாவின் இசையே தமிழனின் கண்ணீரும், புன்னகையும். இயற்கையின் மெளனத்தையும் இறைவனின் தரிசனத்தையும் இசையாக்கிய ராகதேவன். நூற்றாண்டின் கலைஞன் இளையராஜாவின் பர்சனல் பக்கங்கள் இதோ...

    * இளையராஜாவின் பிறந்தநாளும், கலைஞர் பிறந்த நாளும் ஜூன் 3. இப்போது இசைக்கு வயது 67. வீட்டில்தான் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். அவருக்கோ அன்றும் மற்றுமொரு நாளே !

    * திருவண்ணாமலைக்கான பயணங்களின் ரசிகர்... வழியே வயலோரச் சிறுவர்களைப் படம் எடுப்பார். அவர்களின் முகவரி கேட்டு, அவர்களுக்கே படங்களை அனுப்பி ஆனந்த அதிர்ச்சியும் தருவார்.

    * மூகாம்பிகை கோயிலுக்குப் போய் வந்த பிறகு, அசைவ உணவையும் ஆபரணங்கள் அணிவதையும் நிறுத்திவிட்டார். கழுத்தில் 2 ருத்ராட்ச மாலைகள் உரிமையாகப் புரண்டு கிடக்கும்.

    * ராஜாவின் எளிய உணவு காலையில் 2 இட்லி, மாதுளம்பழம் ஜூஸ், மதியம் கொஞ்சம் சாதம், பழம், இரவு 2 சப்பாத்தி. காரம், உப்பு கிடையவே கிடையாது. சைவ ராஜா !

    * குளிர் உறையும் வெளிநாடுகளுக்குப் போனாலும் அதே தும்பைப்பூ வேட்டி, ஜிப்பாதான். துபாயின் பிரபல ஹோட்டலில் வேட்டி அணிந்து உள்ளே நுழையத் தடை இருந்தது. அந்தத் தடையைத் தகர்த்துத் தங்கிய ஒரே மனிதர் இவரே !

    * இளையராஜா எப்போது எங்கே புறப்பட்டுப் போனாலும் காரின் பின் சீட்டில், ஆர்மேனியப் பெட்டியும் கேமராவும் தவறாமல் இடம் பிடிக்கும்!

    * இளையராஜா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியமும் கார்த்திக் ராஜா, யுவன், பவதாரிணி எல்லோரையும் வீட்டுக்கு வரவழைத்துச் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்வார். வேடிக்கை விளையாட்டும், குழந்தைகளின் குதூகலமும், ராஜாவின் சிரிப்பும் வாசலைத் தாண்டி வெளியே கேட்கும் !

    * நவராத்திரிகள்தான் ராஜா வீட்டு ஸ்பெ ஷல். மிகச் சிறந்த சங்கீத, இசைக் கலைஞர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து, கச்சேரிகள் நடத்தி ரசிப்பார். நவராத்திரியில் இளையராஜாவின் வீடு இசையால் நிரம்பி வழியும்!

    * மாதம் ஒரு தடவை பெளர்ணமிக்கு திருவண்னாமலை செல்வார். கிரிவலம் செல்லும் போது யாரும் அதிகம் பயன்படுத்தாத உள்பாதையத் தேர்ந்தெடுப்பார். மெளனமே துணை!

    * இளையராஜா எப்போதும் வெள்ளைச் செருப்புகள்தான் அணிவார். அவ்வளவு நேர்த்தியான செருப்புகள் கடைகளில் கிடைக்காது. அது அவருக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுபவை!

    * தன் சகோதரியின் மகள் ஜீவாவைத்தான் மணந்திருக்கிறார். எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் அவர், இளையராஜாவை 'மாமா' எனக் கூப்பிடும் குரலில் பண்ணைபுரத்துத் தமிழ் மணக்கும்!

    * அறக்கட்டளை ஒன்றை அமைத்து வருடாவருடம் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கிக் கெளரவப்படுத்துகிறார். பரிசுகள் பெற்றவர்களில் வண்ணதாசன், ஜெயமோகனும் அடக்கம்!

    * முல்லையாற்றின் கரையில் லோயர் காம்ப்பில் இருக்கிற அம்மா சின்னத் தாயின் சமாதியில் அடிக்கடி போய் வழிபடுவார். எங்கும் அமைதியின் பூரணம் வழியும் அந்த இடத்தை அதிகம் விரும்புவார். சமாதியைத் தூய்மைப் படுத்தும் பணியை அவரே மேற்கொள்கிற பாங்கில் அழகு துளிர் விடும்!

    * ராஜாவின் மீது ஏறி விளையாடுகிற ஒரே செல்லப் பேரன் யதீஸ்வர். கார்த்திக் ராஜாவின் மகன். யதீஸ் சொல்வதற்கு எல்லாம் ராஜாவின் தலையாட்டலும், சிரிப்பும், பணிவும் பார்க்கிறவர்களை ஆச்சர்யப்படவைக்கும்!

    * ஜெயாகாந்தனின் மிகவும் நெருங்கிய நண்பர். அவரைப் பெருமைப்படுத்துவதற்காகவே கவிஞர் ரவிசுப்ரமணியத்தைக்கொண்டு ஓர் ஆவணப்படம் தயாரித்து இருக்கிறார்!

    * ராஜாவின் செல்போன் காலர் டியூன் என்னவாக இருக்கும். ம்ஹூம்.... சாதாரண டிரிங் டிரிங்தான் !

    * இசை வரலாற்றில் புரட்சி செய்து, சிம்பொனி, கீர்த்தனைகள் எழுதி, இசையமைப்பாளர்களின் இசையமைப்பாளராகக் கொண்டாடப்படுகிற இளையரஜாவுக்கு மத்திய அரசு இதுவரை விருதுகள் வழங்கிக் கெளரவித்தது இல்லை !

    * ஏ.ஆர்.ரஹ்மான், ராஜாவிடம் சில வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். "என் இசைவாழ்வின் முக்கியமான காலம் அது" என நினைவுகூர்கிறார் ரஹ்மான்!

    * இல்லமே கோயில் போல இருக்கும். அம்மா சின்னத்தாயின் படம் பெரிய அளவில் இருக்கும். பூக்களை அம்மாவின் காலடியில் இட்டு, கண்கள் பணிக்க வணங்கிவிட்டுத்தான் அன்றைய நாள் தொடங்கும்.

    * வார நாட்களில் பிரசாத் ஸ்டுடியோவின் நுழைவாயிலில் இளையராஜாவின் கார் அமைதியாக நுழையும்போது நம் கடிகாரத்தைக் காலை 7 மணி என நிச்சயமாகத் திருத்திக்கொள்ளலாம்!

    * இளையராஜா தன் சுயசரிதையை எழுதத் தொடங்கி 150 பக்கங்களுடன் அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறார். இப்படி உரை நடை பார்த்தறியாதது எனப் படித்தவர்கள் சொல்கிறார்கள்!

    * ஹிந்திப் பாடகர் முமது ரபியின் பாடல்களை லகுவான் நேரங்களில் மெல்லிய குரல் எடுத்துப் பாடுவார் இளையராஜா. மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் கிடைக்கிற அபூர்வ நேரம் இது !

    * அண்ணன் பாவலர் வரதராஜனின் பாடல்கள் மொத்தத்தையும் தொகுத்து வருகிறார் ராஜா. தமிழ் இலக்கியத்துக்கு மிகச்சிறந்த பங்களிப்பாக இருக்கும் இந்த முயற்சி!

    * நாகஸ்வரம் பற்றிய ஓர் ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்பது இளையராஜாவின் கனவு. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் !

    * வெண்பாக்கள் எழுதுவதில் இளையராஜா மிகவும் கை தேர்ந்தவர். அவரது வெண்பாக்களை செம்மங்குடி பெரிதாகப் பாராடியிருக்கிறார். செம்மங்குடியின் படுக்கை அறையில் இருந்த ஒரே புகைப்படம் ராஜாவுடையதுதான்! .

    நன்றி: ஆனந்த விகடன், 16.12.2009

  6. #1135
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2007
    Posts
    250
    Post Thanks / Like

  7. #1136
    Senior Member Veteran Hubber Hulkster's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    3,083
    Post Thanks / Like
    60 Lakhs if it is big budget, but a reduced fee for those who cant afford and sometimes does films for free. Sadly alot of media articles always make him sound money minded.

  8. #1137
    Senior Member Veteran Hubber Bala (Karthik)'s Avatar
    Join Date
    Sep 2009
    Posts
    2,988
    Post Thanks / Like
    Quote Originally Posted by Hulkster
    * நவராத்திரிகள்தான் ராஜா வீட்டு ஸ்பெ ஷல். மிகச் சிறந்த சங்கீத, இசைக் கலைஞர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து, கச்சேரிகள் நடத்தி ரசிப்பார். நவராத்திரியில் இளையராஜாவின் வீடு இசையால் நிரம்பி வழியும்!
    A couple of years back, during Navarathri, a student of my wife's grand father played the violin for Raaja's vocals at his residence. This aspect of encouraging upcoming artists is not widely known through the media i guess....
    "Yeah, well, you know, that's just, like, your opinion, man"

  9. #1138
    Senior Member Veteran Hubber Hulkster's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    3,083
    Post Thanks / Like
    Quote Originally Posted by Bala (Karthik)
    A couple of years back, during Navarathri, a student of my wife's grand father played the violin for Raaja's vocals at his residence. This aspect of encouraging upcoming artists is not widely known through the media i guess....
    I think that is where media plays their "influence". Before i came to hub, my image of thalaivar externally was a miserly and arrogant person thanks to all the old media articles. After going through more i realise he has done more dharmam than anyone else in TFM.

  10. #1139
    Senior Member Senior Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    635
    Post Thanks / Like
    >>>>>
    IR charges 60 lakhs/movie ???
    <<<<<

    ivvaLo kammiyA kuduththA, nAn ezhudhara software kooda thAn inspired aaga irukkAdhu

    Yuvan charges a crore, I heard !!

  11. #1140
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shankar
    >>>>>
    IR charges 60 lakhs/movie ???
    <<<<<

    ivvaLo kammiyA kuduththA, nAn ezhudhara software kooda thAn inspired aaga irukkAdhu

    Yuvan charges a crore, I heard !!
    shankar - appadi podu podu podu!
    "The woods are lovely, dark and deep.
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep"
    -Robert Frost

Similar Threads

  1. Maestro ilaiyaraaja news & titbits
    By krish244 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4001
    Last Post: 13th April 2014, 08:42 PM
  2. Background Scores for Motion Pictures : News,Titbits,Reviews
    By Hulkster in forum World Music & Movies
    Replies: 25
    Last Post: 24th July 2012, 11:56 AM
  3. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  4. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •