View Poll Results: Do you believe in "Karma"

Voters
29. You may not vote on this poll
  • yes,

    23 79.31%
  • No,

    5 17.24%
  • do know,

    1 3.45%
Results 1 to 10 of 800

Thread: Cho-vin "EngE BraahmNan"? Jaya tv

Hybrid View

  1. #1
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    விராஜனுக்கு நேற்றைய தொடரை பார்க்க முடியாமல் போனதால், நேற்றைய தொடருக்கான என் பதிவு

    p.s: ஒரு குட்டி குறிப்பு பாடலில் (title song) வரும் பெண் சன்யாசி (நாதன் குலத்தை சபிப்பவள்) வேம்புவின் அக்காளாகவும் வருகிறார் போல
    ______

    May 12th
    ________

    பாகவதர் தன் முயற்சிக்காக மருத்துவச்சி ஹேமாவைக் கண்டு அஷோக்கைப்பற்றி எடுத்துரைக்க முயல்கிறார். விழலுக்கு இறைத்த நீராய் வீணாய் போனது அவர் தரப்பு பேச்சுக்கள். எள்ளிநகையாடி வழக்கம் போல் அதை ஏற்க மறுத்துவிடுகிறார் ஹேமா.

    அஷோக்கிற்கு மயக்க ஊசி போட தயாராகிறார் ஹேமா. அதற்கு முன்பு இயந்திரங்கள் எல்லாம் சரியான இயக்கநிலையில் இருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்ளும்படி கூறுகிறான் அஷோக். அவனிடம் திடீரென ஒரு மாற்றம். அவனுள்ளிருந்து வேறொரு ஷக்தி பேசுவது போல் செயல்படுகிறான். ஏழு வருடங்கள் முன்பு சரியான இயந்திரம் தருவிக்கப்படாததால் மின் இணைப்புத் துண்டிக்க நேரிட்ட போது மித்ரா என்ற பணக்காரர் இறந்ததையும், அதைப் பற்றிய பேச்சு பிகார் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டதையும் நினைவுறுத்துகிறான். மித்ரா வீட்டவர்கள் இவரை கோர்டுக்கு இழுக்கவிருந்ததையும், ஹேமாவின் தந்தை பணம் பல செலவு செய்து அதை சரிகட்டியதையும் சுட்டிக்காட்டுகிறான்.

    வெலவெலத்துப்போகிறார் ஹேமா.

    நீங்கள் நினைப்பது சரி தான். அஷோக்கை அப்படிப் பேசச் செய்தது நாரதரின் செயல். ஹேமா நாதனிடம் எல்லோரும் சொல்லும் அதே வசனத்தை மிகுந்த மரியாதையுடன் தெரிவிக்கிறார். "சார் உங்க பையன் சாதாரண பிறவியல்ல. அவனுள்ள எதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கிறது" என்று
    வியக்கிறாள். எவருக்கும் தெரியாமல் போன தன் சரிதத்தை அவன் நினைவுக்கு கொணர்ந்ததாகச் சொல்கிறாள். ( Contradctory: Ashok says whole bihar was aware of the case and its history, how can it be unknown here in south, I am sure communication and its means weren't that bad seven years earlier. If the case was a popular one, then ashok recollecting its facts isn't any abnormal phenomenon. இயக்குனர் சற்றே கவனத்துடன்
    இருந்திருக்க வேண்டுமோ? ) தன்னால் இனி அவனை நோயாளியாக இனி ஏற்க முடியாது என்று மறுத்துவிடுகிறார்.

    (அப்பாடி !! போதும் அந்த பையனை விட்ருங்க :P )

    வேம்புவுக்கு கிரி சம்பந்தம் விட்டுப்போனதில் வருத்தம் மிஞ்சியிருக்கிறது. முதலியார் பணம் கேட்டதன் நோக்கத்தை தெரிந்தபின் அவருக்கு சிறு நம்பிக்கை மீதம் துளிர் விடுகிறது. அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் செல்லம்மா சுப்புவிற்கும் அவர் அக்காளுக்கும் எடுத்துச் சொல்லப் போய் நன்கு மூக்கறுபட்டுத் திரும்புகிறாள். எந்த சூழலிலும் பொறுமை கடைபிடிக்கும் அவளது பாத்திரத்தின் குணம் மிகவும் பாராட்டத்தக்கது.

    சாஸ்திரங்களும், நல்ல கருத்துக்களும் அறிந்த வைதீக பிராமணனுக்குத் தான் பரந்த நோக்கு இருக்க வேண்டும் என்று அவர் ஆதங்கம் மேலிட வேம்பு புலம்புகிறார்.

    பண்டிதன் என்பவன் யார் என விளக்கும் பகவான் க்ருஷ்ணர், எவன் சமநோக்குடன் பிற உயிர்களை அணுகுகிறானோ, எவனுக்கு விஷால மனசும், மனித நேயமும் இருக்கிறதோ, எவன் ஜாதி ஒன்று தான் அது மனிதன் என்ற ஜாதி , ரூபங்கள் பலவாயினும் ஆன்மா ஒன்றே என உணர்கிறானோ அவனே பண்டிதன். பண்டிதன் என்பவன் ஞானி அல்ல. இங்கு வேம்பு சாஸ்திரகள் இதையெல்லாம் கற்றுக்கொண்டவர். அதை செயல்படுத்த எண்ணுகிறார். பண்டிதனும் கற்றுணர்ந்தவன், அவன் கற்றுணர்ந்த விஷயங்களை நிஜ வாழ்வில் பயின்றால் அதுவே பெறும் நிலைக்கு அவனை உயர்த்த வல்லது. வேம்பு சாஸ்த்ரிகளைப் போன்றவர்களும், தம் பரந்த நோக்கை நிஜ வாழ்வில் கடைப்பிடிக்க முயலுவதால், அம்முயற்சி
    வெற்றி பெற்றால், என்றேனும் தம் நிலை உயர்த்தப் பெறுவர். ஞானி என்பது உயர்ந்த நிலை, எல்லோராலும் எளிதில் நினைக்கவும் வல்லாத நிலை என்பதை உணர வேண்டும்.

    ஜாதிகள் ஒழித்தவனே உண்மையான பண்டிதன் என்பதை உணர்த்த நம் எல்லோருக்கும் தெரிந்த ஆதிஷங்கரர் கதையை மேற்கோள் காட்டுகின்றனர். ஆதிஷங்கரருக்கு தெரியாததல்ல, எனினும் இப்படிப்பட்ட பாடங்கள் இவரைப் போன்ற பெரிய மஹான்களால் சாமான்ய மக்களுக்கு விளங்கப்பெற வேண்டும் என்று இறை நடத்தும் செயல் எனக் கொள்ளலாம்.

    ஆதிஷங்கரர் நடந்து கொண்டிருந்த ஒத்தையடிப் பாதையில்
    எதிரே ஒரு சண்டாளன் (சண்டாளன் என்ற சொல்லுக்கு இழி பிறவி என்று கொள்ளக்கூடாது, மாமிசங்களை விற்று, புசித்து, உண்ணும் தாமஸ குணம் படைத்தவன் என்று வேண்டுமானால் கொள்ளலாம்). அவன் ரூபம் அழுக்குடன் இருந்தது. கையில் தோல் பை அதனுள் கள், தோளில் மாமிசத் துண்டங்களைத் தொங்க விட்டிருந்தான்.

    "சற்றே விலகிக் கொள்" என்று ஷங்கரர் சொல்ல,

    அவனோ "எதை விலகச் சொல்கிறாய்? இந்த ஆன்மாவையா அல்லது உடம்பையா? ஆன்மாவை என்றால், உன்னுள்ளும் என்னுள்ளும் நிறைந்திருக்கும் அது ஒன்றே என கூறியவனே நீ தான். அப்படியில்லாமல் இந்த உடம்பை விலகச் சொல்கிறாயா? உன் உடம்பும் என் உடம்பும் அன்னம் என்ற உணவினாலான சதைப் பிண்டங்களல்லவா? உன்னுள் ஓடும் அதே இரத்தம், சதை, தசையல்லவா என்னுள்ளும்? உணவினாலான இதை விலகச் சொல்கிறாயா? " எனக் கேட்கிறான்.

    மேலும் கூறுகிறான்....

    "கங்கையில் தெரியும் சந்திர பிம்பமும், அழுக்கு நீரில் தென்படும் பிம்பமும் வெவ்வேறு ஆகுமோ? பொன்குடமேயானலும், மண்குடமேயானாலும், அதனுள் இருக்கும் காற்றுக்கு வேறுபாடு உண்டோ?" என்கிறான்.

    உடனே தன் தவறை உணார்ந்த ஷங்கரர், அவனையே தன் குரு என ஏற்றதாக கூறுவர். அத்தருணத்தில் இயற்றப்பட்டது மனீஷ பஞ்சரத்தினம் என்ற ஐந்து ஸ்லோகங்கள்.

    அடக்க மாட்டாமல் நினைவில் ஆடியது எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் பாடலொன்று ...

    காக்கை குருவி எங்கள் ஜாதி
    நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
    நோக்கும் இடமெங்கும் நாமன்றி வேறில்லை
    நோக்க நோக்க களியாட்டம்

    - பாரதியார்

    இவரின் கவிதைகள் எந்நேரத்திலும் பொருந்தி வருகிறதே!

    (வளரும்)

    _______

    ( நாளை மீண்டும் விராஜன் தொடர்வார் )

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. "Padmashri" "Isaimani" Dr. Sirkali Govin
    By pulavar in forum Memories of Yesteryears
    Replies: 1
    Last Post: 5th February 2010, 03:19 PM
  2. "Nayakan" among "Time" mag's 100 best
    By arun in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 264
    Last Post: 20th June 2008, 09:36 PM
  3. Movies of "E" and "Raam" Jeeva
    By girishk14 in forum Tamil Films
    Replies: 184
    Last Post: 13th January 2007, 08:32 PM
  4. Use of word "Mythological" or "Myth" for
    By torchbearer in forum Indian History & Culture
    Replies: 10
    Last Post: 11th April 2006, 11:48 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •