View Poll Results: Do you believe in "Karma"

Voters
29. You may not vote on this poll
  • yes,

    23 79.31%
  • No,

    5 17.24%
  • do know,

    1 3.45%
Page 53 of 80 FirstFirst ... 343515253545563 ... LastLast
Results 521 to 530 of 800

Thread: Cho-vin "EngE BraahmNan"? Jaya tv

  1. #521
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    May 14, 2009

    thanks to ISAITAMILNET - Prabhu

    [html:d0a3118ede]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13473489&vid=5071865&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8894/85546916.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13473489&vid=5071865&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8894/85546916.jpeg&embed=1" ></embed></object>
    </div>[/html:d0a3118ede]
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #522
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    Quote Originally Posted by aanaa
    எவ்வளவு முன்னேறி விட்டீர்கள்

    italic/ different color

    keep up
    Thanks.

    Credits goes to SP akka
    யுவன் இசை ராஜா...

  4. #523
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    May 15, 209

    Thanks to ISAITAMILNET - Prabhu


    [html:495fdefea2]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13489203&vid=5079469&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8909/85604515.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13489203&vid=5079469&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/8909/85604515.jpeg&embed=1" ></embed></object>
    </div>[/html:495fdefea2]
    "அன்பே சிவம்.

  5. #524
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    Hi aana,

    Thanks for sharing the videos here.

    I'm not sure if i would be able to write regularly. I'm a kinda busy with some personal works and studies too.

    Whenever I get time, i would sure visit hub and this thread.

    Thanks,
    யுவன் இசை ராஜா...

  6. #525
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    May 15th முதல் தொடரை நானே மீண்டும் தொடர்கிறேன்.

    ( விராஜனுக்கு நேரம் கிடைத்தாலோ அல்லது மறுபடி எழுதும் ஆர்வம் எழுந்தாலோ, தயங்காமல் என்னிடம் தெரிவித்தால், அவரையே மீண்டும் தொடரச் செய்து விலகிக் கொள்வேன். )

    இதுநாள் வரை தொடரை சிறப்புற எழுதி வந்த விராஜனுக்கு மீண்டும் என் நன்றி.

  7. #526
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    May 15th
    ________

    உமா அசோக்கிடம் நெருங்கிப் பழக முயற்சி எடுக்கிறாள். அவள் முயற்சிகள் அனைத்தும் அவன் எத்தனை தூரம் ஆசைகளைக் கடந்தவன் எனப் பறைசாற்றுகிறது. அவளோ அவன் குறைந்த பட்ச ஆவலைத் தூண்டவேண்டும் என்ற எண்ணத்தில் காதல் வாரத்தைகளும், நட்பின் வார்த்தைகள் பேச எத்தனிக்கிறாள். அதையெல்லாம் தாண்டிய நிலையில் இருக்கும் அவனுக்கோ பேசும் அனைத்தையும் இறைவனுடன் ஒப்பிட்டு பேசுகிறான். பஞ்ச இந்திரியங்களை அடக்கி ஆள்வதே மனிதனின் தலையாயக் கடமை. அவ்வாறு இல்லாது போனால் இந்திரயங்களுக்கு நாம் அடிமைப் பட்டு விடுவோம் என்கிறான்.

    இதையே ஸ்லோகமாகக் குறிப்பிடும் ஆதிஷங்கரர், பஞ்சேந்திரியங்களை ஆளாது போனல் நேரும் கதியை கூறுகிறார். பஞ்ச (ஐந்து) இந்திரியங்கள் (literally speaking machinery) ஆகப்பட்டது முறையே காது, கண், வாய், நுகரச் செய்யும் நாசி, ஸ்பரிசம் என்ப்படுபவையாம்.

    சங்கின் ஓசையை காதால் கேட்டு வேடன் இருக்கும் இடம் தேடி ஓடும் மானும்,

    பள்ளம் தோண்டி, இலை-ஓலைகளால் மூடி, இன்னொரு பக்கத்தில் பிடி எனும் பெண்யானையை நிற்கச்செய்து, பெண் யானையின் ஸ்பரச இன்பத்தை நினைத்தபடி ஓடி வந்து வீழ்ந்து விடும் யானையும்,

    விளக்கின் பளபளப்பைக் கண்டு மயங்கி வீழும் விட்டில் பூச்சியும்

    தூண்டிலில் கோர்க்கப்பட்டிருக்கும் புழுவை நினைந்து வகையாய் மாட்டிக் கொள்ளும் மீனும்

    நறுமணத்தை நுகர்ந்து, அதில் மயங்கி, ஆபத்தை அறியாது உறங்கும் வண்டை மூடிக்கொண்டு விடும் பூவும், அதில் இறக்கும் வண்டையும் விட....பரிதாபத்துக்குறியவன் மனிதன். ஏனெனில் அவன், ஐந்து இந்திரியங்களாலும், நாளும் மயக்கமுற்று, அழிவின் பாதையில் ஓடிக்கொண்டே இருக்கிறான்.



    "நீ ஏன் எல்லோரையும் போல் இருப்பதில்லை" என்று அங்கலாய்க்கிறாள் உமா.

    உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் தனித்துவம் வாய்ந்தவை. ஒரு மலரைப் போல் வேறொன்று இருப்பதில்லை, ஒரு மனிதனைப் போல் இன்னொருவன் இருப்பதில்லை. அப்படி இருந்துவிட்டால் வாழ்வின் சுவாரஸ்யமே குறைந்துவிடும் என்று பதிலளிக்கிறான். திருமண பந்தங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் ஆர்வம் இல்லையெனக் கூறுகிறான். இப்படி உலக இன்பததை துறந்தவர்கள் இறைவனின்
    படைப்பையும் அதன் சுவாரஸ்யத்தையும் அழகையும் ரசிக்க மறந்தவர்கள் ஆக மாட்டார்கள். அவர்களும் இறைவனின் படைப்புக்களை, நதியை, கடலை, பூவை, பொருளை, ரசிக்கிறார்கள். பெண்களின் அழகையும் கூட ரசித்து வியக்கிறார்கள். நமக்கு அவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம். ரசிக்கப்படும் நதியையோ, பூவையோ, மரங்களையோ அவர்கள் சொந்தம் கொண்டாடுவதில்லை. சொந்தம் கொண்டாட வேண்டும் என்ற ஆசையும் இருப்பதில்லை. ஆசை வேறு, ரசிப்புத்தன்மை வேறு. ஒரு அழகிய பெண் என்றால் இறைவனின் படைப்பை ரசிக்கலாம். அந்த அழகும் அதைச் சுமக்கும் பெண்ணும் தனக்கு சொந்தமாக வேண்டும் என்ற எண்ணம் வரும் போது அவர்கள் சாதாரண மானிடர்கள் ஆகிவிடுகின்றனர். ரசிக்கும் பொருளை சொந்தம் கொண்டாட நினைக்கும் போதே அவர்கள் ஆசைக்கு உட்படுகிறார்கள்.


    திருமணம் என்பதை நம் முன்னோர்களும் சமூகமும், க்ருஹஸ்தாஸ்ரமம் என்ற பெயரில் வழங்கி வந்திருக்கிறனர். இறைவனை அடைய அதை ஒரு பாலமாக, நடுத்தன்மை நிலையாக கருத வேண்டும். அதிலேயே நின்று விட்டாலோ, இறைவனை அடைதல் முடியாது போய்விடும். தனக்கு அப்படிப்பட்ட ஒரு பாலம் தேவையில்லை என்றும் அதை முன் ஜன்மங்களில் தான் கடந்து விட்டதாகவும் அஷோக் மறுத்துப்பேசுகிறான். அப்படியே எனக்கு ஒரு துணை தேவை என்று இறை நினைத்தால், அதை அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம், யோகமோ போகமோ, ராமக்ருஷ்ணரைப் போல, இச்சைகளைக் கடந்த கோரகும்பரை போல தான் வாழ நினைப்பதாகக் கூறி என உமாவின் அத்தனைப் பேச்சுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறான்.

    ரிஷிகளுக்கு பத்தினிகள் இருந்ததாக புராணங்களும் சங்ககாலத்து ஏடுகளும் கூறுகின்றன. ரிஷிகள் என்பவர்களை சந்நியாசிகளிலினின்று வேறுபடுத்திப்பார்க்கவேண்டும். ரிஷிகள் சந்நியாசிகள் அல்ல. அவர்கள் வேதங்களை கேட்டு, உணர்ந்து பிறர்க்கு சொன்னார்கள், அதன் படி வாழ்ந்தார்கள். விஸ்வாமித்ரர், வசிஷ்டர் முதலியவர்கள் பிரம்ம ரிஷி. அதே போல் ராஜ ரிஷிகள் சிலர் உண்டு. ஜனகர் ராஜ ரிஷியாக வழங்கப்பட்டது வேறு சிலருக்கு பொறாமையை உண்டு பண்ணியது. ஒருமுறை அவரின் குரு, ஜனகரின் பெருமையை பிறருக்கு புரிய வைக்க, சிறு நாடகமாடினார். "மிதிலை நகரம் பற்றி எரிகிறது" எனக் கூவினார். கூவிய மாத்திரத்தில், அனைத்து சிஷ்யர்களும், தங்களுக்கென இருந்த சிறு உடமைகளைக் காக்க ஓடோடி விட்டனர். ஜனகரோ அமைதியாக அதே இடத்தில் அமர்ந்தவாறு, தன் கடமையை தொடர்ந்திருந்தார். "என்னுடையதென்று எது இருக்கிறது? எனக்கென்று உடைமை ஏதும் இல்லை" என்று அமைதியாய் பதிலளித்தார். அரண்மணையே பற்றி எரிகிறது என்ற பொழுதிலும், தன் உடைமை எனக் கருதாது பற்றற்று செயல்படும் அவர் நிலையை பிறர் புரிந்து கொள்ள இச்சம்பவம் ஏதுவாக இருந்தது.

    (வளரும்)

  8. #527
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    பி.கு: சாதாரணமானவன் அல்ல என்று தெரிந்த ஒரு ஆண்மகனிடம், உமா உரையாடும் போக்கு shows lack of maturity in her character's part. When shez the person who thoroughly understand, that, ashok is no ordinary person who can be carried away with normal talks like park or beach or cinema or her rolling big beautiful eyes or grin. She should have intelligently resorted to other means.

    First what she should seek is his "ATTENTION" and should create a sense of "indispensable" feel of her absense in him. For that, she should go in his own way or path, talk things which he likes.

    Such things may generally work for normal person, when the character in question is an extra-ordinary one, it gets even more difficult. To talk MUNDANE things and expect him to take a note of her is utterly stupid.

    I personally feel this 'uma-ashok' syndrome in the story is quite unwanted .

  9. #528
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    May 18th
    ________

    மருத்துவர்கள் மார்கபந்துவும் ஹம்ஸாவும் தங்கள் மரியாதையைத் தெரிவித்து, அஷோக்கை தங்கள் குருவாக இருக்க வேண்டுகின்றனர். அவனோ, தனி மனிதனுள் இருக்கும் இறைவனை கண்டுணர்ந்து அவனை தியானித்தலே சிறந்தது எனக் கூறுகிறான். எதிர்காலமென்றும் கடந்த காலமென்றும் ஏதும் இல்லை. நிகழ்கால மணித்துளிகளே சத்தியமானது. யுகங்களாகவும், ஆண்டுகளாகவும், பிரித்து நொடிகள் என கூறுகட்டி இருக்கும் நேரம் பிரிக்க முடியாத ஒன்று. அதன் இருப்பு ஒன்றே உண்மை. இருப்பு நிலையில் உள்ள அந்தந்த வினாடிகளே நிச்சயமானவை. மற்றெல்லாம் இல்லாத ஒன்று. காலம் எனும் சொல் காலவரையற்றது. கணிக்க முடியாதது. இந்நிலையில் இருந்து இறைவனை உணர்ந்த யோகிகள் பலர். அப்படிப்பட்ட யோகிகளும் ஞானிகளும் மேதைகளை விட பன்மடங்கு உயர்ந்தவர்கள். அவர்களால் இரமணரைப் போல் உயர்நிலை இருப்பில் இருந்து கொண்டு தங்களை இயக்க முடியும். ரமணர் அறுவை சிகிச்சையின் போதும் கூட உயிர்நிலையில் தன் பிரக்ஞையை இருத்திக்கொண்டு உடல் பிரக்ஞையை கடந்த நிலையில் இருந்தது பலரும் அறிந்ததே.

    மனோவியாதி முதல் பல கொடிய நோய்களும் பணம் படைத்தவனையே தாக்குகின்றது. ஏனெனில் பணம் படைத்தவன் பணத்திற்காக பறக்கிறான். அது தேவைக்கு அதிகமாக இருந்து விட்டாலோ இன்ன பிற கவலைகள். அதை சேர்த்து வைப்பதும், பாதுகாப்பதும் இதயத்தின் பலகீனத்தை அதிகரிக்கிறது. பணம் சேர்ப்பது குற்றமா என்றால். இல்லை. பின் எதனால் வியாதி வருகின்றது?

    அளவுக்கு அதிகமாக எதின் மேலும் பிரியம் வைப்பதே வியாதிக்கு வித்து. பிரியம் என்பது பற்றைக் குறிக்கிறது. பற்றின்றி பணம் சேர்ப்பதோ, பிற கடமைகளைச் செய்யும் மனிதனை வியாதி அண்டுவதில்லை. அவனிடம் பற்று இல்லாத போது மனம் ஒரு நிலைபட்டு இறைவனின் தியானமும் சித்திக்கிறது.

    பற்று ஆசைக்கு வித்திடுகிறது. ஆசை நிறைவேறாத போது கோபமும் வருத்தமும் பெருகுகிறது. வெறி அதிகரிக்கிறது. நல்ல நினைவுகள் அழிந்து புத்தி நாசம் ஆகிறது என்று கீதை உரைக்கிறது.


    Chapter 2 - Verses 62 & 63



    dhyayatho vishayaan pumsa: sangks theshu upajayathe |
    sangaath sanjayathe kaamah kamaath krodha abhijayathe ||

    krodhaath bhavathi sammoha: sammohaath smruthi vibramah: |
    smruthi bramshaadh bhudhinaso budhinashath praNashyathi ||




    ஒருவன் உலகியல் சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் போது, சிந்திக்கும் போது, அவனுக்கு அதன்பாற் பற்று ஏற்படுகின்றது. பற்றிலிருந்து ஆசையும், ஆசையின் காரணமாய் கோபமும் உண்டாகிறது.

    கோபம் கொண்டாலோ மதிமயக்கம் தோன்றி நினைவாற்றல் தடுமாறுகிறது. நினைவாற்றல் குன்றிய நிலையில் பகுத்தறியும் தன்மை குறைவதால் மீண்டும் அவனுக்கு புலன்களின் பாலும் உலகியல் நாட்டதிலும் அறிவு தடுமாறி அழிவு நிலை ஏற்படுகின்றது.

    "என்னுடைய" என்ற பற்று அகன்று விட்டால் துன்பம் அத்தனையும் அகன்று விடும். ஞானியும் பொருளின் மேல்ஆனந்தம் கொள்கிறான். பொருட்களை வியக்கிறான், உபயோகிக்கிறான், ஈட்டுகிறான், அடைகிறான். ஆனால் அவனிடம் அந்த பொருளின் மேல் ஆசை இருப்பதில்லை. அது இருந்த போதும் ஆனந்தம் கொள்கிறான். இல்லாது பொயினும் ஆனந்தம் மட்டுபடுவதில்லை. "அன்றலர்ந்த தாமரை போல்" ராமன் காட்டுக்குச் சென்றதைப் போல. நமக்கு தெரியாதவனின் இறப்பு நம்மை எத்தனை அளவு பாதிக்கிறதோ, அதே அளவு தெரிந்தவனின் இறப்பும் பாதித்தால், அதே அளவே நமக்கு வேண்டியவனின் இறப்பும் பாதித்தால், பிறவிப் பெருங்கடல் நீந்தி விட்ட ஞானியின் பட்டியலில் நம்மையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    பத்ம வியூகத்தைப் பற்றியும் அது தொடர்பான மஹாபாரதக் கதையும் சோவும் தயாரிப்பாளரும் பகிர்ந்து கொண்டனர். நம் வாழ்வில் வரும் பந்தங்களும் பற்றும் கூட பத்ம வியூகம் தான். நம்மால் சுலபமாய் உடைத்து நுழைந்துவிட முடிகிறது. இப்படிப்பட்ட பற்றில் பத்ம வியூகத்தில் மாட்டிய அற்ப மானிடராய் வெளி வரவும் வழியின்று நாம் வாழ்ந்து மடிந்தும் போகிறோம்.

    (வளரும்)

  10. #529
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    May 19th
    _______

    எழுத முக்கியத்துவம் வாய்ந்த அளவு இன்றைய பகுதியில் ஒன்றும் இல்லை.

    ஜெயந்தியின் அம்மா சுப்பு, கிரியின் தாத்தா வீட்டிற்கு மிகவும் கடமைப்பட்டவர்களாய் வளர்ந்திருந்தது தெரிய வந்ததும், நெகிழ்ந்து போகும் சுப்பு, ஜெயந்தியை கிரிக்கே திருமணம் செய்துவிக்க மனமார ஒப்புக்கொள்கிறாள். வசுமதி, தனக்கு உமாவின் வருகையும், அவள் அஷோக்கிடம் காட்டும் ஈடுபாடும் தனக்குப் பிடிக்கவில்லை என்பதை உமாவிடமே வெளிப்படையாய் தெரிவிக்கிறாள். இதையறிந்து உமா மௌனமாக வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறாள்.

    'ஆயிரம்-பொய் சொல்லி ஒரு திருமணம் செய்யலாம்' என்பது உலகாய பழமொழி. ('ஆயிரம் முறை போய் சொல்லி' என்ற மாற்றுக் கருத்தும் உபதேசமும் நிறைய கேட்டாகி விட்டது ) சத்தியமே சிறந்தது. சத்தியத்தை பேசுவதே உத்தமம். சத்தியத்தையும் இதமாக, மனம் புண்படாமல் பேச வேண்டும். மனம் புண்படக்கூடாது என பொய் பேசுவது சரியில்லை என ஹிதோபதேசத்திலும், ஹிந்து தர்மத்திலும் குறிப்பிட்டிருப்பதை சோ நினைவு கூர்ந்தார்.

    *மனம் புண்படக்கூடாது என பொய் பேசுவது சரியில்லை* என்றால்....

    'பொய்மையும் வாய்மை இடத்தே
    புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்'
    - என்ற குறள் தர்மத்திற்கு புறம்பானதா?

    (வளரும்)

  11. #530
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    SP akka...

    யுவன் இசை ராஜா...

Page 53 of 80 FirstFirst ... 343515253545563 ... LastLast

Similar Threads

  1. "Padmashri" "Isaimani" Dr. Sirkali Govin
    By pulavar in forum Memories of Yesteryears
    Replies: 1
    Last Post: 5th February 2010, 03:19 PM
  2. "Nayakan" among "Time" mag's 100 best
    By arun in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 264
    Last Post: 20th June 2008, 09:36 PM
  3. Movies of "E" and "Raam" Jeeva
    By girishk14 in forum Tamil Films
    Replies: 184
    Last Post: 13th January 2007, 08:32 PM
  4. Use of word "Mythological" or "Myth" for
    By torchbearer in forum Indian History & Culture
    Replies: 10
    Last Post: 11th April 2006, 11:48 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •