ஆடி வெள்ளி தேடி இன்பம் பாடல் தான் தமிழ்த் திரையிசைப் பாடல்களிலேயே முதன்முதலாக அந்தாதி முறையில் உருவாக்கப் பட்டது என நினைக்கிறேன். அதாவது ஒரு தொகுதி முடியும் வார்த்தையை அடுத்த தொகுதியின் தொடக்கக்கமாகவும் வைத்து பின்னப் பட்டப் பாடல். பாடல் உருவாக்கத்தில் பலப் பல புதுமைகளை செலுத்தி உருவாக்குவதில் ஊன்று கோலாக இருந்த சிறந்த படைப்பாளி பாலச்சந்தர்.. சித்தர்கள் செல்லும் இடமெல்லாம் பல அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டே செல்வார்களாம். அதுபோல, பாலச்சந்தர் தான் பணிபுரியும் இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் எல்லோரிடத்திலும் யாருமே இதுவரை பெறாத பொக்கிஷங்களை பெற்றுக்கொண்டே சென்றிருக்கிறார்.