ராஜா சார், தான் இசை அமைத்த பாடல்களை கேட்பதே இல்லை என்று சில பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். ஆனால் தான் பாடும் போதும் மற்றவர்கள் பாடும் போதும் சிறு தவறு இருந்தாலும் கண்டு பிடித்து விடுகிறார். எப்படி?

அமுதே தமிழே பாடலை நாமெலாம் ஒரு 30 ஆண்டுகளாய் கேட்டு கொண்டி இருக்கிறோம். இத்தனை வருடம் கேட்ட பின்பும் தப்பும் தவறுமாய் பாடும் இசை பயின்றவர்களுக்கு மத்தியில்....


ஊன் மெழுகாய் உருகும் ....
என் நினைவும் கனவும் இசையே...


என்று ஏற்ற இறக்கங்களுடன் ராஜா சார் எப்படி சரியாக நுணுக்கமாக பாடுகிறார்? அவர் இசை அமைத்து ரெக்கார்டிங் செய்ய இந்த பாடல்களுக்கு 5 மணி நேரங்கள் ஆகி இருக்கலாம். அதன் பிறகு இந்த பாடல்களை கேட்க்க அவரு எப்போது நேரமிருந்திருக்கும்?


அவர் இசை அமைத்த பாடல்களை அவருக்கு நினைவு இருக்காதா என்று கேட்க தோன்றவில்லை.. நேற்று என்ன சாப்பிட்டோம் என்று இன்று பலருக்கு நினைவிருப்பதில்லை.


தான் இசை அமைத்த பாடல்களில் அவருக்கென்று சில பேவரைட்ஸ் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.