Quote Originally Posted by poem View Post
தொடர்ந்து ராஜாவை குறை சொல்லியே எழுதி வரும் அண்ணன் கோபாலை மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் அவருக்கு எதிராக வரும் 25 தேதி வியட்நாமில் இருக்கும் மீகாங் நதி கரையில் கருப்பு கோடி ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும். இனிமேலும் தொடர்ந்து தவறாக எழுதினால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் எனபதை உறுதியாகவும் இறுதியாகவும் சொல்லி கொள்ள விரும்புகிறோம். தைரியம் இருந்தால் "லிங்கா" படத்தை விமர்சித்து ஒரு பதிவு போடவும் ( லிங்கா படத்துக்கு தப்பாக விமர்சனம் செய்பவர்களை போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணுதாம்.).
நேற்றுதான் (5/12/2014)நேரம் கிடைத்து காவியத் தலைவன் பார்த்தேன். ஒரு intense period drama என்ற வகையில் மிக ரசனைக்குரியது.நடிகர்கள் பங்களிப்பு பாராட்டுக்குரியது. ஜெய மோகன்- வசந்த பாலன் கூட்டணியில் இன்னுமோர் நல்ல படம்.

இருங்கள் ,இருங்கள் . நான் சொல்ல வந்ததே வேறு.

இத்தனை பண்ணியவர்கள் இதயத்தை கோட் ஸ்டாண்டில் வைத்து techno -music பண்ணி கொண்டிருக்கும் திலிப் என்கிற ரகுமான் என்ற robot இடமா அதனை ஒப்படைப்பது? கே.வீ.மகாதேவன் போன்ற மேதைகள் உயிரோடு இல்லையென்றாலும், பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இதய சுத்தியுடன் , படத்தில் ஆன்மா அறிந்து இசையமைக்கும் இளைய ராஜாவை எப்படி மறந்தார்கள்? இளைய ராஜாவை வைத்து, பழைய கால இசை கருவிகளையே உபயோகித்தோ,அல்லது ஹே ராம் போல புதுமையுடன் ஜீவன் கெடாமலும் பண்ணியிருக்கலாமே? இந்த படம் பார்க்கும் மனநிலையுடன் வரும் பண்பட்ட ரசிகர்கள், ரகுமானின் கன்றாவி இசை கேட்கவா வருவார்கள்?

இவரின் மிக பெரிய ரசிகன் என்ற விதத்தில் ,இவர் சமீப பத்து வருடங்களாக என்னை ரொம்பவே சோதிக்கிறார் ரகுமான். இப்படி involvement இல்லாமல், ஏனோதானோ பின்னணி இசை, பாடல்கள் நான் கேட்டதே இல்லை. இந்த படத்தை இசையே இல்லாமல் எடுத்திருந்தால் கூட ,இதை விட சிறந்த அனுபவத்தை கொடுத்திருக்கும். இளைய ராஜாவின் ஆத்மார்த்த இசை, அவதாரம் அளவிற்கு படத்தை கொண்டு சென்றிருக்கும். அருமையான ஒரு படத்தை ,ஆத்மார்த்தமாக ரசிக்கும் அனுபவத்தை கெடுத்த ரகுமானை, வசந்தபாலன்,பாலா,செல்வராகவன்,மிஸ்கின் போன்ற நல்ல இயக்குனர்கள் நாடாமல் இருப்பது நல்லது.