இதை விட யாரும் தெளிவாக சொல்ல முடியாது, தோழர். என் நன்றியும் வாழ்த்துக்களும்.

பாலு மகேந்திரா அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சுகா (படித்துறை) இந்த 'கனவு காணும்' பாடலின் உருவாக்கம் பற்றி தன் 'மூங்கில் மூச்சில்' சொல்லியிருந்தார். ராஜா,பாலு இருவரும் மன்னா டேயின் ரசிகர்கள். ஒரு மாலைப்பொழுதில் மன்னாவின் Kasme Vaadeவை கேட்கும்போது பாலு அந்தப் பாடலை தன் அடுத்த படத்தில் பயன்படுத்த முடியுமா என்று ராஜாவை கேட்டதாகவும், அதற்கு ராஜா ஒப்புக் கொண்டதாகவும் எழுதியிருந்தார். இது அந்தப் பாடலின் இசையமைப்பாளர்களான கல்யாண்ஜி-ஆனந்த்ஜி ஒப்புதலோடு நடந்ததாக சொல்வார்கள்.

இதே கல்யாண்ஜி-ஆனந்த்ஜி ராஜாவின் 'இளைய நிலா'வை தங்கள் படத்தில் பயன்படுத்தியது வேறு விஷயம். Give and take policy.