அப்படியெல்லாம் ,மற்ற இசையமைப்பாளர்களை புறம் தள்ளி ,இளையராஜாவிடம் மட்டும் எல்லாம் அடைந்து விட முடியாது. நான் ,இளையராஜா விஸ்வநாதனை மாடல் ஆக கொண்டு செய்த முயற்சிகளை,அதில் அடைந்த தோல்விகளை விளக்க போகிறேன். நான் யாருடனும் ஒப்பிடாமல்,செய்ய நினைத்திருந்ததை நீங்கள் ஒப்பீடு செய்ய என்னை தூண்டியதற்கு நன்றி. இது ,இக்கட்டுரைக்கு கூடுதல் பலமே.

அவர்(எம்.எஸ்.வீ -டி.கே.ஆர்,எம்.எஸ்.வீ) இசையில் யாராலும் கிட்டே நெருங்க முடியாத பாடல்களை மெலடி,குத்திசை,துள்ளிசை,சோதனை, வெளிபாணி எல்லாமே சேர்ந்தவை. ஒரு 100 ஆவது பட்டியல் இடுகிறேன்.

இளைய ராஜா இசையில் என்னை மறந்ததுண்டு. விகசித்ததுண்டு. பழைய நினைவுகளில் அகப் பட்டு இன்ப சித்திரவதை அடைந்ததுண்டு. ஆனால் எஸ்.எஸ்.வீ இசையில் mysterious divinity with psychedelic unpredictability ,இளையராஜாவின் எந்த பாடலிலும் காணக் கிடைப்பதில்லை. அதுதான் எம்.எஸ்.வீ . நான் தரும் நூறு பாடல்களை சுகமாக கேட்டு விட்டு ,வாதம் புரியுங்கள்.

இளையராஜா ,முயற்சியால்,பயிலும் ஆர்வத்தால் தன்னை உருவாக்கி செதுக்கி கொண்டவர். எம்.எஸ்.வீ எந்த இலக்கணத்திலும் வராத சுயம்பு.அவரின் மூளை ,கிட்டத்தட்ட தாமஸ் ஆல்வா எடிசன் போல.

அதே மாதிரி திட்டமிட்டு கச்சிதமாக நோட்ஸ் கொடுத்து இசை கலைஞர்களை ஆட்டுவிப்பது ஒரு வகை.,

அவர்களை தட்டி கொடுத்து மனோதர்மம் என்று சங்கீதத்தில் சொல்ல படும் வகையில் planned &Spot improvisations க்கு இடம் கொடுப்பது இன்னொரு வகை.

நான் இரண்டாவது வகையில் தான் பல உன்னத பாடல்களை கண்டிருக்கிறேன்.


எம்.எஸ்.வீயுடையது முக்கால்வாசி இரண்டாம் வகையே.