ராஜாவின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த 'பக்தி' பாடல்கள் பல உண்டு. அதில், இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்! இதில் சிறப்பு என்னவென்றால், பாடல் வரிகளும் காவியத்தன்மை வாய்ந்தவை. No pedestrian lyrics here.. இசையும் நம்மை வேறு ஒரு தளத்துக்கு அழைத்துச்செல்லும்.

1. பார்த்த விழி பார்த்தபடி... படம்: குணா
2. எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ படம்: பாரதி

1. முதல் பாடல். இதில் கோரஸ் பெண்கள் பாடுகிறார்கள்...
.
இடங்கொண்டு விம்மி .. இணை கொண்டு இறுகி
இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்ட
இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட
கொள்கை நலம் கொண்ட நாயகி
நல்லரவின் படம் கொண்ட அன்புப்பணிமொழி
வேதப் பரிபுரையே...

பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்குக்காணக்கிடைக்க ...

பாடலாசிரியர் வாலியா, புலமைப்பித்தனா சரியாகத் தெரியவில்லை.. அற்புதம்! பாடியவரோ யேசுதாஸ்.. பாடலின் பாதிப்பைச் சொல்ல வேண்டுமா?

2. இரண்டாவது பாடல், பாரதி படத்தில், பாரதியார் எழுதாத ஒரு பாடல். புலமைப்பித்தன் எழுதி, மது பால கிருஷ்ணன் பாடிய பாடல். உதாரணத்துக்கு சில வரிகள் இதோ:

வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத்திரு உளம் வேண்டும்
சக திருக்கெனை தரத்தகும் நெறி வகுத்திடத் துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் எனத்தெரியும் ஒரு கண்டன் .
அண்டும் திருத் தொண்டன் எனும், அடியார்க்கொரு தொண்டன் ..
பற்றுத் தலைக்கு நெருப்பவன்;
ஒற்றைக்கணத்தில் அழிப்பவன்;
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து ... (எதிலும் இங்கு இருப்பான்)

தெளிய நீரோடை போன்று பிரவாகமாய் வரும் இசை... Very meditative.