Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #5
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பரமபதம் : நடிகர்திலகத்தின் புகழேணியில் புதிய நெடுந்தொடர் படிக்கட்டு
    வாழ்க்கைத் திருவிழாவில் சாண் ஏறினால் முழம் சறுக்க வைக்கும் வழுக்குமரம்!
    பரமபதம் 1 : பாசமலர்

    பரமனின் பாதம் அடைவதற்குள் இந்த பாமர மனித வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டே !
    படிப்படியாய் கட்டங்களைக் கடந்து உச்சத்தை அடைய விழைவோம் ஆனால் எதிர்பாராத வண்ணம் நமது அறியாமையாலும் அஜாக்கிரதையாலும்
    விதியென்னும் பாம்பு தீண்டி டக்கென்று கீழே வந்து விடுவோம் முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்ற வாழ்வியல் மறை புரிந்தவர்கள் மீண்டும்
    படிக்கட்டுகளில் ஏறுவர் முயற்சிகளை தொடருவர் வெற்றி மகுடம் தேடிவந்து தலையில் அலங்கரிக்கும்

    இந்த பரமபத விளையாட்டு பெரும்பாலான நடிகர்திலகம் படங்களின் அடிக்கோடு

    துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மத்தியில் எதிர்நீச்சல் போடுவார் நடிக மன்னன் ஆனால் வஞ்சக வலைகளில் சிக்கி பாதாளத்தில் விழுந்து விடுவார். ஆனாலும் தன் முயற்சியில் தளராத விக்கிரமாதித்தனாக வேதாளத்தை வெட்டி வீழ்த்தி காடாறு மாதம் முடித்து நாடாறு மாதம் ஆண்டிட மேலே வந்துவிடுவார் !! சிலசமயம் மீண்டும் வீழாது உச்சம் தொடுவார்...சிலசமயம் மீண்டும் பாசவலை போன்ற மோசப் பாம்பு கடிபட்டு மீள முடியாத அதல
    பாதாளத்துக்கும் சென்று விடுவார் !!
    பரமபதத்தின் முதல் கட்டமாக என்றும் நமது இதயத்தை விட்டு நீங்கிடாத அமரகாவியமாம் பாசமலர் !

    வாழ்வின் முன்னேற்றக் கட்டங்களைக் கடக்கும் பாசப் பாமரன் !


    முயற்சியில் முன்னேற்றம் கண்ட பணக்கார பாசத் திலகம்







    பொறாமைப் பாம்பு தீண்டும் போது முதல் சறுக்கல்



    பாசவலைப் பாம்பு தீண்டி மீளமுடியாத பாதாளம் செல்லும் பாசநாயகண் !!



    Apparently the end of Part 1

    But....our immortal NT emerges up again in the ladder of Paramapatham to reach another height in the typical Paramapatha vilayaattu movie Thookku Thookki!!
    Last edited by sivajisenthil; 12th February 2015 at 11:19 AM.

  2. Likes Russellmai, KCSHEKAR, kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •