Results 1 to 10 of 260

Thread: Ilaiyaraja's New Albums 2016-18, News and Titbits

Hybrid View

  1. #1
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    சுந்தர்ராஜன் பற்றி ஏதோ சொல்ல தோன்றுகிறது.. நேரமிருந்தால் படிக்கவும்.

    இளையராஜா 1000 நிகழ்ச்சிக்கு முன்னர் மகாபலிபுரம் நேர்முக பேட்டியில், பாடகர்களை தேர்வு செய்வது பற்றிய கௌதமின் கேள்விக்கு ராஜா சாரின் பதில்: இதற்க்கு முன்னமே திட்டமிடுவதில்லை, பாடல் பதிவன்று "நம்ம சுந்தர்ராஜன்" இருப்பார், கேசட்க்கு முன்பு டியூனை பாடி காட்டுவார், பின்னர் எல்லாம் கேசட் போட்டு காட்டுவார், அந்த நேரத்தில் தான் பாடகர்களை தேர்வு செய்வோம் என்றார்.

    யார் இந்த சுந்தர்ராஜன்?

    சுந்தர்ராஜன் இசை அமைத்த ஒரே மலையாள படம் 'அப்பு'. மோகன்லால் சுனிதா நடித்து 1990ல் வெளிவந்தது. அற்புதமாய் அமைந்த அந்த பாடல்களை இங்கு கேளுங்கள்: http://play.raaga.com/malayalam/albu...songs-M0000075

    சுந்தர்ராஜன் பழைய இசை அமைப்பாளர் V குமார் அவர்களின் உதவியாளராக இருந்து பின்னர் ராஜா சாருடன் ஆயுள் முழுவதும் இருந்தவர். (KVM, MSV பாணியில் இல்லாமல், ஆரம்ப காலத்திலேயே ராஜா சார் வேறு மாதிரி இசை தந்ததற்கு V குமாரும் ஒரு காரணம் )

    ராஜா சாருக்கு எல்லாமுமாய் இருந்து, தனக்கென ஒரு முத்திரை இல்லாமல் சில வருடங்களுக்கு முன்னர் தான் மறைந்து போனார். மேக்கிங் ஆப் திருவாசகம் ஒளி நாடாவில் விஜி மனுவேல் உட்பட திருவாசகத்தில் வேலை செய்தோர் சிலர் பேசி இருக்கிறார்கள், அதில் சுந்தர்ராஜனுடைய பேச்சும் பதிவு செய்ய பட்டிருக்கிறது, முடிந்தால் கேட்டு பாருங்கள். youtube ல் என்னால் அதை கண்டு பிடிக்க முடியவில்லை.

    வெள்ளை வெட்டி சட்டை, வெத்தலை போட்டிருப்பார்.

    மிகவும் கெட்டிகாரர். பாடல் சொல்லி கொடுப்பார், ஜதி சொல்லுவார், கண்டுக்ட் செய்வார். கோரஸ் குரல்களுக்கு லீடர். ராஜா சாருக்கு மெமரி பேங்க். BGM செய்யும் போது, இவரிடம் தான் reference கேட்பாராம் ராஜா சார். பத்தாவது ரீலில் பேத்தொஸ் சீனுக்கு, மூணவது ரீலில் ரெண்டு நாளைக்கு முன்பு ஒரு ஜாலி டியூன் போட்டோமே, அது என்ன என்று ராஜா சார் சுந்தர்ராஜனிடம் கேட்க, சரியான பாய்ன்ட் எடுத்து தருவாராரம் இவர். இது போல் எத்தனயோ...

    இவரை பற்றி மணிவண்ணன் ஒரு முறை ஏதோ ஒரு சூப்பர் சிங்கர் ப்ரோக்ராமில் சொல்லி இருக்கிறார். எல்லோரும் ராஜா சார் கால்ஷீட்டுக்காக காத்திருக்க, இவர் சுந்தர்ராஜனிடம் போய், அண்ணே ஏற்கனவே பதிவு செய்து பயன்படுத்தாத பாடல் இருந்த குடுங்க என்று கேட்டு வாங்கி விடுவாராம்.

    அவருடைய குரல் நமக்கெல்லாம் பரிட்சயமானது தான். பாடல்களுக்கு முகவரி தேவை இல்லை.

    பாடல் 1:
    ஹே.. குய்யா குய்யா குய்யா தந்தேலா வல்லம்
    ஹே.. குய்யா குய்யா குய்யா தந்தேலா வல்லம்

    குய்யா எலோவாளி தந்தேலோ வாளி
    வலையில் தினமும் வந்து எலோ
    மீன்கள் மோதுதம்மா எலோ
    குய்யா குய்யா குய்யா குய்யா குய்யா குய்யா

    பாடல் 2:
    அப்படி இல்லப்பா.. தம்பி எவளோ அழகா பாடினான் பார்த்தியா?
    தமிழே நாளும் நீ பாடு..
    எங்க பாடு?
    அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே...
    எங்க பாடுங்க..


    இன்னும் நெறைய சொல்லலாம்... நாம் அனைவரும் பல முறை படித்த இந்த கட்டூரையே சுந்தரராஜனுக்கு சமர்ப்பணம்: http://www.geocities.ws/ilaiyaragam/rajaresearch6.htm

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •