Results 1 to 10 of 45

Thread: காலத்தின் கைகளில் தேங்கி நிற்காத இசை

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by thozhar View Post
    ராஜாவின் படைப்புத்திறன் 1991க்கு பிறகும் மங்கிவிடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவரது படைப்புகளுக்கு உள்ள மதிப்பு வர்த்தக ரீதியாக மங்கியது என்பது உண்மை. வர்த்தக ரீதியான மதிப்புக்கு மதிப்பில்லை என்று நீங்கள் வாதிட்டால் அதற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால் பின்பு எதற்குத்தான் மதிப்பு என்ற கேள்வி எழும். எனக்கு பிடித்ததுதான் மதிப்பானது என்று குதர்க்கம் பேசினால் அதோடு பேச்சுக்கே வேலையில்லை. ஏன் என்றால் உங்களுக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. இதனால் தான் பொதுவான ரசனை மேல் பாய்பவர்களை கண்டால் கடுப்பாகிறது. அப்படி என்னய்யா உங்கள் ரசனை மேலான ரசனை. யார் தரம் பிரிப்பது? எனக்கும் அனிருத் இசை பொதுவாக பிடிக்காது. ஆனால் அது பிடித்தவரை விட எனது ரசனை எந்த வகையில் மேலானது?

    நீங்கள் கூறிய சில படங்களிலேயே எடுத்துக் கொள்வோம். "சக்கரை தேவன்". கேப்டனின் மற்றுமொரு குப்பை படம். "குங்குமம் மஞ்சளுக்கு" பாடலை தவிர வேறு எதுவும் தேறாது. மகளிர் மட்டும், சேதுபதி ஐபிஎஸ், செவ்வந்தி, வியட்நாம் காலனி ஆகியவை மிகவும் சுமார் ரகம் தான்.

    ராஜகுமாரன் *"சித்தகத்தி பூக்களே" தேறும். மற்றவை சுமார். "புதுப்பட்டி பொன்னுதாயி" * "ஊரடங்கும் சாமத்திலே" பாடல் ஒன்று மட்டும்தான் தேறும். இது போல் தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்களில் பல*.
    ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்களே! அதுபோல.. உங்களோட ரசனையின் தரம் எனக்கு இதுபோன்ற சிலவற்றிலேயே தெரிந்து விட்டது. நீ யாருப்பா என்னோட ரசனையை அளவிடுவது என பதிலுக்கு லாவணி பாடுவிங்க.. ஆனால் உண்மை என்னவென்றால்..

    சக்கரத்தேவன் படத்தில் நல்ல வெள்ளிக்கிழமையில ( ராசய்யாவின் குரலில்), தண்ணீர் குடம் கொண்டு ( ஜானகி குரலில் ), பட்டத்து யானை (குழுவினர் குரல்களில்) என நீங்கள் சொல்கின்ற மஞ்சள் பூசும் பாடல் ஒன்றோடு நின்றுவிடாமல் பிரபலம். நல்ல ரசனை உள்ள மனிதர்கள் மேற்குறிப்பிட்ட பாடல்களையும் மற்ற ராஜா பாடல்களை எப்படி விரும்பி கேட்கிறார்களோ அதுபோலவே கேட்டு மகிழ்வார்கள். அதில் இன்னொரு பாடலும் நல்லாயிருக்கும். லவ்வு லவ்வு சரி.. சர்க்கரைத் தேவன் பாடல்கள் எல்லாமே நல்லாத்தான் இருக்குன்னு சொன்னா மயக்கம் வந்து கீழே விழுந்துடுவீங்க என்பதால்.. திருஷ்டி பொட்டாக அப்பாடலை சேர்க்கல..







    சேதுபதி ஐபிஎஸ் படத்திற்கு 'சாத்து நட சாத்து' ஒரு பாடலே போதும்.. பல நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கும் காவிய பாடல் அது.

    ராஜா எப்போதுமே படத்திற்கு, காட்சிக்குத் தேவையான இசைப் பாடல்களை, பின்னணி இசைகளை வழங்கிவிடுவார். இன்றுவரை.. ஆயிரம் தொட்டுவிட்டார். அவரது நெடியதொரு இசைப்பயணத்தில் ஆகச் சிறந்ததில் கடந்த ஐந்து வருடத்திற்குள்ளே வெளிவந்த படங்களும் அடங்கும் என்பதுதான் உண்மை. அப்படியிருக்க, படைப்புத் திறன் குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •