Results 1 to 10 of 45

Thread: காலத்தின் கைகளில் தேங்கி நிற்காத இசை

Threaded View

  1. #10
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by thozhar View Post
    ஒப்புக் கொள்கிறேன். "கைவீணையை ஏந்தும் கலைவாணி" பாடல் "வியட்னாம் காலனி" படத்தில் வந்தது என்பதை மறந்து விட்டேன். அற்புதமான பாடல்தான். "மார்கழி மாசம்" பாடல் நினைவுள்ளது. நல்ல பாடல்தான். ஆனால் இது போல் பல பாடல்கள் வந்து விட்டன. ராஜாவின் முத்திரை இந்த பாடலில் ஆழமாக இல்லை என்பது எனது கருத்து. என்னை பொறுத்தவரை ராஜாவின் 1991க்கு முந்தைய பாடல்களின் தரத்தில் இல்லை என்பது எனது கருத்து. இதனால் எனது ரசனை தரம் தாழ்ந்தது என்று நினைத்தால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

    ராஜாவின் படைப்புத்திறன் 1991க்கு பிறகு குறைந்தது என்ற கருத்தை நானும் தான் ஏற்கவில்லை என்பதை மறுபடி நினைவு கூறுகிறேன். ஆனால் நீங்கள் கூறிய மற்ற பாடல்கள், "சாத்து நட சாத்து" உட்பட, நினைவில் உள்ளனவே தவிர ராஜாவின் திறமையை பறை சாற்றும் பாடல்கள் என்று நான் கருதவில்லை. கோபால் அவர்களின் கருத்தில் நான் எடுத்துக் கொண்டது இதுதான். ராஜா யார் என்று பின் வரும் சந்ததியினருக்கு விரைவாக எடுத்துரைக்க வேண்டும் என்றால், 1991க்கு முந்தைய அவரது படைப்புகளே வெகுவாக எடுத்துக்காட்டப்படும்.
    மறுபடியும் மொதலேர்ந்தா? யாருங்க 91 என்பதை மைல்கல்லாக வச்சது? யாருங்கிறேன்?

    முந்தையப் பதிவுகளில் 92, 93, 94, 95 ஆண்டுகளில் வெளிவந்த படங்களை தேர்வு செய்துள்ளேன். அதிலிருந்து நீங்கள் எவ்வளவு கடினமான சல்லடைகளை வைத்து சலித்தாலும் நீங்கள் அடைக்க முற்படுகிற 91-க்கு முந்தைய பாடல்களின் வரிசையில் கண்டிப்பாக சேரும். ஒருவித முன்முடிவுகளோடு ராஜாவை அணுகினால் அவர்கள் இதுபோன்ற விவாதங்களில் பலவிதமான சப்பைக்கட்டுகளைத்தான் கடைசி வரைக்கும் நம்பியிருக்கணும். வேறு வழியில்லை.

    இதெல்லாம் ராஜா-ரகுமான் இசைக்காலங்களை ஓவர்லாப்பிங் இல்லாமல் வைத்துக்கொள்ளும் அணுகுமுறை. கடைத்தெடுத்த ஹிப்போகிரசித்தனம். 'தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து' ராஜா.

    அவரை எம்.எஸ்.வி, ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களோடு ஏணி வரிசையில் வைத்து நிறுவுவதும் ஒருவித பக்குவமில்லாமையே. ஏனென்றால் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்தின் இசைக்கு ஒட்டுமொத்த இந்திய சினிமாக்களிலிருந்து வேறெந்த இசையமைப்பாளரை ஒப்புமைக்காக கொண்டுவர முடியும்?

    மொதல்ல ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். இசையமைக்கும் போக்கில் 76 முதல் 80/81 வரை, 82 முதல் 89 வரை, 90-98 வரை, 99 முதல் இன்றுவரை என ராஜா பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார். மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் முன்ன பின்ன வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ராஜா தொடர்ந்து பின்னணி இசைக்கோர்ப்புகளில் முடிந்தவரை தான் முன்பு வந்த பாதையையே முழுவதுமாக மாற்றி மாற்றி பயணித்துக் கொண்டு இருக்கிறார். ஒருவர் ராஜாவின் 80s பாடல்கள் மட்டுமே புடிக்கும் என்றால் அவர்களின் கேட்கும் அனுபவம் தேங்கிவிட்டது என பொருள். ராஜாவின் 90களின், 2000களின் பாடல்கள் தொடர்ந்து மக்களால் கேட்கப்படுகிறது என்பதே எல்லாரும் பிரமிக்கும் வகையிலான மகத்தான சாதனை.
    Last edited by venkkiram; 30th July 2016 at 02:54 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •