-
20th March 2017, 02:20 AM
#11
Junior Member
Devoted Hubber
விளக்கத்திற்கு நன்றி ராஜசேகர்.
காப்புரிமையில் இருக்கும் பாடல்களை வைத்து துட்டு பார்ப்பவர்களுக்கு ஆப்பு வைப்பதில் தவறில்லை. ஆனால் பாலு பிரச்னையை திசை திருப்பி விட்டு விட்டார். முகநூல் பகுதியில் அவர் விளக்கவுரைக்கு இரையாகி ராஜா சாரின் பெயர் ரிப்பேர் ஆகி விட்டதென்னவோ உண்மை. .
பிரச்சனையின் காரணத்துக்கு கார்த்திக்ராஜாவை கை காட்டுகிறார்கள். இந்த காப்புரிமை தான் கார்த்திக்கின் வருமானம். பட வாய்ப்பில்லாமல் இருக்கும் கார்த்திக்ராஜா கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங்/கோஆர்டினேஷன் என்கிற ஒரு காரணம் காட்டி ராஜா சார் இசை அமைக்கும் படங்களில் எல்லாம் தனியாக கல்லா கட்டிவிடுவதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ராஜா சார் விழித்து கொள்ளவேண்டும். எத்தனையோ படங்களுக்கு சம்பளம் வாங்காமல் வேலை செய்ததாகவும், கொடுத்த கூலி ரெக்கார்டிங் செலவுக்கு கூட போதாமல் கை காசு போட்டு நீங்கள் முடித்து கொடுத்தீர்கள் என்று கேள்வி பட்டிருக்கிறோம். இப்போது எதற்கு இந்த கூத்து? உங்களுக்கு இது இழுக்கு அய்யா..
-
20th March 2017 02:20 AM
# ADS
Circuit advertisement
Bookmarks