மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்தபோதும் மனிதனுக்கு
ஒன்று ம்ட்டும் தெரியவில்லை ஹோ...

இனிய குரலில் குயில் போலே
இசையை அழகைப் பாடுகின்றான்
எருதுகள் போல் வண்டிகளை
இழுத்துக் கொண்டே ஓடுகின்றான்
வனத்தில் வாழும் பறவைகள் போல்
வானில் பறந்து திரிகின்றான்
மனிதனாக வாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ...

(மனிதன்)

கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை
சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்
குள்ளநரி போல தந்திரத்தால்
குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
மனிதனாக வாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ...

(மனிதன்)