Quote Originally Posted by joe
Thilak,
80s-kku munnala National award entha ladchanathil irunthathu enbatharkku ...let me reproduce something I read recently

எம்.ஜி.ஆருக்கு பாரத் பட்டம் வழங்கப்பட்ட சம்பவம் குறித்து மகத்தான சர்ச்சை கிளம்பியது. சிவாஜி நடித்து வெளியான புகழ்பெற்ற 'பா' வரிசை படங்களுக்கு மத்தியில் எம்.ஜி.ஆரின் 'ரிக்ஷாக்காரன்' படத்துக்காக அவ் விருது வழங்கப்பட்டது குறித்து எம்.ஜி.ஆருக்கே நிச்சயம் அதிர்ச்சி இருந்திருக்கக் கூடும். அந்த விருது எப்படி அவருக்குக் கிடைத்தது என்பது குறித்து அந்த விருது கமிட்டியில் பங்கு பெற்ற (பெயர் சொல்ல விரும்பாத) ஒருவர் சமீபத்தில் விளக்கம் அளித்தார். விதி வலியது என்று நம்புகிறவர்களுக்குச் மிகச் சிறந்த உதாரணமாக அமைந்துவிட்டது அந்த நிகழ்ச்சி.

நடந்தது இதுதான்:-

கமிட்டியில் இந்த ஆண்டு தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவரைச் சிபாரிசு செய்யச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். அந்த ஆண்டு பல சிறந்த படங்களைத் தந்த சிவாஜியின் பெயரைச் சொல்லத்தான் முனைந்தார் அந்த நபர். சற்றே பெயர் குழப்பமாக சிவாஜி என்று உச்சரிப்பதற்குப் பதிலாக ''எம்.ஜி.ஆருக்கு வழங்கலாம். ஏனென்றால் அவர்தான் இந்த ஆண்டு சிறந்த படங்களில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்'' என்று கூறிவிட்டு அமர்ந்திருக்கிறார் அந்த உறுப்பினர். உடன் இருந்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. ''யூ மீன் எம்.ஜி.ஆர்'' என்று கேட்டிருக்கிறார்கள். அப்போதுதான் சுதாரித்தார் அந்த கமிட்டி உறுப்பினர். இல்லை இல்லை நான் எம்.ஜி.ஆரைச் சொல்லவில்லை சிவாஜியைத்தான் சொல்ல நினைத்தேன். தவறுதலாக எம்.ஜி.ஆர் என்று சொல்லி விட்டேன் என்று கூறியிருக்கலாம் அவர். இந்த விஷயம் எம்.ஜி.ஆர். காதுகளுக்குப் போய் வீணாக அவருடைய விரோதத்தை எதற்காகச் சம்பாதிக்க வேண்டும் என்று ''ஆமாம் நான் எம்.ஜி.ஆரைத்தான் சொன்னேன்'' என்று கூறியிருக்கிறார். முதலிலேயே சிவாஜியின் பெயரைச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லிவிட்டு பிறகு மாற்றுவதற்குத் தயக்கமாகிவிட்டது என்கிறார் அவர்.
ஜோ,

நான் கேள்விப்பட்டது வேறு மாதிரியாக இருந்தது. (இது அரசியல் அல்ல, ஆகவே தயவு செய்து நீக்க வேண்டாம்).

அப்போது (1971) எம்ஜியார், கருணாநிதி எல்லோரும் ஒன்றாக இருந்த தி.மு.க.வில் இருந்தனர். அப்போது டில்லியை ஆண்ட இந்திரா காந்திக்கு தி.மு.க.வின் ஆதரவு பல வகைகளில் தேவைப்பட்டது. அப்படி ஆதரவை சாக்கு வைத்து இவர்கள் பல காரியங்களை சாதித்துக் கொண்டனர். அவற்றில் ஒன்றுதான் எம்ஜியாருக்கு கிடைத்த தேசிய விருது. (ஆனால் அப்போது சிவாஜியின் 'சவாலே சமாளி' படமும் தேர்வுக்கமிட்டிக்கு சென்றிருந்தது).

என்வே, கருணாநிதியின் சிபாரிசில், இந்திராகாந்தியின் தலையீட்டில் கிடைத்ததுதான் எம்ஜியாருக்கு தேசிய விருது.

(நல்ல வேளை, பிரான்ஸ் நாட்டு அதிபருக்கு கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோரின் ஆதரவு தேவைப்படவில்லை. இல்லாவிட்டால் 'செவாலியே' விருதும் கேலிக்கூத்தாக ஆகியிருக்கும்).