Page 54 of 178 FirstFirst ... 444525354555664104154 ... LastLast
Results 531 to 540 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #531
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    I think crazy has well captured the context, the song has greater meaning if the concept is understood well

    vera enna solla irukku

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #532
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like

    Re: ennai yaar endru(paalum pazhamum)

    பொழுது போகவில்லை. சும்மாவானும் இதே வரிகளை தமிழில் எழுதி, இக்கவிதை விமர்சனம் எழுதலாம் என்று முனைந்தேன்.

    இப்பாடலில் மறைபொருள் என்று எதுவும் இல்லை.


    இறந்த முதல் மனைவியை நினைத்து வாடும் கண்ணிழந்த கணவன். அவளோ, அவன் முதன் மனைவி. தன் அடையாளத்தை தொலைத்து, மூன்றாமவளாய் அவன் முன்னே ஆறுதல் சொல்லும் நிலை.


    _______

    ' செத்தவங்களையே நினைச்சுட்டு இருந்தா வாழ்க்கை என்னாவது, உங்கள் வாழ்கையை வாழ வேண்டாமா! ' என்றெல்லாம், அவள் அவனைத் தேற்றி, அவன் புதுவாழ்வை வளம் பெறச் செய்து, தான் வந்த வழி சென்று விடுவதே தன் கடமை என நினைக்கிறாள்


    ennai yaar endru enni enni nee paarkiraai
    ithu yaar paadum paadal endru nee ketkiraai
    naan avaL perai thinam paadum kuyil allava
    en paadal avaL thantha mozhi allava

    அட முட்டாளே! மனைவி இறந்த பின், வேறு பெண்ணை தேடும் சாமான்யனா நான்? எங்கள் உறவை அவ்வளவு சுளுவாக நீ எடைபோட்டு விட்டாயா? எங்கள் உறவின் ஆழம் தெரியாது, என்னைப் பற்றி ஏதுமே தெரியாது, நீ பேச வந்துவிட்டாயே, என்று

    "என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்"

    என்கிறான்.

    இன்னும் உனக்கு என்னைப் பற்றியும், எங்களைப் பற்றியும் தெரியவில்லையெனில், இப்பாடலைக் கேள். எங்கள் உறவு உனக்கு புரியும். இந்த பாடல் நான் பாடும் பாடல் என்றா நினைக்கிறாய்?

    அட முட்டாள் பெண்ணே! இப்பாடல் என் பாடல் அல்ல! இந்த பாடலைப் பாடுபவன் நானாக இருக்கலாம். ஆனால், இப்பாடலை, எனக்குத் தந்தவள் அவளல்லவா! நான் கருவி! அவள் இசை! அவள் இசையாய் என்னுள் அமர்ந்ததால், நான் அந்த இசையை கூவும் குயில். குயிலுக்கு பெருமையா? அதனுள் இருக்கும் இசைக்கு பெருமையா? இசை என்பது நாதம். வாத்தியத்திலும் வரும். இசை வருவதால் குயிலுக்கோ, குழலுக்கோ பெருமை. இசை என்பது வேறு அதை இயக்கும் கருவி என்பது வேறு.

    நான் கருவி. அவளல்லவோ இசையாய் என்னுள் இருக்கிறாள். அவள்ளல்லவோ என்னை மீட்டுகிறாள்.

    "இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்?"

    இது அவள் பாடும் பாடல்! எப்படி?

    நானே அவளைப் பாடிப் பாடி, என் பாட்டின் பொருள், உணர்வு அனைத்தும் அவளாய் ஆன பின், இப்பாடல் அவளுடையதல்லவா? இந்த பாடலும், இசையும், இதன் மொழியும் கூட அவள் தந்தது!

    "நான் அவள் பேயரை தினம் பாடும் குயிலல்லாவா!
    என் பாடல் அவள் தந்த மொழியல்லவா!"

    அப்பேற்பட்ட உறவு எங்கள் உறவு! இப்பொழுது புரிந்ததா, எங்களுக்குள் எப்படிப் பட்ட பிணைப்பு இருந்ததென்று?


    endrum silaiyaana un deivam pesathaiya
    sarugaana malar meendum malaraathaiya
    kanavaana kathai meendum thodarathaiya(2)
    kaatraana avaL vaazhvu thirumbaathaiya


    கண் மட்டுமா தெரியாமல் இருக்கிறாய்? உன் அறிவும் அல்லவோ மழுங்கிவிட்டது! அவள் சிலையாகிவிட்டாள்

    ஏன்? (இங்கு இவள், தன்னைப் பற்றி பேச வேண்டும். தன்னைப் பற்றியே ஒரு, மூன்றாம் மனுஷின் பார்வையில் பேச வேண்டும்)

    அவள் சிலையாகிவிட்டாள், ஏனெனில், அவளுக்கு சொந்தமான ஒரு பொருள் பறிபோய்விட்டதால், இனி அவள் வாழ்வில் பேசத் தான் என்ன இருக்கிறது? அவனைப் பொருத்தவரை அவள் இறந்து விட்டாள். அவளைப் பொருத்தவரை அவள் இருந்தும் இறந்த நிலை.

    அவள் சிலையாகி விட்ட நிலையில், எப்படி பேசுவாள்? எப்படி தன் நிலைமையை எடுத்துரைப்பாள். அவளும் அவள் உணர்வுகளும் சருகாகி விட்டதால், அது மீண்டும் மலரும் என்று எதிர்பார்ப்பது எப்படி சாத்தியம்.


    ஒரே வரிகளை, அவன் வேறு கோணத்தில் பார்ப்பதும், இவள் வேறு கோணத்தில் பாடுவதும் மிக கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

    என்னைப் பொருத்தவரை உன்னுடன் வாழ்ந்தது ஒரு கனவு.
    அது இனி தொடரும் வாய்ப்பில்லை. காற்றான அவள் வாழ்வு
    இனி மறுபடி உருபெருமா? உருவமற்ற நிலைக்கு தள்ளப்பட்ட பின், மீண்டும் அவளால் எப்படி உரு கொள்ளமுடியும்? அவள் இறந்தவள்! காற்றானவள்! அவள் வாழ்வு மீண்டும் உருபெரும் சாத்தியம் இல்லை.

    அவளின் ஆசைகள், கனவுகள், கணவனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தும் கற்பனைகளும் இங்கு காற்றாகிக் கனவாகி கிடக்க, அவளுக்கு இனி என்ன வாழ்வு!?


    enthan mana kovil silaiyaaga valarnthaalamma
    malarodu malaraaga malarnthaaLamma
    kanavennum therEri paranthaalamma(2)
    kaatrodu kaatraaga kalanthaaL amma
    என்ன அவ்வளவு எளிதாய் சொல்லிவிட்டாய்! அவள் மறைந்திருப்பது, இம்மணுலகிலிருந்து மட்டும் தானே? என் மன உலகிலோ அவளே ராணி! இன்றைக்கும் என்றைக்குமாக அல்லவோ ஆள்கிறாள்!

    அவள் என் மனக்கோவிலில் சிலையாகி அமர்ந்தபின், அவள் வளர்வதும் அழிவதும் என் வசம் இல்லையா? என் சிலை வளர்கிறது! ஆம் தினமும்! ஏன்? எப்படி? இது என் மனக்கோவில்.
    இங்கு நான் அவளை தினமும் சீராட்டி பாராட்டி வைத்திருப்பதால், அந்த சிலை, அழியாது என் மனக்கோவிலில் தழைத்து வளர்கிறாள். அப்படிப் பட்டவளின் நினைவு எப்படி மறையமுடியும்?

    அவள் நினைவுகள் மலர்வதால், அந்த நினைவு மலர்களில் அவள் தினமும் மலர்ந்து இருக்கிறாள். அப்படிப் பட்டவளை நீ சருகாகி விட்டாள் என்றா சொல்கிறாய்! முட்டாள் பெண்ணே!

    அவள் கனவு எனும் தேரில் ஏறி, (என்னுடன்) இல்லாத உலகமெல்லாம் சுற்றுகிறாள்! பறக்கிறாள்! அவளுடன் நானும் பறக்கிறேன்.

    அவள் காற்றோடு காற்றாய் எங்கும் பறந்து, பரவி, என் சுவாசமாகவும் கலந்து இருக்கிறாள்


    indru unakkaaga uyir vaazhum thunai illaiya
    avaL oLi veesum ezhil konda silai illaiya
    avaL vaazhvu nee thantha varam allava(2)
    anbodu avaLodu magizhvaaL ayya
    இப்போழுது உணர்ச்சி மிகுதியால் அவளால் ஒன்றும் பேசவும் முடியவில்லை. இனி தன்னைப் பற்றி (அதாவது அவனின் அவளைப் பற்றி) அதிகம் பேசினால், நினைவுகள் அதிகமாகி விடுமோ என்று கடைசி அஸ்திரத்தை பயன்படுத்துகிறாள்.

    ஒருவர் முடிந்து விட்டால் உலகம் என்ன நின்றா போகிறது?
    யாருக்காக யார் இருப்பது? யாருக்காக யார் இறப்பது? உலகில் சொந்தங்களுக்கும் அன்புக்கும் என்றேனும் பஞ்சமா வந்து விடும்?

    இவனுக்கோ இன்னொரு மனையாளே இருக்கிறாளே!
    அந்த துணையை நினைத்து வாழ்வது தானெ சரி!?


    கடந்த காலத்தின் இன்னலில் சிக்கி, நீ இன்னமும் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் வீணக்கிக்கொண்டிராதே. நீ இப்படியெல்லாம் இறந்தவளைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருக்க, உனக்காகவே இன்னொருத்தி உயிர் வாழ்கிறாளே! அவள் இருள் சூழ்ந்த உன் வாழ்வில் ஒளி வீச வந்தவளளல்லவா. அவள் வாழ்வே நீ மகிழ்ந்தளித்த வரமாய் அவள் நினைத்திருக்கிறாளே, அவளோடு அன்போடு, மகிழ்ச்சியாய் இருப்பது இனி உன் கடமை. இறந்த எவளைப் பற்றியோ நினைத்து, உன்னை நினைத்திருப்பவளுக்கு நீ துன்பம் கொடுக்கிறாயே இது உனக்கேன் புரியவில்லை. இருப்பதை இருப்பதன் அருமையை நினைத்து, அவளை மகிழ்விப்பதும் உன் தலையாய கடமையல்லவா. அவளையும் மகிழ்வித்து நீயும் மகிழ்வதே இனி இதற்கு மருந்து.

  4. #533
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    Anbe Sivam

  5. #534
    Senior Member Veteran Hubber mgb's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    4,146
    Post Thanks / Like
    romba azhaga capture panni irukkinga prabha

  6. #535
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    crazy, ganesh,



    Professor,

    unga version ethum illaiya

  7. #536
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    Professor,

    unga version ethum illaiya
    ennaiyA kekkareenga ?

  8. #537
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    pinnE

    oru mugathula rendu kannu irukka koodatha?
    oru college la rendu professor irukka koodatha?

    post pannunga madhu

  9. #538
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    madhu - the witty professor :P
    Anbe Sivam

  10. #539
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2008
    Posts
    291
    Post Thanks / Like


    இப்படி தினம் ஒரு பாடலுக்கு பொழிப்புரை வழங்கினால் ருஸித்து மகிழ்வோம்.

    நன்றி மற்றும் நன்றி மதிப்பிற்குரிய எம்ஜிபி மற்றும் க்ரேஸி அவர்களே!

    நன்றிகள் மேலும் நன்றிகள் மென்மேலும் நன்றிகள் "பொழிப்புரைச் செம்மல்" மதிப்பிற்குரிய ஷக்திப்ரப்ஹா அவர்களே!
    பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

  11. #540
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by disk.box


    "பொழிப்புரைச் செம்மல்" மதிப்பிற்குரிய ஷக்திப்ரப்ஹா
    :P

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •