இந்த நாவலை நான் படித்ததில்லை. ஆனா கூறியது போல், அஷோக் என்ற வாலிபன், சுயத்தின் தேடலில் ஈடுபடுகிறான். இளம் வயதில் ஆன்ம வெளிபாட்டை தாண்டிய வேதாந்த தேடல் பெற்றோருக்கு கவலையை தருகிறது. இக்குடும்பத்திலும், இவன் சந்திக்கும் நபர்கள் அவர்களை சேர்ந்தவர்கள் குடும்பத்திலும் நடக்கும் கதை மட்டுமே அல்ல இத்தொடர். அவர்கள் நடத்தும் சம்பாஷணையில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய சில அரிய கருத்துக்களை கதையின் ஊடே பேச்சின் ஊடே புகுத்தியிருக்கிறார்.

சென்றவாரமே விளக்கு ஏற்றுதலின் முக்கியத்துவம், விடியற்காலை கோலமிடுதல் என்பன பொன்ற சாஸ்திர விஷயங்களை ஆராய்ந்து அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்கள்.

இடையிடையே, தொடரைப்பற்றிய சில சந்தேகங்களை சோ விடமே ஒரு நபர் கேட்பது போலவும், அதற்கு சோவும் தன் சுய கருத்தை வெளியிடுவது போலவும் அமைத்திருப்பது, பொதுவாய் வெளிவரும் சராசரி தொடர் என்ற நினைப்பைத் தாண்டி வித்தியாசத்தை கொணர்கிறது.