Page 58 of 154 FirstFirst ... 848565758596068108 ... LastLast
Results 571 to 580 of 1540

Thread: IR News and Other Titbits Ver.2009

  1. #571
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    1,466
    Post Thanks / Like
    Once a great scholar said "The moment my mind starts lauding my own speech, I come to know I should end my speech"..

    Seems IR has started thinking that whatever that comes out of his mouth is music to peoples' ears

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #572
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    எது எப்படி இருந்தாலும், பத்திரிகைகளுக்கு அவல் கொடுத்த மட்டில் இது ஒரு +ve development தான்

  4. #573
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2007
    Posts
    250
    Post Thanks / Like
    Isaignani-yai pattri oru puthu kavithai

    http://peelamedu.blogspot.com

  5. #574
    Senior Member Regular Hubber itsmuls's Avatar
    Join Date
    Aug 2005
    Posts
    115
    Post Thanks / Like
    Illayaraja's family rules Raaga Top Ten

    http://www.indiaglitz.com/channels/t...cle/47359.html

  6. #575
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like
    Isai ellaigal kadanthathu engum nirainthathu

  7. #576
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    ''எல்லா சப்தங்களும் எனக்கு ஒன்றுதான்..!'' - இளையராஜா

    பிரசாத் ஸ்டூடியோவின் ஏ.ஸி. அறைக்குள் ரொம்பவும் அமைதி யாக இருந்தார் அந்த எளிய மனி தர். ஏகப்பட்ட திரையுலகப் பிர முகர்கள் பாராட்ட வந்திருந்தனர். ரொம்பவும் பரபரப்போடு இருந்த வர்கள், பாராட்ட வந்திருந்தவர் கள்தான்.

    ஆனால், அவரோ அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் 'இதெல் லாம் சர்வ சாதாரணம்' என்கிற மாதிரியான ஒரு நிலையிலிருந்தார், 'சிந்துபைரவி'யின் சிறந்த இசைக் காக அகில இந்திய அளவில் சிறந்த இசையமைப்பாளராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள அந்த மனிதர் - இளையராஜா.

    'சிந்துபைரவி'யின் இயக்குநர் கே.பாலசந்தரும், அகில இந்திய அளவில் சிறந்த பாடலாசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாடலா சிரியர் வைரமுத்துவும் ஒருசேர வாழ்த்த வந்தனர். மூன்றாவதாக வந்தவர், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாலசந்தரும் வைரமுத்துவும் மாலையிட்டுப் பாராட்ட, எம்.எஸ்.வி-யைக் குனிந்து வணங்கினார் இளையராஜா.

    அந்த அறைக்குள் இளைய ராஜாவின் குருநாதரின் வண்ணப் படம் பெரிய அளவில் இருந்தது. சுற்றிலும் மாலைகள், எலுமிச்சம் பழங்கள்... அறையெங்கும் ரோஜா இதழ்கள் இறைந்து கிடந்தன.

    சமீபத்தில் இளையராஜா இசை அமைத்த 'ஹவ் டு நேம் இட்?' என்கிற எல்.பி. ரிக்கார்டை 'எக்கோ' இசைத்தட்டு நிறுவனம் வெளியிட் டிருக்கிறது. ஆனால், இது கர்னாடக இசைப்பிரியர்களையோ, மேல் நாட்டு இசை ரசிகர்களையோ, இரண்டுமே இல்லாமல் இளைய ராஜாவின் ரசிகர்களையோ முழுமை யாகத் திருப்திப்படுத்துமா என்கிற சந்தேகத்தைக் கேட்டபோது...

    ''இந்த 'ஹவ் டு நேம் இட்?' இசைத்தட்டில் அமைந்துள்ளவை ஒன்பது தனித்தனி இசைப்பகுதிகள். இவை ஒவ்வொன்றும் இசை உலகத்துக்கு இசைக்கலைஞன் ஒருவன் எழுப்பும் கேள்விகள்!

    என்னுடைய தீர்மானம் எல்லாம் இசை என்பது ஒன்றுதான். அதைக் கர்னாடகம் என்றே, மேற்கத்திய இசை என்றோ, ஜாஸ் என்றோ, கிராமியம் என்றோ, டப்பாங்குத்து என்றோ தரம் பிரித்துச் சொல்வது சரியில்லை.

    ஓர் ஓவியன் எத்தனையோ வண் ணங்களைக் கலந்துதான் ஓர் ஓவியத் தைத் தீட்ட(வேண்டும்)முடியும். எந்த ஓவியனும் ஏழு வண்ணங்களில் சிவப்பு வண்ணத்தை மட்டும் உயர்ந் தது என்று சொல்வதுமில்லை; வாதி டுவதும் இல்லை. ஆனால், நாமோ நமது கர்னாடகம் மட்டுமே உயர்ந்தது என்றும், இந்துஸ்தானிதான் சிறந்தது என்றும் எண்ணிக்கொண்டு வித்தி யாசங்களை வளர்த்து, பெரிய வெளி நோக்கை விட்டுவிட்டோம். அதனால் இசைக்கு எந்தத் தாழ்வும் இல்லை; உயர்வும் இல்லை. ஒன்றை உயர்ந்தது என்று சொல்வதாலேயே மட்டும், சொல்லப்படுகின்ற பொருள் உயர்ந்ததாக ஆகிவிடப் போவதில்லை. சொல்லுகின்றவன் கீழே இருக்கிறான் என்பதைத்தான் அது உணர்த்து கிறது.

    என்னைப் பொறுத்தவரையில், எல்லாமே சப்தங்கள்தான். எல்லா சப்தங்களும் எனக்கு ஒன்றுதான். இதற்கு நான் எப்படிப் பெயர் சூட்டுவது?

    இதில் 'ஸ்டடி ஃபார் வயலின்' என்கிற பகுதி வருகிறது. வெஸ்டர்ன் மியூஸிக்கோடு வயலின் சிங்க்ரனைஸ் ஆகி இழைந்து, பரந்து பரவிப் படருகிற அபூர்வமான 'பிட்' இது. பிரபலமான வயலின் வித்வான்களுக்கே இது ஒரு சவால்!

    இந்த 'ஹவ் டு நேம் இட்?' - அணை கட்டி முடித்த பிற்பாடு, இந்த இடத்தில் கட்டியிருக்கலாம், இது ஓட்டை என்று சொல் வது மாதிரியான விமர்சனத் துக்கோ, ஆராய்ச்சிக்கோ அல்ல! கேட்பவர்கள் உள் ளத்தில் அது எந்த மாதிரியான உணர்வை உண்டு பண்ணுகிறதோ, அந்த உணர்வுதான் இந்த இசை யின் மூலமாக நான் கொண்டு வர முயற்சித்திருப்பது'' என்கிறார் இளையராஜா.

    தென்னகத்திலேயே... ஏன், இந்தி யாவிலேயே கம்ப்யூட்டர் கருவியின் மூலம் ரிக்கார்டிங் செய்து வருகிறார் இளையராஜா.

    எல்லாவிதமான இசைக்கருவிகளின் இசையையும் ஒலிக்கச் செய்து, ஒரு பாடலையே ரிக்கார்டிங் செய்துவிடும் அளவுக்கு மிக நவீனமான கம்ப்யூட்டர் இது.

    பேச்சு 'சிந்துபைரவி' இசை பற்றித் திரும்புகிறது.

    ''பரிசுகளும் பாராட்டுகளும் என்னைப் பாதிப்பதில்லை. பரிசு, விருது கிடைக்கும்னு எதிர்பார்த்து சிந்துபைரவிக்கு இசையமைக்கலே. என்றாலும், இந்த விருதின் மூலம் இந்திய அரசாங்கம் சரியான ஒரு படத்தின் இசைக்குப் பரிசு கொடுத் திருக்கிறது.

    ஏன் தெரியுமா... இதுவரையிலும் எத்தனையோ சாகித்யகர்த்தாக்கள் இந்த மண்ணிலே சாகித்யங்கள் செய்திருக்கிறார்கள். 'ஆரோகண மும், அவரோகணமும் இணைந்தால் தான் சாகித்யமே' என்கிற கருத்தை, சிந்துபைரவியில் வரும் ஆரோகணப் பாடலான 'கலைவாணியே' என்ற பாடல் மாற்றியிருக்கிறது.

    எல்லாமே எனது செயல் அல்ல. இளையராஜா என்பவன் ஒரு கருவி.

    எனக்குள் இருந்துகொண்டு என்னை எவரோ இயக்கிக் கொண்டிருக்கிறார்களே... அவர்களது செயல். இது அவர்களது வெற்றி. அவ்வளவுதான்..!''

  8. #577
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    The below link says that IR is most likely to compose for a new movie named "Nee indri naan illai". This movie is done by the same team (including screenplay by Kalaignar) as "Uliyin Osai". The unbelievable part is that it says it will have lyrics by Vairamuthu and Pa.Vijay.

    I doubt if IR will accept it. Lets see.

    http://malayalam.galatta.com/enterta...lai_25897.html

    thanks,

    Krishnan

  9. #578
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    The below link says, music is by Deva.

    http://www.newstodaynet.com/newsinde...id=20&id=17311

    thanks,

    Krishnan

  10. #579
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    I pray for Deva

  11. #580
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    1,466
    Post Thanks / Like
    I pray for IR !
    Oh God ! they should NOT be successful in convincing IR..please !

Similar Threads

  1. Maestro ilaiyaraaja news & titbits
    By krish244 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4001
    Last Post: 13th April 2014, 08:42 PM
  2. Background Scores for Motion Pictures : News,Titbits,Reviews
    By Hulkster in forum World Music & Movies
    Replies: 25
    Last Post: 24th July 2012, 11:56 AM
  3. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  4. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •