Page 359 of 401 FirstFirst ... 259309349357358359360361369 ... LastLast
Results 3,581 to 3,590 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

  1. #3581
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Location
    US
    Posts
    70
    Post Thanks / Like
    From our perspective, Mani, Rajni, Kamal and Shankar may be big names - but if you are IR - from his perspective - he has provided Rajni with his first songs in Bhuvan Oru Kelvikuri and Bhairavi to hits in Dharma Yuddham, Priya, Johnny and multitude of films. We know the story with Mani - He did Mani's first movie in Kannada and then recommended him to other tamil producers - From his perspective, I think he rightly feels he was established and sucessful independent of these guys and do not need their films. That too me is supreme confidence in his uinderstanding and the mastery of music. I admire that personality

    Quote Originally Posted by thumburu View Post
    Well said Kr sir. Out of my insatiable greed that IR should work with top berth folks in the industry like Mani, Shankar. Rajini, Kamal , etal.. and there by get some very great stuff from IR, I used to feel exasperated due to IR's lack of diplomacy. I tjink Venkikram has similar thoughts too.
    But now a days, I have come to terms with the moods of the genius.
    I realized geniuses can be quirky and need not conform to these so called hypocritic social niceties , which the industry is so full of.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3582
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2007
    Posts
    250
    Post Thanks / Like
    Found some songs under Nilachoru title..Not sure about its authenticity. can anybody confirm?

    http://vipjatt.co/album/10126/Nila_C...arious.html%22

  4. #3583
    Senior Member Regular Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    117
    Post Thanks / Like
    Quote Originally Posted by Fliflo View Post
    Found some songs under Nilachoru title..Not sure about its authenticity. can anybody confirm?

    http://vipjatt.co/album/10126/Nila_C...arious.html%22
    looks unlikely.. the added date is 27/06/2011

  5. #3584
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2007
    Posts
    250
    Post Thanks / Like
    But look below, they claim to have put related videos. The date is definitely fishy!

  6. #3585
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by Fliflo View Post
    But look below, they claim to have put related videos. The date is definitely fishy!

    No way ya, I am surprised that you are even considering this. These songs looks like some old dubbed ones from telugu; the sounds and the singers don't say it belongs to Raja sir's 2013 style. Don't rush.

  7. #3586
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    இசைக்கு தொடர்பில்லை என்றாலும், குமுதத்தில் கேட்ட கேள்விக்கு ராஜா சார், ராஜராஜ சோழனை பற்றி தவறான தகவலை சொல்லி விட்டார்.

    குமுதம் கேள்வி: சித்தர் கருவூரார் பற்றி சில வரிகள் சொல்லுங்கள்.

    http://t.co/kGdy0k74
    (answer page 1)

    http://t.co/dCH21JyO (answer page 2)


    அவர் பதிலுக்கு சரியான விளக்கம் கீழே.
    http://ponniyinselvan.in/groups/ponn...ja-in-kumudam/



    மன்னன் ராஜராஜ சோழன் இயற்க்கையாகே மரணத்தை தழுவினான், தற்கொலை செய்து கொள்ளவில்லை. ராஜா சார்,அவர் படித்ததை சொல்லி இருந்தாலும், இந்த தகவல் உண்மை இல்லை, என்னை போன்ற ராஜராஜ சோழனின் அபிமானிகள், வரலாற்று உண்மைக்கு புறம்பாக இந்த தகவலை எடுத்துகொள்ள கூடாது.

  8. #3587
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Sorry Guys.. can't help share this love story from this week's Anandha Vikatan. Can't share the link as the site is password protected. Many of us could be Jency or Vinodh from this story....


    இளையராஜா


    நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...
    ளையராஜாவின் இசை என்பது, வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டும் அல்ல; அது தமிழர்களுடைய வாழ்க்கையின் ஒரு மகத்தான பகுதி!
    குரல் தழுதழுக்க, என் முன்னாள் காதலியின் கடிதத்தைப் படித்து முடித்த என் மனைவி நந்தினி, ''யாரு இந்த ஜெஸ்ஸி?' என்றாள். அப்போது அவளின் விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர், அடுத்து நான் சொல்லப்போகும் வார்த்தைகளைக் கேட்டு, கன்னத்தில் வழிவதற் காகக் காத்திருந்தது. நான் குரலில் எவ்வித உணர்ச்சியும் இன்றி, ''இந்த லெட்டர் உனக்கு எப்படிக் கிடைச்சது?' என்றேன்.
    ''உங்களோட ஒரு பழைய புத்தகத்துல இருந்துச்சு' என்ற நந்தினி, படுக்கை அறையில் இருந்து குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்க... வேகமாக உள்ளே சென்றாள்.
    நான் பால்கனிக்குச் சென்று ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு வெளியே பார்த்தேன். டெல்லியின் ஜனவரி இரவுக் குளிருக்கும் மனதில் பரவியிருந்த மெல்லிய சோகத்துக்கும் சிகரெட் புகை இதமாக இருந்தது. புகையை இழுத்து வெளியே விட்டபடி தூரத்தில் தெரிந்த துக்ளகாபாத் கோட்டையைப் பார்த்தேன். மெயின் ரோட்டில் விளக்குகள் மின்னியபடி வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. ஜெஸ்ஸி யின் கண்களும் இப்படித்தான்... கண்ணுக்குள் யாரோ நட்சத்திரங்களை ஒளித்துவைத்தது போல் மின்னிக்கொண்டே இருக்கும்.
    ஜெஸ்ஸி... சென்னையில் நான் புராஜெக்ட் இன்ஜினீயராகப் பணியாற்றிய கம்பெனியின் ஹெச்.ஆர்-ல் பணிபுரிந்தவள். இளையராஜாவில் ஆரம்பித்து, இளையராஜாவில் முடிந்த காதல் அது.
    ''ரொம்ப ரேர் இளையராஜா பாட்டெல்லாம் வெச்சிருக்கீங்க. ப்ளுடூத்ல அனுப்புறீங்களா வினோத்?'
    ''இளையராஜா புரொகிராமுக்கு ரெண்டு டிக்கெட் வாங்கியிருக்கேன்... வர்றீங்களா வினோத்?'
    '' 'மயங்கினேன்... சொல்லத் தயங்கினேன்...' பாட்டைக் கேக்குறப்ப எல்லாம் உங்களைத்தான் நினைச்சுக்கிறேன் ஜெஸ்ஸி.'
    ''நமக்குப் பையன் பிறந்தா இளையராஜான்னு பேர் வைக்கணும் வினோ.'
    ''இளையராஜாவின் உன்னதமான சங்கீதத்தில் நம் காதல் ரகசியமாக வாழும்.'
    காலம் நம்மிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு, இளையராஜாவை மட்டும் பிரிக்க முடியாமல் தோற்றுக்கொண்டேயிருக்கிறது.
    குழந்தையைத் தூங்கவைத்துவிட்டு வந்த நந்தினி, ''சொல்லுங்க... யாரு அந்த ஜெஸ்ஸி?' என்றாள்.
    எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. நந்தினி, அதிகம் வெளியுலகு தெரியாமல் வளர்ந்த ஒரு கிராமத்து வாத்தியார் வீட்டுப் பெண். என்னைத் திருமணம் செய்து கொண்ட பிறகுதான் செய்தித்தாளே படிக்க ஆரம்பித்தாள். என் மீது மிகவும் பொசஸிவ்வாக இருப்பாள். அபார்ட்மென்ட்டில் பனியனுடன் வெளியே சென்று நின்றால், ஓடிவந்து என் தோளில் துண்டைப் போர்த்திவிட்டு, ''ஏன் உடம்பைக் காமிச்சுக்கிட்டு நிக்கிறீங்க?' என்பாள்.
    ''ஆமாம்... பெரிய சரத்குமார் பாடி...'
    என்பேன் நான். அப்படிப்பட்டவளிடம் பேச்சும், சிரிப்பும், கனவுகளும், கவிதைகளுமாக என் வாழ்வில் ஒரு பெண் இருந்தாள் என்பதை எப்படிச் சொல்ல?
    ''சொல்றேன். பதட்டப்படாமக் கேளு.ஜெஸ்ஸி... சென்னைல என்கூட வேலை பார்த்த பொண்ணு. அவ கிறிஸ்டியன். ரெண்டு பேர் வீட்லயும் ஒப்புக்கலைனு பிரிஞ்சுட்டோம்.'
    ''ரெண்டு பேரும் எத்தனை வருஷம் லவ் பண்ணீங்க?'
    ''மூணு வருஷம்.'
    ''மூணு வருஷம் ஒருத்திய லவ் பண்ணி யிருக்கீங்க. அவளைக் கல்யாணம் பண்ணிக் காம, என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?'
    'ஒருவரைக் காதலித்துவிட்டு, இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள சாபம் விதிக்கப்பட்ட தேசம் இது நந்தினி’ என்று மனசுக்குள் நான் சொல்லிக்கொண்டிருந்தபோது, ''இப்பவும் அவளை நினைச்சுப்பீங்களா?' என்றாள் நந்தினி.
    ''எங்க ஊரு அரச மரத்தடில, எங்கூட உக்காந்து ராட்டினம் சுத்தின குமரேசனையே நான் இன்னும் மறக்கல நந்தினி. மனுஷன்னா, அவன் வாழ்க்கைல கடந்துவந்த எல்லோருடைய நினைவும் இருக்கத்தானே செய்யும்' என்று நான் கூறியபோது என் மொபைல் சிணுங்கியது.
    'மெட்டி ஒலி காற்றோடு...’ என்று ரிங்டோன் ஒலிக்க... நான் மொபைலைக் கட் செய்தேன்.
    ''இது இளையராஜா பாட்டுதானே?' என்றாள் நந்தினி.
    ''ஆமாம்.'
    ''என் நினைவில்லாம இளையராஜாவோட ஒரு பாட்டைக் கூட உங்களால கேக்க முடியாதுன்னு எழுதியிருந்தாளே... ஒவ்வொரு தடவை இளையராஜா பாட்டு கேக்குறப்பவும் அவள நினைச்சுப்பீங்களா?' என்று நந்தினி கேட்டபோது, அவள் குரல் தழுதழுத்தது.
    நான் நந்தினியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், ''நந்தினி... உனக்குக் கஷ்டமாத்தான் இருக்கும். எனக்குப் புரியுது. என்ன பண்றது? நான் ஜெஸ்ஸியைக் காதலிச்சது, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது... எதையும் இப்ப மாத்த முடியாது. ஆனா, என்னோட காதல் தோல்வி நம்ம வாழ்க்கையை எந்த விதத்துலயும் பாதிக்கலை. உன்கூட நல்லபடியா சந்தோஷமாத் தானே இருக்கேன்.'
    ''அதெல்லாம் சரி... ஆனா, எனக்கு முன்னாடி ஒரு பொண்ணு, முழுசா மூணு வருஷம் உங்க வாழ்க்கைல இருந்திருக்காளே. அதை எப்படிங்க தாங்கிக்கிறது?' என்ற நந்தினி அழ ஆரம்பித்தாள். நான் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல், அழுது மனம் ஆறட்டும் என்று விட்டுவிட்டேன்.
    றுநாள் இரவு. அருகில் நந்தினி அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள். குனிந்து அவள் நெற் றியில் அன்புடன் முத்தமிட்டேன். நந்தினியின் அருகில் படுத்திருந்த குழந்தையின் கையில் நந்தினியின் புடைவை நுனி. நான் புடைவையின் நுனியை எடுக்க முயற்சித்தேன். குழந்தை சிணுங்க... விட்டுவிட்டேன். தன் புடைவை நுனியைப் பிடித்துக்கொண்டு தூங்க நந்தினி குழந்தைக்குப் பழக்கப்படுத்தியிருந்தாள்.
    எனக்குப் பாட்டு கேட்க வேண்டும்போலத் தோன்றியது. எழுந்து பால்கனிக்குச் சென்றேன். மொபைலில் ''வானுயர்ந்த சோலையிலே...' பாடலை ஒலிக்கவிட்டு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டேன். பாடலில் மெள்ள மெள்ளக் கரைய ஆரம்பித்தேன்.
    'தேனாகப் பேசியதும்
    சிரித்து விளையாடியதும்...
    வீணாகப் போகுமென்று
    யாரேனும் நினைக்கவில்லை...’

    என்ற வரிகளைக் கேட்டவுடன் ஜெஸ்ஸியின் நினைவில் இருந்த எனக்குக் கண்கள் கலங்கின. அப்போது ''என்ன... அவ நினைப்பா?' என்று பின்னால் இருந்து நந்தினியின் குரல் கேட்க... அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பினேன்.
    நந்தினியின் கண்களில் கோபம் மின்ன, ''நான் வந்து நின்னதுகூடத் தெரியாம பாட்டு கேட்டுட்டு இருக்கீங்க. அவ நினைப்புல தான் தினம் வீட்டுக்கு வந்தவுடனே இளைய ராஜா பாட்டு கேக்குறீங்களா?'
    ''இல்லம்மா... சாதாரணமாதான் கேக்குறேன்.'
    ''சும்மா சொல்லாதீங்க. இப்ப இந்தப் பாட்டுல, 'தேனாகப் பேசியதும், சிரித்து விளையாடி யதும், வீணாகப் போகுமென்று’னு கேட்டப்ப அவ நினைப்பு வரலைனு சொல்லுங்க பாப்போம்?'
    மற்ற விஷயங்களில் சற்று விவரம் இல்லாத பெண்கள்கூட, கணவனின் பெண் நட்பு சார்ந்த விவகாரங்களில் மட்டும் மிகவும் நுணுக்கமான புத்திசாலிகளாகிவிடுகிறார்கள். உண்மையைச் சொன்னால் மேலும் பிரச்னை என்பதால், ''அதெல்லாம் இல்ல நந்தினி... நீயாவே நினைச்சுக்கிற?' என்றதும், வேகமாக உள்ளே சென்ற நந்தினி, தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள். நான் சற்றும் எதிர்பாராதவிதமாக என் முன் குழந்தையை நீட்டி, ''நம்ம பொண்ணு மேல சத்தியம் பண்ணிச் சொல்லுங்க. அந்தப் பாட்டக் கேக்குறப்ப, அவ நினைப்பு வரலைனு சொல்லுங்க பாப்போம்' என்று கூற... நான் அதிர்ச்சியுடன் நந்தினியை நோக்கினேன். எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும், பெற்ற குழந்தை மீது பொய் சத்தியம் பண்ணச் சங்கடமாக இருந்தது. குழந்தை தூக்கம் கலைந்து அழ ஆரம் பித்தது. நான் வேகமாகக் குழந்தையை வாங்கி என் தோளில் சாய்த்து இறுக்கமாக அணைத்தபடி, ''ஆமாம் நந்தினி... அந்தப் பாட்டக் கேட்டப்ப ஜெஸ்ஸியத்தான் நினைச்சுட்டிருந்தேன்' என்றேன்.
    சட்டென்று கண் கலங்கிய நந்தினி, ''அவள நினைச்சுட்டு இருக்கிறதுக்கு என்னை ஏங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? பொண்டாட்டி, பிள்ளையத் தூங்கவெச்சிட்டு எவளையோ நினைச்சுட்டு பாட்டு கேக்குறேன்னு சொல்றீங்களே... என் மனசு என்ன பாடுபடும்னு யோசிச்சீங்களா?' என்றாள்.
    ''எனக்குப் புரியுது நந்தினி... என்னை இப்ப என்ன செய்யச் சொல்ற?'
    ''நீங்க இனிமே அவள நினைக்கக் கூடாது.'
    ''சரி...'
    ''ஆனா, இளையராஜா பாட்டு கேக்குறப்பல்லாம் உங்களுக்கு அவ நினைப்பு வரும்ல?' என்று நந்தினி கேட்க... நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
    ''சொல்லுங்க... வரும்ல?'
    ''வரலாம்.'
    ''அப்படின்னா, இனிமே இளையராஜா பாட்டக் கேக்காதீங்க' என்றவுடன் எனக்கு யாரோ என் கழுத்தைப் பிடித்து நெரிப்பதுபோல் இருந்தது. நான் பிறந்ததிலிருந்து என்னைத் தொடரும் பாடல்கள் அவை. நான் குழந்தையாக இருந்தபோது, 'கண்ணே... கலைமானே...’ பாடலைப் பாடித்தான் என்னைத் தூங்கவைத்ததாக அம்மா சொல்லியிருக்கிறாள். பள்ளியில், 'ஆடி மாசம் காத்தடிக்க...’ பாடலுக்கு நடனம் ஆடி முதல் பரிசு வாங்கியிருக்கிறேன். ஒரு மழைக்கால மாலையில் 'புத்தம் புது பூ பூத்ததோ...’ பாடல் கேட்டு முடித்த பிறகுதான் ஜெஸ்ஸி என் தோளில் சாய்ந்து தன் காதலைச் சொன்னாள். என்னிடம் இளையராஜாவின் பாடல்களைக் கேட்காதே என்று சொல்வது, என் இறந்த காலத்தை அழிக்கச் சொல்வதுபோல். ஒரு மனிதனின் இறந்த காலத்தை எப்படி நந்தினி அழிக்க முடியும்?
    ஆனாலும், நந்தினியின் துயரத்தைப் புரிந்து கொண்டு, கொஞ்சம் நாள் சென்றால் சரியாகி விடும் என்ற நம்பிக்கையுடன், ''சரி... இனிமே கேட்கல!'' என்றேன்.
    தன் பிறகு ஒரு வாரம் வரையிலும் நான் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கவே இல்லை. அதற்கு மேல் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு புதன் கிழமை இரவு, நந்தினியும் குழந்தையும் தூங்கிய பிறகு கட்டில் ஆடாமல், நந்தினி மேல் என் கை கால் படாமல் கவனமாக இறங்கினேன். அன்றைக்கு பால்கனி யில் பாடல் கேட்டுத்தான் மாட்டிக்கொண் டோமே என்று ஃப்ளாட் கதவைத் திறந்து கொண்டு மொபைலுடன் மொட்டைமாடிக்கு வந்தேன். 'கடவுளே... ஒரு பாடல் கேட்க இவ் வளவு திருட்டுத்தனமா?’ என்று மனம் துக்கத்தில் கசிந்தது.
    இருட்டில் மொபைலில் ஆவலுடன் பாடல் களைத் தேடி, 'என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்... ஏன் கேட்கிறது?’ பாடலைக் கேட்க ஆரம்பித்தேன். பாடல் ஆரம்பித்து பல்லவியைக் கூடத் தாண்டவில்லை. 'ணங்’கென்று யாரோ முதுகில் குத்த... பயந்து திரும்பினேன். நந்தினி என்னை ஆவேசத்துடன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். நான் கலக்கத் துடன், ''நந்தினி...' என்று ஆரம்பிக்க... நந்தினி என்னைப் பேச விடாமல், ''அன்னைக்கி எங்கிட்ட இனிமே இளையராஜா பாட்டக் கேக்க மாட்டேன்னு சொன்னீங்கள்ல?' என்று சத்தமாகக் கேட்டபடி என் நெஞ்சில் கைவைத்துத் தள்ளினாள்.
    லேசாகத் தடுமாறிய நான் சமாளித்து நின்றுகொண்டு, ''ஏன் நந்தினி சின்னப் புள்ள மாதிரி பிடிவாதம் பண்ற? வெறும் பாட்டுதானே நந்தினி...' என்றேன்.
    ''உண்மையச் சொல்லுங்க... உங்களுக்கு அது வெறும் பாட்டுதானா? இளையராஜா பாட்டக் கேக்குறப்பல்லாம் அவ நினைப்பு உங்களுக்கு வர்றதில்ல?'
    ''சும்மா பாட்டு கேக்குறதால எதுவும் நடந்து டாது நந்தினி. அவ சென்னைல இருக்கா. நான் டெல்லில இருக்கேன். தேவையில்லாம நீ பயப் படற. பாட்டு கேக்குறது வேற. அவள நினைச்சுக் கிறது வேற.'
    ''உங்களுக்கு ரெண்டும் ஒண்ணுதாங்க' என்று என் அருகில் வந்த நந்தினி கண்களில் உக்கிரத் துடன், ''இனிமே இளையராஜா பாட்டு கேக்க மாட்டேன்னு சொல்லுங்க' என்றாள். நான் மௌனமாக நிற்க... ''கேக்க மாட்டேன்னு சொல்லுங்க... சொல்லுங்க... சொல்லுங்க' என்று மீண்டும் மீண்டும் ஆவேசத்துடன் கத்திய நந்தினி, என் சட்டைக் காலரைப் பிடித்து வெறி பிடித்தவள்போல் உலுக்கினாள்.
    ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த நான், ''பைத்தியக்கார நாயே... ஏண்டி இப்படி என் உயிர எடுக்குற?' என்றபடி ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தேன். சட்டென்று அமைதியாகி, அதிர்ச்சியுடன் என்னை நோக்கிய நந்தினியின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. சில விநாடிகள் என் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நந்தினி மேற்கொண்டு ஒன்றும் பேசாமல், இறங்கிச் சென்றாள். நான் வீட்டுக்குச் செல்லப் பிடிக்காமல் மொட்டை மாடியிலேயே படுத்துக்கொண்டேன்.
    எப்போது கண் அசந்தேன் என்று தெரியவில்லை. சட்டென்று விழித்தபோது விடிந்திருந்தது. கீழே இறங்கினேன். வீட்டினுள் நுழைந்தபோது வீடு அமைதியாக இருந்தது.
    ''நந்தினி...' என்றபடி படுக்கை அறையில் பார்த்தேன். நந்தினி அங்கு இல்லை. குழந்தையையும் காணவில்லை. சமையல் அறையிலும் நந்தினியைக் காணாமல், ஃப்ளாட் வாசலை நெருங்கியபோதுதான் கவனித்தேன். செருப்பு ஸ்டாண்டில் அவளுடைய செருப்பு இல்லை. சற்றே திகிலுடன் அவளுடைய பர்ஸையும் மொபைலையும் தேட... இரண்டும் கிடைக்கவில்லை. பதற்றத்துடன் என் மொபைலை எடுத்து அவள் மொபைலுக்கு அடிக்க சுவிட்ச் ஆஃப். வேகமாக பேன்ட், சட்டையை மாட்டிக்கொண்டு பைக் சாவியுடன் படி இறங்கினேன்.
    வாட்ச்மேனிடம் விசாரித்தேன். ''சுப பாஞ்ச் பஜே, பச்சி கி சாத் மதுரா ரோட் கி தரஃப் ஜா ரஹி தி' என்றான். கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன். ஆறரை. ஐந்து மணிக்கே குழந்தையோடு மதுரா ரோடு பக்கம் சென்றிருக்கிறாள். ஒருவேளை கோபித்துக்கொண்டு தமிழ்நாட்டுக்குக் கிளம்பியிருப்பாளோ? ஊருக்குப் போக வேண்டும் என்றாலும், மதியம் மூன்றரைக்குத்தான் ரயில். எனவே, அருகில்தான் எங்காவது சென்றிருக்க வேண்டும் என்ற முடிவோடு மதுரா மெயின் ரோடு, ஆனந்த்மாய் ரோடு, அர்பிந்தோ மார்க் ரோடு என்று அனைத்து வீதிகளையும் சுற்றிச் சுற்றி வந்தேன். அடுத்து எங்கு சென்று பார்ப்பது என்று புரியாமல் ஸாகர் ரத்னா ஹோட்டல் வாசலில் தவிப்புடன் நின்றுகொண்டிருந்தேன். என் துணை இல்லாமல் துக்ளகாபாத்துக்கு வெளியே நந்தினி சென்றது கிடையாது. இந்தியும் அவளுக்குத் தெரியாது. கையில் ஆறு மாதக் குழந்தையுடன், மொழி புரியா ஊரில் எங்கு சென்றிருப்பாள்?
    நேரம் ஆக ஆக... எனக்குப் பயம் அதிகரித்தது. வாட்ச்சைப் பார்த்தேன். மணி எட்டு. வாட்ச்மேனை மொபைலில் அழைத்து விசாரித்தேன். அவன் 'நந்தினி இன்னும் வரவில்லை’ என்றான். சட்டென்று ஒருவேளை நந்தினி ஏதேனும் செய்துகொண்டிருப்பாளா என்று தோன்றியவுடனேயே வயிறு கலங்கியது. மேலும் யோசிக்கவும் நடக்கவும் சக்தியற்று தெருவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
    'கடவுளே... எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?’ என்று மனதுக்குள் புலம்பியபோது என்னை அறியாமலேயே என் கண்களிலிருந்து நீர் வழிந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு, மொபைலை எடுத்து மீண்டும் ஒரு முறை நந்தினியின் போனுக்கு அடித்துப் பார்த்தேன். சுவிட்ச் ஆஃப். ஊரில் இருக்கும் நந்தினியின் பெற்றோரிடம் ஏதாவது சொன்னாளா என்று தெரிந்துகொள்ள, நந்தினியின் அப்பாவை மொபைலில் அழைத்தேன். போனை எடுத்த என் மாமனாரிடம், ''மாமா... நந்தினி ஏதும் போன் பண்ணியிருந்தாளா?'' என்றேன்.
    ''ஒண்ணும் பண்ணலையே. என்ன விஷயம் மாப்ள?'
    ''நேத்து ராத்திரி ஒரு சின்ன சண்டை. மொட்டைமாடிலயே படுத்துத் தூங்கிட்டேன். காலைல எந்திரிச்சுப் பாத்தா ஆளக் காணோம்.'
    ''என்ன மாப்ள சொல்றீங்க?' என்ற மாமனாரின் குரலில் அதிர்ச்சி.
    ''நானும் மூணு மணி நேரமாத் தேடிப் பாத்துட்டேன். ஆளக் காணோம்...' என்ற என் குரல் உடைந்து அழுகை வரப் பார்த்தது.
    ''பயப்படாதீங்க மாப்ள. கோபத்துல பக்கத்துல எங்கயாச்சும் போயிருப்பா. நீங்க எல்லா இடத்துலயும் நல்லாத் தேடிப் பாத்தீங்களா?'
    ''பாத்தாச்சுங்க.'
    ''பக்கத்து கோயில்ல ஏதும் பாத்தீங்களா?'
    ''இல்லையே.'
    ''பக்கத்துல இருக்கிற கோயில்ல எல்லாம் பாருங்க. இங்க எங்ககூட ஏதாவது சண்டை வந்துச்சுன்னா, கோயில்ல தான் போய் உக்காந்திருப்பா' என்று மாமனார் கூற... எனக்கு மூச்சு வந்தது.
    ''சரி மாமா...' என்ற நான் வேகமாக பைக்கை உதைத்துக் கிளம்பினேன். அந்தப் பிரதேசத்தில் காணப்படும் ஷிவா மந்திர், லோட்டஸ் டெம்பிள், கல்காஜி காளி மந்திர், சாய் மந்திர் என்று அத்தனை கோயில்களிலும் தேடினேன். எங்கும் நந்தினியைப் பார்க்க முடியவில்லை. இன்னும் ஆர்.கே.புரம் மலைமந்திர் மட்டும்தான் பாக்கி. அது வீட்டிலிருந்து தூரம். இருப்பினும், அது தமிழர்களால் நடத்தப்படும் முருகன் கோயில் என்பதால், அங்கு வந்து செல்பவர்கள், அர்ச்சகர்கள் என்று எல்லோரும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள். எனவே, நந்தினி அங்கு சென்றிருக்கக்கூடும் என்று நம்பிக்கையுடன் பைக்கில் வேகமாகப் பறந்தேன். மலைமந்திர் வாசலில் பைக்கை நிறுத்தியபோது நான் மிகவும் களைத்திருந்தேன்.
    மெதுவாக நடந்து கீழே விநாயகர் சந்நிதி, மீனாட்சி சந்நிதியில் பார்த்தேன். நந்தினி இல்லை. படியேறி மேலே சென்றேன். முருகன் சந்நிதியிலும் அவளைக் காணாமல் ஏமாற்றத்துடன் சுற்றிலும் பார்த்தேன். துர்கையம்மன் சந்நிதி அருகே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்க... நான் வேகமாகச் சென்றேன். அங்கு நந்தினி புல்தரையில் அமர்ந்தபடி ரிங் ரோட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
    வீட்டுக்கு வந்தும் இருவரும் ஒன்றும் பேசவில்லை. அழுத குழந்தைக்குப் பால் கொடுத்துத் தூங்கவைத்த பிறகு நிதானமாக நந்தினியிடம் பேச ஆரம்பித்தேன்.
    ''நான் உங்கிட்ட ஏன் போனேன்னு கேக்கப்போறதில்ல. இனிமே நான் என்ன பண்ணணும்னு மட்டும் சொல்லு' என்றேன்.
    ''இனிமே நீங்க இளையராஜா பாட்ட கேக்கக் கூடாது' என்றாள் வேகமாக.
    நான் ஒரு விநாடியும் யோசிக்காமல், ''சரி... இனிமே கேக்க மாட்டேன்' என்றபோது லேசாகத் தொண்டை அடைத்தது.
    ''கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு, வெளிய போறப்ப கேட்டீங்கன்னா என்ன பண்றது? உங்க மொபைல்ல இருக்கிற இளையராஜா பாட்டையெல்லாம் அழிங்க' என்றாள். நான் மௌனமாக மொபைலில் இருந்த பாடல்களை அழித்துவிட்டு ''போதுமா?' என்றேன்.
    ''கம்ப்யூட்டர்ல இருக்கிற இளையராஜா பாட்டு?' என்று நந்தினி கூற... கணினியை இயக்கி இளையராஜா பாடல்களைஅழித்துவிட்டு அவள் முகத்தை நோக்கினேன். அவள், ''சி.டி-ல் லாம்...' என்றாள். நான் அலமாரியைத் திறந்து, இளையராஜாவின் பாடல்களைப் பதிவுசெய்து வைத்திருந்த சி.டி-க்கள், டி.வி.டி-க்கள் என்று எல்லாவற்றையும் ஒரு இயந்திரம்போல் எடுத்துக் கீழே போட்டேன்.
    நந்தினி, ''இவரு இளையராஜா பாட்டு கேட்டு அவள நினைச்சுக்கிட்டே இருப்பாராம். நான் வேடிக்கை பாத்துட்டு இருக்கணுமாம்' என்றபடி வெறி பிடித்தாற்போல் சரக்... சரக்... என்று சி.டி-க்களைத் தரையில் தேய்த்தாள்.
    டுத்து வந்த மூன்று மாத காலமும் ஒரு பிரச்னையும் இல்லை. உள்ளுக்குள் ஒரு வெறுமை இருந்தாலும், வெளியில் என்னால் இயன்றளவு சகஜமாக இருக்க முயன்றேன். ஆனால், இளையராஜா பாடல்கள் கேட்காமல் இருப்பது, நெஞ்சில் முள்ளாக உறுத்திக்கொண்டேயிருந்தது. ஒரு நாள் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முனீர்கா பகுதியில் சென்றபோது ஒரு வீட்டிலிருந்து 'உன் குத்தமா... என் குத்தமா?’ பாடல் கேட்க, அப்படியே பைக்கை நிறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரவுகளில் படுத்தபடி மனதுக்குள்ளேயே இளையராஜாவின் பாடல்களை ஆரம்பத்தில் இருந்து ஃப்ரீலூட், இன்டர்லூடுடன் கேட்க... மனம் சற்று நிம்மதியடைந்தது. என் செவியில் ஒலிக்காத இளையராஜாவின் பாடல்கள், என் மனதில் ஒலித்துக்கொண்டேயிருந்தன. அப்படியே தூங்கிவிட... கனவிலும் இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.
    ஒரு விடியற்காலை கனவில், 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...’ பாடலைக் கேட்கக் கேட்க மிகவும் இன்பமாக இருந்தது. சட்டென்று விழிப்பு வர... அப்போதும் பாடல் தொடர்ந்து ஒலித்தது. விழித்த பிறகும் எப்படிப் பாடல் ஒலிக்கிறது என்று நான் திகைக்க... கட்டிலில் புன்னகையுடன் நந்தினி அமர்ந்திருந்தாள். அவள் கையில் இருந்த பாக்கெட் சி.டி. ப்ளேயரில் இருந்துதான் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. நடப்பதை நம்ப முடியாமல் ஆச்சர்யத்துடன் எழுந்து அமர்ந்தேன்.
    சட்டென்று என் நெஞ்சில் சாய்ந்த நந்தினி, ''ஸாரிங்க?' என்றாள்.
    ''ஏய்... என்னாச்சு உனக்கு?' என்றேன்.
    ''நீங்க இளையராஜா பாட்ட கேக்குறத நிறுத்தின பிறகு, பழைய மாதிரியே இல்ல. நீங்க என்னதான் எங்கிட்ட சிரிச்சுப் பேசினாலும், அதெல்லாம் நடிப்புனு நல்லாத் தெரிஞ்சுபோச்சு. பழைய கலகலப்பு, மனசுவிட்டுச் சிரிக்கிறது, துறு துறுனு எங்கிட்ட வம்பிழுக்கிறதுனு எல்லாம் போயிடுச்சு. எனக்கு நீங்க பழைய வினோத்தா வேணுங்க. அதுவும் இல்லாம உங்ககூட சேர்ந்து இளையராஜா பாட்டக் கேட்டுக் கேட்டு, அது இல்லாம எனக்கே ஒரு மாதிரியா இருக்கு. அதான் இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்னு நேத்து அலைஞ்சு திரிஞ்சு பத்து இளையராஜா பாட்டு டி.வி.டி. வாங்கிட்டு வந்தேன்' என்று கூறியவளை உற்றுப் பார்த்தேன்.
    அப்போது என் மனதில் நந்தினியின் மீது ஏற்பட்ட அபாரமான காதலை இந்த சாதாரண எழுத்துக்களைப் பயன்படுத்திச் சொல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஜெஸ்ஸியோடு எனக்கு இருந்த காதலைவிடப் பல மடங்கு பெரிய காதல் இது. ''நந்தினி...' என்று நான் ஆவேசத்துடன் அவளை இறுக அணைத் துக்கொண்டேன்.
    ''ஆனா, ஒரு கண்டிஷன்... பாட்டு கேக்குறப்ப நீங்க அவள நினைக்கக் கூடாது.'
    ''நினைச்சுப்பேன்... ஆனா, அவள இல்ல. இனிமே எங்கே இளையராஜா பாட்டக் கேட்டாலும், உன் நினைப்புதான் வரும்' என்று நான் கூற... நந்தினி என்னை இறுகத் தழுவிக்கொண்டாள். சி.டி-யில் அடுத்த பாடல் ஒலித்தது.
    'என்னோடு வா வா... என்று சொல்ல மாட்டேன்...
    உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்’!


  9. #3588
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    தீவு... திகில்... இளையராஜா!
    க.நாகப்பன்

    "பிஜி தீவு... சுத்தி கடல், வெண் மணல்... நடுவில் இளையராஜா! ஒரு பாட்டுக்கான ஷூட்டிங். நேட்டிவிட்டிக்கு இருக்கட்டுமேனு பிஜி தீவின் பாரம்பரிய நடனக் குழுவை வரச் சொல்லியிருந்தோம். அவங்ககிட்ட பாடலின் சிச்சுவேஷன் சொல்லி எப்படி ஆடணும்னு சொல்லிக்கொடுத்தோம். எல்லாத்தையும் ஷார்ப்பா கேட்டுக்கிட்டாங்க. 'ஷாட் ரெடி’னு சொல்லவும், இளையராஜா அவங்களுக்குப் பக்கத்தில் வந்தார். அவர் வந்து நிக்கவும் இந்தப் பசங்க கையில் இருந்த தண்டம் மாதிரியான ஒரு பொருளை ராஜா சார் கழுத்தில் வெச்சுட்டாங்க... எல்லாரும் அலறிட்டோம்...'' - உச்சத்தில் சஸ்பென்ஸ்வைக்கிறார் செல்வா. இயக்குநராக 'தலைவாசல்’ படத்தில் அறிமுகமாகி 'அமராவதி’யில் அஜித்தை அறிமுகப்படுத்தியது தொடங்கி 'நாங்க’ படத்தில் இயக்குநராகக் கால் சதம் தொட்டிருக்கும் செல்வாவின் அடுத்த படம், 'நாடி துடிக்குதடி’. இதில் இளையராஜாவை ஒரு பாடலுக்கு நடிக்கவைத்திருக்கிறார் செல்வா.
    ''சார்... ஓப்பனிங் பில்ட்அப் போதும்... சஸ்பென்ஸ் உடைங்க...''
    ''ஏதோ வம்பாயிருச்சுனு கேமராவில் இருந்து கிளாப் போர்டு வரை எல்லாத்தையும் போட்டுட்டு ஓடினா, பிஜி தீவில் பெரியவங்களுக்கு அப்படித்தான் மரியாதை பண்ணுவோம்னு செம கூலா சொல்றாங்க அந்தப் பசங்க. எங்களுக்கு உயிர் போய் உயிர் வந்துச்சு. ராஜா சார் சிரிச்சுக்கிட்டே நின்னார். அந்தக் காட்சியைப் பாட்டிலும் சேர்த்துட்டோம்!''
    ''இளையராஜா எப்படித் தன் இசையில் தானே நடிக்க இசைந்தார்?''
    ''தமிழர்கள் வழக்கமா சொல்ற மாதிரி... நானும் ராஜாவின் வெறிபிடிச்ச ரசிகன். கல்லூரிக் காலத்தில் ராஜா சார் மியூஸிக்குக்காகப் படம் பார்க்க ஆரம்பிச்சவன். அப்படி நான் பார்த்த சினிமாக்கள்தான் எனக்குள் சினிமா மோகத்தை வளர்த்தது. ஆனா, 25 படங்கள் இயக்கும் வரை என் படத்துல ராஜா இசைங்கிற வரம் எனக்குக் கிடைக்கலை. பழ.கருப்பையாதான் படத்தின் தயாரிப்பாளர்னு உறுதியானதும் அவர் என்கிட்ட சொன்னது ஒண்ணே ஒண்ணுதான். 'படத்தில் எந்த ஆர்ட்டிஸ்ட்டையும் நடிக்கவைங்க. ஆனா, என் நெருங்கிய நண்பர் இளையராஜாதான் இசையமைக்கணும்’னு சொன்னார். நானும் அதுக்குத்தானே காத்திருந்தேன். என் நெடுநாள் ஏக்கம் நிறைவேறுச்சு. ஒரு லட்சியம் நிறைவேறவும் அடுத்த ஆசை மனசுக்குள் உக்காந்துக்குமே. அப்படி ராஜா சாரை என் படத்துல ஒரு காட்சியாவது நடிக்கவைக்கணும்னு நினைச்சேன்.
    'பிஜி தீவில் காதலைப் பத்தி வர்ற பாட்டுல ஒரு காதல் புகழ் பிரபலம் ஆடினா நல்லா இருக்கும். தமிழ்நாட்டில் காதலைத் தன் இசையில் உருகி உருகி இழைச்சது ராஜா சார்தானே. அதனால அவரே நடிச்சா நல்லா இருக்கும்’னு பழ.கருப்பையாகிட்ட சொன்னேன். 'நீங்களே பேசுங்க’னு சொல்லிட்டார். 'நான் எதுக்கு ஸ்க்ரீன்ல?’னு ஆரம்பத்துல ராஜா சார் சின்னதா யோசிச்சார். அப்புறம் பேசிப் பேசிச் சம்மதிக்கவெச்சுட்டோம். அந்தத் தீவில் கடலைச் சுத்தி ஒரு பாலைவனம் இருக்கு. அங்கே எந்தத் தொந்தரவும் இல்லாம ஷூட் பண்ணோம். ஒரு கட்டத்துக்குப் பிறகு ரொம்ப ஈஸியாகி, ராஜா சாரே அவரோட இயல்பான மேனரிஸங்களோட நடிச்சுக்கொடுத்தார். எல்லாருக்கும் ரொம்பச் சந்தோஷம்!''
    ''காதலைக் கலாய்ச்சுதான் இப்போ படங்கள் வந்துட்டு இருக்கு. அதுல உங்க படம் எப்படி?''
    ''முத்தத்தை எடுக்காமக் கொடுக்க முடியாது... கொடுக்காம எடுக்க முடியாது. காதலும் அதுமாதிரிதான். அந்த உணர்வை, காதல்வயப்பட்ட மனசின் நாடித் துடிப்பைப் படம் முழுக்க உணர்வீங்க. காதலைக் கிண்டலடிச்சே வரும் படங் களுக்கு மத்தியில் நிச்சயம் என் படம் செம ஃப்ரெஷ்ஷா இருக்கும்!

  10. #3589
    Member Regular Hubber Divine22's Avatar
    Join Date
    Jan 2011
    Location
    Realm
    Posts
    53
    Post Thanks / Like
    this looks real !

  11. #3590
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    The site says IR and Vairamuthu's son (Karky) coming together for the movie "Onaiyum Aatukuttiyum":

    http://timesofindia.indiatimes.com/e...w/20362293.cms

    thanks,

    Krishnan

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •