Page 329 of 401 FirstFirst ... 229279319327328329330331339379 ... LastLast
Results 3,281 to 3,290 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #3281
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    படம்: ஆராதனை
    இசை: இளையராஜா
    எழுதியவர்: வைரமுத்து
    பாடியவர்: ராதிகா ?

    லலலல லலலல லாலா.. லலலல லலலல லாலா..
    இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
    துணைக்கிளி தேடி துடித்தபடி.. தனிக்கிளி ஒன்று தவித்தபடி
    சுடச்சுட நனைகின்றதே
    இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
    ...

    ஆசை நதி மடை திறக்கும்.. பாஷை வந்து கதவடைக்கும்
    காயாது மன ஈரங்கள்.. தாளாது சுடு பாரங்கள்
    காவியக் காதலின் தேசங்களே.. ஊமையின் காதலைப் பேசுங்களே
    மலர்களும் சுடுகின்றதே

    தனானா.. இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
    ...

    பாவை விழித்துளி விழுந்து பூவின் பனித்துளி நனையும்
    தீயாகும் ஒரு தேன் சோலை.. போராடும் ஒரு பூமாலை
    சூரிய காந்திகளாடியதோ.. சூரியனை அது மூடியதோ
    முகில் வந்து முகம் பொத்துமோ

    தனானா.. இளம் பனித்துளி விழும் நேரம்.. இலைகளில் மகரந்தக் கோலம்
    துணைக்கிளி தேடி துடித்தபடி.. தனிக்கிளி ஒன்று தவித்தபடி
    சுடச்சுட நனைகின்றதே
    லலலல லலலல லாலா.. லலலல லலலல லாலா

    இளையராஜாவின் இன்னிசையில் அவ்வளவாக கேட்கக் கிடைக்காத இளம் பனித்துளி விழும் நேரம்



    இந்த பாடகி ராதிகா பற்றி தகவல் ஏதும் உண்டா ?
    gkrishna

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3282
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    தற்போது குமுதம் வார இதழில் தாம் பழகிய மனிதர்களைப் பற்றிய நினைவோட்டங்களை எழுதி வருகிறார் சோ. இந்தத் தொடரிலும் அவ்வளவுதான். எவ்வித பாசாங்குகளும் அற்று தம்முடைய நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார் அவர். சமீபத்தில் இசையமைப்பாளர் எம்எஸ்விஸ்வநாதன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பல சுவாரஸ்யமான தகவல்களுடனும் திரை இசையைப் பற்றிய, எம்எஸ்வியைப் பற்றிய தமது கருத்துக்களுடனும்……………….!. அதில் சில கருத்துக்களும் தகவல்களும் இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய கருத்துக்களாகவும் உள்ளன. அவர் சொல்கிறார்;

    (இதில் சோ சொன்னவையெல்லாம் வண்ணத்தில் உள்ளன)

    “கவிஞர் கண்ணதாசனைப் பற்றி நான் குறிப்பிடும்போது அவருக்கு குழந்தை மனது என்றிருப்பேன். இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு குழந்தையேதான்.

    அவரைப் பொறுத்தவரை இசைதான் அவருக்கு எல்லாம். இசையைத் தவிர மற்றவற்றைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்து கொள்வதிலும் விருப்பம் காட்டமாட்டார்.அவருக்குக் குருநாதர் இசையமைப்பாளர் எஸ்எம் சுப்பையா நாயுடு. அவருக்காக எம்எஸ்வி ஒரு விழா எடுத்தார். அந்த விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க என்னை அழைத்திருந்தார். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

    அந்த விழாவில் எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல நடிகர்கள் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வதாக தகவல் தெரிய வந்ததும் விஸ்வநாதனிடம் கேட்டேன். “நான் திமுகவைக் கடுமையா விமர்சனம் பண்ணிண்டிருக்கேன். திமுகவை விமர்சிக்கிறதை எம்ஜிஆர் கொஞ்சம்கூட விரும்ப மாட்டார்(அப்போது அவர் திமுகவில் இருந்த சமயம்). நான் அவரோட சினிமாவில் நடிச்சாலும் இந்த மேடையில் நான் தொகுத்து வழங்கறப்போ என்ன பேசுவேனோன்னு அவர் நினைக்கலாம். சில பிரச்னைகள் வரலாம். அதனால் நீங்க என்னைத் தொகுத்து வழங்கச் சொல்லாமல் வேறு யாரையாவது பண்ணச் சொல்லுங்க. நான் வேண்டாம். உங்களுக்கும் இது நல்லதில்லை”.

    விஸ்வநாதன் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

    “அதெல்லாம் பத்தி எனக்கென்ன? நான் ஒரு விழா எடுக்கறேன். எனக்கு சோ ஃபிரண்ட். எனக்கு அவர் வேணும். கலந்துக்கணும். இதனாலே எல்லாம் எம்ஜிஆருக்குக் கோபம் வராது. நீங்க நினைக்கிறமாதிரி எல்லாம் ஒண்ணும் நடக்காது. அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லிவிட்டு என்னிடம் “நீங்க அங்கே அரசியல் பேசுவீங்களா?” என்று கேட்டார்.

    “நான் எந்த இடத்தில் எதைப் பேசறதுன்னு எனக்குத் தெரியாதா? நான் அரசியல் பேசமாட்டேன்” என்று சொன்னேன்.

    “சரி அது போதும்” என்று சொல்லிவிட்டு விழாவுக்கான அழைப்பிதழைக் கொண்டுவந்து காண்பித்தார்.

    எம்ஜிஆரின் பெயர் முதலில் போடப்பட்டிருந்தது. என்னுடைய பெயரும் இருந்தது.

    “எம்ஜிஆரிடம் இதைக் காண்பிச்சுட்டீங்களா?”

    “இல்லை இனிமேல்தான் காண்பிச்சுட்டு சொல்லப்போறேன்” சொல்லிவிட்டு எம்ஜிஆரைச் சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்திருக்கிறார். அழைப்பிதழை வாங்கியதும் அதிலுள்ள பெயர்களை எல்லாம் பார்த்திருக்கிறார் எம்ஜிஆர்.

    “இந்த இன்விடேஷன்ல இருக்கறவங்ககிட்டே எல்லாம் சொல்லிட்டீங்களா?”
    “சொல்லிட்டேன்”

    “சோ கிட்டே சொல்லிட்டீங்களா?”

    “சொல்லிட்டேன்”

    “என்ன காரியம் பண்ணியிருக்கீங்க நீங்க? சோ திமுகவை எதிர்க்கிறவர். அவர் ஏதாவது திமுகவைப் பத்திப் பேசினா எனக்குத் தர்மசங்கடமாப் போகும். என் கிட்டே நீங்க ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா?”

    “இதில் பிரச்னை இருக்கும்னு தோணலை” – தயக்கத்துடன் சொல்லிவிட்டுத் தொடர்ந்திருக்கிறார் எம்எஸ்வி. “உங்க படங்களில்கூட சோ நடிக்கிறாரே?”

    “அது வேற. இது வேற”

    “நான் வேணும்னா சோ கிட்டே போய் ‘எம்ஜிஆர் வேணாம்ங்கிறார். அதனால் நீங்க வேணாம்னு சொல்லிடுறேன்”

    “இன்னும் இதைக் கெடுக்கறதுக்கு என்ன வழியுண்டோ அதைக் கண்டுபிடிக்க உன்னால்தான் முடியும்” என்று எம்எஸ்வியைக் கண்டித்தாலும் சொன்னபடி விழாவுக்கு வந்து விட்டார் எம்ஜிஆர்.சிவாஜியும் வந்துவிட்டார். மேடை நிறைந்துவிட்டது. முன்னால் நல்ல கூட்டம். விழா நிகழ்ச்சிகளைத் தொகுக்க வந்த நான் முதலில் மைக்கைப் பிடித்தேன். போனதும் உரத்த குரலில் “வாத்தியார்” என்று சொல்ல, கூட்டத்தில் ஒரே கைத்தட்டல்.

    “இது வாத்தியாருக்கான விழா. இங்கே ஒரு வாத்தியார் வந்திருக்கார். அது மட்டுமில்லை. விஸ்வநாதன் தன்னுடைய வாத்தியார் சுப்பையா நாயுடுவுக்காக நடத்துற விழா இது” என்று வாத்தியார் என்கிற சொல்லை வைத்து ரொம்பவும் விளையாடினேன். எதிரில் இருந்த கூட்டத்திற்கும் திருப்தி. இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த எம்ஜிஆருக்கும் பரம திருப்தி.

    அடுத்த நாள் சிவாஜியுடன் ஷூட்டிங். நான் போனதுமே “சரியான அயோக்கியன்டா நீ. வாத்தியார்ங்கற ஒரு வார்த்தையை வைச்சுக்கிட்டு எப்படியெல்லாம் சமாளிச்சே” என்று கிண்டல் பண்ணினார் அவர்.

    Thanks to kumudam
    gkrishna

  5. Likes Russellmai liked this post
  6. #3283
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ”என்ன விசு சார்.. இன்னும்கவிஞர் பாட்டுத் தரலையே பட ஷூட்டிங்கோ மே மாசம் வெச்சாச்சு..பெரிய நடிகரோட கால்ஷீட்..படம் வெளி நாடு..விசா அது இதுல்லாம் சமாளிச்சாச்சு.. ஹீரோயின்க்கு வேற ஒரு படம் வேற இருக்கு.. இது ஏப்ரல் மாசம ஏன் இப்படி டிலே பண்றார்..”

    “தெரியலையே..கவிஞர் இப்படிச் செய்ய மாட்டாரே..போன் பண்ணீங்களா…”

    “ நல்லாச் சொன்னீர்ங்காணும்..உங்க கிட்ட வர்றதுக்கு முன்னாடி அங்க போன் போட்டு பேசிட்டு தான் வந்தேன்” என்றார் தயாரிப்பாள்ர்..

    “இருங்க நான்பேசறேன்” என்ற விசு கவிஞருக்கு ஃபோன் போட மறுமுனையில் குரல் கோபமாய் “ என்ன விசு..அதான் தர்றேன்னு சொன்னேனில்ல..இப்படிப் பிரஷர் பண்ணா…சரி சரி..அந்தப் ப்ரொட்யூசர ரெண்டு மணி நேரம் கழிச்சு வரச் சொல்லு இங்கே.. எழுதித் தர்றேன்..”

    “கவிஞரே..ஒருபாட்டுல்லாம்பத்தாது..எல்லாம் வேணுமே.. நான் வேணும்னா ரெண்டு நாள் கழிச்சு வரட்டா”

    “விஸ்வ நாதா..எல்லாப் பாட்டையும் தான் தர்றேன்னு சொன்னேன்..ஒழுங்கா வந்து வாங்கிக்கோ” என கவிஞர் ஃபோனை வைக்க இரண்டு மணி நேரம் கழித்து விஸ்வ நாதனும் தயாரிப்பாளரும் போய் சந்தித்தால் – ஒருகத்தை பேப்பர்… எல்லாப் பாடல்களும் ரெடி..

    விஸ்வ நாதனும் தயாரிப்பாளரும் திக்குமுக்காடி தாங்க்ஸ் சொல்ல கொஞ்சம் கூலாய் இருந்த கண்ண தாசன்.. “விசு.. இதுல்ல ஒரு பாட்டுல ஒனக்கும் இந்த ப்ரொட்யூசருக்கும் டெடிகேட் பண்ணி எழுதியிருக்கேன்..படிச்சுப் பார்த்து க் கண்டு பிடி..போய்ட்டு வா”

    ஸ்டூடியோ வந்து எல்லாப் பாடல்களும் படித்தால் அனைத்தும் முத்து..ஆனால் கவிஞர் சொன்னது போல் எதுவும் டெடிகேட் பண்ணியது போலத் தெரியவில்லை..

    எல்லாம் நன்னா இருக்கு..கவிஞர் ஏன் இப்படி ச் சொல்றார்.. எம்.எஸ்.வி குழம்பி க் குழம்பி மறுபடி மறுபடி படித்துப் பார்க்க பளிச்சென மூளைக்குள் பல்ப்.. ப்ரொட்யூசரை அழைத்து இந்தப் பாட்டுதான் ஓய்..

    எப்படிச் சொல்றீங்க விசு சார்..

    பாருங்க கவிஞர்கிட்ட மே மாசம் ஷூட்டிங்க்னு பிரஷர் கொடுத்தோமோன்னோ.. இந்தப் பாட்டு முழுக்க மே மேன்னு முடியற மாதிரி எழுதியிருக்கார்..!

    அட ஆமாம்.. என்றார் தயாரிப்பாளர்..

    அந்தப்பாடல் அன்பு நடமாடும் கலைக் கூடமே..

    அன்பு நடமாடும் கலை கூடமே
    ஆசை மழை மேகமே

    கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
    கன்னித் தமிழ் மன்றமே

    மாதவி கொடிப் பூவின் இதழோரமே
    மயக்கும் மதுச் சாரமே
    மாதவி கொடிப் பூவின் இதழோரமே மயக்கும் மதுச் சாரமே
    மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே மன்னர் குலத் தங்கமே
    பச்சை மலைத் தோட்ட மணியாரமே பாடும் புது ராகமே

    வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே விளக்கின் ஒளி வெள்ளமே
    செல்லும் இடம்தோறும் புகழ் சேர்க்கும் மனமே தென்னர் குல மன்னனே
    இன்று கவி பாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே

    மானிலம் எல்லாமும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே
    காணும் நிலம் எங்கும் கவி பாடும் மனமே உலகம் நமதாகுமே
    அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே யாவும் உறவாகுமே
    **
    என்னா அழகுப் பாட்டு..என்னா அழகிய கவிஞர்.. ரெண்டு மணி நேரத்தில் எழுதிய மற்ற பாடல்கள்…ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா, மனிதன் நினைப்பதுண்டு, எங்கிருந்தோ ஒருகுரல் வந்தது..

    படமாக்கிய விதமும் அழகு. . ந.தி வித் மஞ்சுளா.. அழகான நெய்மணக்கும் பொங்கலுடன் அரைத்துவிட்ட வெங்காய சாம்பார் சாப்பிட்டாற்போல வெகு பொருத்தமான ஜோடி..வெகு பொருத்தமான பாட்டு!

    ம்ம் கண்ணதாசன் கண்ணதாசன் தான்..

    (முன்பு மய்யத்தில் நண்பர் கணேஷ் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மசாலா தூவி உங்களுக்கு வழங்கியது – அடியேன்..

  7. Likes Russellmai liked this post
  8. #3284
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    அழகே அழகு-நன்றி உயிர்மை s .ராமகிருஷ்ணன்



    சில திரையிசைப் பாடல்கள் கேட்ட முதல்நாளில் இருந்து இன்று வரை அதன் ஈர்ப்பை அப்படியே வைத்திருக்கின்றன, அதில் ஒன்று ராஜபார்வை படத்தில் இடம் பெற்ற ஜேசுதாஸ் பாடியுள்ள அழகே அழகு தேவதை பாடல்

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய இப்பாடல் பாதாதி கேசம் பெண்ணை வர்ணிக்கும் மரபில் உருவானது, பாடலை ரசித்து அழகாக எழுதியிருக்கிறார் கவியரசர், எளிமையும், வியப்பும் ஒருங்கே கொண்ட பாடலது, கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் மனதில் ஒரு பெண்உருவம் தோன்றி பாடல் கேட்பவரை தன்வசமாக்குகிறது,

    ராஜபார்வை தமிழ்சினிமாவில் முக்கியமான ஒரு படம், இந்த படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போது புதிதுபுதிதாக ஆச்சரியங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. இன்று வெளியாகியிருக்க வேண்டிய ஒரு திரைப்படத்தை முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக எப்படி உருவாக்கினார் கமல்ஹாசன் என்று வியப்பாகவே உள்ளது

    வேறுமாநிலங்களில் இருந்து நடிகைகளை மட்டுமே தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்து கொண்டிருந்த சூழலில் ராஜபார்வையில் இடம்பெற்ற கலைஞர்களின் பட்டியலைப் பாருங்கள், படத்தின் இயக்குனர் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த சிங்கிதம் சீனிவாசராவ், ஒளிப்பதிவாளர் வங்காளத்தைச் சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளர் பரூண் முகர்ஜி, முக்கியக் கதாபாத்திரமொன்றில் நடித்திருப்பவர் தெலுங்கு தமிழ் திரைப்படங்களின் முக்கியத் தயாரிப்பாளரும், நடிகருமான எல்.வி.பிரசாத், இன்னொரு முக்கியக் கதாபாத்திரம் கேரளாவைச் சேர்ந்த K.P.A.C. லலிதா, இவர் இயக்குனர் பரதனின் மனைவி.

    மாதவியின் அப்பாவாக நடித்திருப்பவர் ஆங்கில நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஏவி.தனுஷ்கோடி, இவர் அமெரிக்கத் தூதரகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர், சிறந்த ஒவியர், ஜெர்மனியில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்ப்புகள் செய்திருப்பவர், படத்தின் உயிரோட்டமாக இருந்தவர் இசைஞானி இளையராஜா, இவர்களுடன் கண்ணதாசன், வைரமுத்து இருவரின் அற்புதமான பாடல்கள், இப்படி படத்தின் உருவாக்கத்தில் இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமைகள் பலரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள், ஆனால் படம் வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை, அதற்கான முக்கிய காரணம் கமல்ஹாசனின் நூறாவது படம் என்பது குறித்து அவரது ரசிகர்கள் மிதமிஞ்சிய எதிர்ப்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள், அதை நிறைவேற்றி வணிகவெற்றி பெறுவதைவிடவும் தனக்கு விருப்பமான ஒரு கதையை, விருப்பமான தொழில்நுட்பக்குழுவினரைக் கொண்டு உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கமல்ஹாசன் இப்படத்தைத் தயாரித்திருந்தார்,


    இசையை மையமாகக் கொண்ட படமாக அமைந்ததோடு சம்பிரதாயமான காதல்காட்சிகள், சண்டைகள், திடீர் திருப்பங்கள் எதுவுமில்லாமல் மாறுபட்ட கதைசொல்லும்முறையை கொண்டிருந்ததை அன்றைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்கு காரணம் அன்று தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருந்த பொது ரசனை,

    1981களில் மாறுபட்ட காதல்கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தன, அதில் பன்னீர்புஷ்பங்க்ள், பாலைவனச்சோலை, இன்று போய் நாளை வா, அலைகள் ஒய்வதில்லை ஆகிய நான்கு படங்களும் நான்குவிதமான காதல்கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்லி வணிகரீதியாக வெற்றி பெற்றன, இந்த ஆண்டு வெளியான மகேந்திரன் இயக்கிய நண்டு புதிய கதைக்களனோடு வெளியானது, ஆனால் படம் வணிக வெற்றியை பெறவில்லை, அது போன்ற ஒரு சூழலே ராஜபார்வைக்கும் நேர்ந்த்து,

    அழகே அழகு தேவதை பாடல் படமாக்கபட்டுள்ள விதம் சிறப்பானது, கேமிரா நகர்வதற்கு போதுமான அளவு கூட இல்லாத ஒரே வீடு, அதற்குள் முழுப்பாடலும் எடுக்கபட்டிருக்கிறது, ஆடம்பரமில்லை, பகட்டான ஆடை அணிகள் இல்லை, மாதவியின் கிளர்ச்சியூட்டும் அழகு தான் பாடலின் மையப்புள்ளி. பாடல் இடம் பெறும் சூழல் கதையின் போக்கில் ஒரு முக்கியத் தருணம். பாடலின் துவக்கமும் முடிவும் அதைக் கதையோடு சேர்ந்த பாடலாகப் பொருந்த வைக்கிறது,

    இப்படத்தில் திரைப்படப் பின்னணி இசை சேர்க்கும் குழுவில் உள்ள பார்வையற்ற வயலின் இசைக்கலைஞராக கமல்ஹாசன் நடித்திருக்கிறார், கதை எழுதுவதற்காக அவரைச் சந்திக்கும் மாதவி அவரோடு நெருங்கிப் பழகத் துவங்குகிறார், இவரும் ஒருநாள் சமையல் செய்கிறார்கள், சமையல் புத்தகத்தை பார்த்துச் சமைக்க முற்படும் போது எதிர்பாராத விதமாக சமையல்பொருள்களை மாதவி மீது கொட்டிவிடுகிறார் கமல், அவள் குளித்துவிட்டு ஈரத்தலையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டவராக அமர்ந்திருக்கையில் அவளது அழகை வியந்து பாடுவதாகவே இப்பாடல் இடம் பெற்றுள்ளது

    அழகே அழகு, தேவதை என்ற மூன்று வார்த்தைகளில் அவளது அழகின் மீதான லயப்பு முழுமையாக வெளிப்பட்டுவிடுகிறது, அதிலும் அழகு என்று உச்சரிக்கும் போது ஏற்படும் சிலிரிப்பு பின்வரும் தேவதை என்ற சொல்லின் வழியே நிறைவு அடைகிறது,

    ராஜபார்வை முழுவதும் இளையராஜாவின் இசை ராஜாங்கம் தான், குறிப்பாக பார்வையற்றோர் பள்ளியில் நடைபெறும் வயலின் இசை நிகழ்வில் அவர் அமைத்துள்ள இசைக்கோர்வை உலகத்தரமானது, இப்பாடலின் துவக்கத்தில் ஜேசுதாஸின் ஹம்மிங் மயக்ககூடியது,

    ஒவியத்தின் மீது கமல்ஹாசனுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம், அவரது படங்களில் ஒவியர்கள் கதாபாத்திரமாக வருவதுண்டு, அவரே அன்பே சிவத்தில் ஒவியராக நடித்திருக்கிறார், காதலா காதலாவிலும் ஒவியம் வரைபவராக பிரபுதேவா சித்தரிக்கபடுவார், விருமாண்டியிலும் ஒரு ஒவியர் முக்கிய சம்பவங்களின் சாட்சியாக இருப்பார், இப்பாடலில் மாதவி சித்திரம் வரைந்து கொண்டிருக்க அவரது ஒவ்வொரு அங்கமாக தொட்டுணர்ந்து கமல்ஹாசன் பாடுகிறார்,

    தனது அழகைப்பற்றி பாடுவதை உள்ளுற ரசித்தபடியே அவரைசீண்டிக் கொண்டிருக்கிறார் மாதவி, குறிப்பாக பட்டன் அணியாத மேல்சட்டையுடன் உள்ள கமலின் உணர்ச்சிபாவங்களும், அவரது தலையில் செல்லமாகத் தட்டி விளையாட்டுகாட்டும் மாதவியின் நளினமும் காதல்வசப்பட்ட அவர்களின் நெருக்கத்தை தெளிவாக காட்சிபடுத்தியிருக்கின்றன

    படியில் அமர்ந்திருந்த மாதவியைக் காணவில்லை என்று கமல் தேடும்போது அவரது விரலைப்பற்றி பல்லிடுக்கில் வைத்துக் கடிக்கும் அவரது குறும்புதனமும் விடுபடாத விரலோடு ததும்பும் மனமயக்கத்தில் அந்த இதழ்களை தொட்டு அறிந்து அவர் பாடுகிறார்

    சிப்பி போல இதழ்கள் ரெண்டும்

    மின்னுகின்றன

    சேர்ந்த பல்லின் வரிசையாவும்

    முல்லை போன்றன

    மூங்கிலே தோள்களோ

    தேன்குழல் விரல்களோ

    ஒரு அஙகம் கைகள் அறியாதது


    அறைக்குள்ளாகவே பாடல் படமாக்கபட்டுள்ளது, ஆனால் மாறுபட்ட கோணங்கள், உணர்ச்சிநிலைகள், ஊடல் என அந்தரங்க நெருக்கத்தை தருகிறது இப்பாடல், அதற்கு முக்கிய காரணம் இளையராஜாவின் நேர்த்தியான இசையும் யேசுதாஸின் மென்மையான குரலும் பருண் முகர்ஜியின் கவித்துவமான ஒளிப்பதிவும், நடனமில்லாமல் இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கமல் மற்றும் மாதவியின் நடிப்புமே, இவையே பாடலின் வெற்றிக்கான முதன்மைக் காரணங்கள்

    ராஜபார்வை படத்தில் குறிப்பிட்டுள்ள சொல்ல வேண்டிய மூவர், தாத்தாவாக நடித்துள்ள எல்வி பிரசாத், இவர் பிரசாத் ஸ்டுடியோவின் அதிபர், தெலுங்கில் நடிகராக அறிமுமாகி முக்கியத் தமிழ் தெலுங்கு தயாரிப்பாளராக பல புகழ்பெற்ற படங்களை உருவாக்கியவர், படத்தில் அவரது கதாபாத்திரம் வித்தியாசமானது, தனது பேத்தியின் காதலுக்காக அவர் நடந்து கொள்ளும விதம், இரவில் சாலையில் நிற்கும் கமலிடம் பெர்த்டே வாழ்த்து சொல்லும் அன்பு, மாதவியின் காதலைப்பற்றி முன்பே தெரியுமா எனக் கோபத்துடன் கேட்கும் மகனிடம் தடுமாற்றதுடன் சமாளிக்கும் பாங்கு, இறுதிக் காட்சியில் தேவாலயத்தில் இருந்து காதலர்களை சேர்த்து வைக்கும் போது வெளிப்படும் அவரது உறுதியான மனப்போக்கு யாவும் அவரை மறக்கமுடியாத ஒரு நடிகராக மாற்றிவிடுகின்றன,

    இது போன்ற பாத்திரப்படைப்புகள் இன்று தமிழ் சினிமாவில் நிறைய வந்துவிட்டன, ஆனால் ராஜபார்வை தான் அதன் முதல்முயற்சி, அதற்கு முந்திய ஆண்டுகளில் வயதானவர்கள் என்றாலே ஒரே மெலோடிராமாவாக இருக்கும், அதைத் தூக்கிப்போட்டுவிட்டு புதியதொரு கதாபாத்திரமாக எல்விபிரசாத்தின் தாத்தா ரோல் உருவாக்கபட்டிருக்கிறது

    இது போலவே படத்தில் தனித்து பாராட்ட இன்னொரு கலைஞர் ஏவி தனுஷ்கோடி, ஆங்கிலப்பேராசிரியராக சில ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இருபது ஆண்டுகள் அமெரிக்க தூதரகத்தில் பொருளதாரப்பிரிவில் ஆலோசகராக பணியாற்றியவர், ஆங்கில நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர், தேர்ந்த ஒவியர், மொழிபெயர்ப்பாளர், இவர் மாதவியின் தந்தையாக நடித்திருக்கிறார்,

    படபடப்பும், முன்கோபமும் கொண்ட கதாபாத்திரமது, அவரது கார் வி.கே.ராமசாமி காரோடு மோதும் போது ஏற்படும் கோபம், வீட்டிற்கு அழைத்துவரப்பட்ட கமல்ஹாசனிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் விதம், மகளிடம் கோபத்தில் கத்தும் போது ஏற்படும் உணர்ச்சிவேகம், பெண்கேட்டு வந்த கமல்ஹாசன் முன்பாக அப்பாவியாக கேட்கும் இயல்பு, இரவில் குடித்துவிட்டு தன்வீட்டின் முன்பு கலாட்டா செய்யும் கமல் கோஷ்டியைக் கண்டு ஏற்படும் ஆத்திரம் என்று தனுஷ்கோடி சிறப்பாக நடித்திருக்கிறார், இவ்வளவு தேர்ந்த நடிகர் ஏன் தமிழ்சினிமாவால் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போனார் என்பது ஆதங்கமாகவே உள்ளது,

    இது போலவே கமலின் சிற்றன்னையாக வரும் K.P.A.C. லலிதா, அரியதொரு கதாபாத்திரம், வழக்கமான சித்தி போல கொடுமைக்காரியாக அவர் சித்தரிக்கபட்ட போதும் வீடு தேடிவந்து அவர் கமலிடம் பேசும் முறையும், அவருக்காக விகேராமசாமியிடம் பெண் கேட்பதும், போலீஸில் இருந்து மகனை மீட்டுவந்து காட்டும் அக்கறையும், மாதவி வீட்டில் போய் பேசும் கம்பீரமும், தான் விரும்பிய பெண்ணை கமல் ஒத்துக் கொள்ள மறுக்கும் போது காட்டும் ஆதங்கமும் என K.P.A.C. லலிதா தேர்ந்த நடிகை என்பதை நிருபணம் செய்திருக்கிறார், அவருக்கும் கமலிற்குமான உரையாடல்கள் கூர்மையாக எழுதப்பட்டுள்ளன,

    எண்பதுகளில் வெளியான மலையாளத்திரைப்படங்களின் அழகியலை ஒத்தே ராஜபார்வை உருவாக்க்பட்டிருக்கிறது, மொத்தபடத்திலும் பத்தே கதாபாத்திரங்கள், அதிலும் நான்கு பேர் தான் முக்கியமானவர்கள், அவர்களை சுற்றியே படம் இயங்குகிறது. சம்பிரதாயமான காட்சிகள் என ஒன்று கூட கிடையாது, கமல் குடியிருக்கும் வீடு, அவரது ஒலிப்பதிவு கூடம், பார்வையற்றோர் பள்ளி யாவும் மிக இயல்பாக, யதார்த்தமான பின்புலமாக உருவாக்கபட்டிருக்கிறது,

    1980 ஆண்டு சாய் பரஞ்சிபே ஸ்பார்ஷ் என்றொரு படத்தை இயக்கினார், இதில் நஸ்ருதீன்ஷா பார்வையற்றவராக நடித்திருக்கிறார், இப்படத்திற்கு ராஜபார்வைக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன, இரண்டிலும் முக்கியக் கதாபாத்திரங்கள் மற்றவர்களிடம் இருந்து உதவியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், blind need help not pity or charity என்பதே இருவரது எண்ணமும்,

    இரண்டிலும் பார்வையற்றோர் பள்ளி முக்கியக் களமாக உள்ளது, ஸ்பார்ஷ் படத்தில் ஷபனா ஆஸ்மி கதாநாயகியாக நடித்திருக்கிறார், அவரது தோற்றம் மற்றும் கேசத்தை வாறிவிடும் இயல்பு ஆகியவை போலவே மாதவியின் தோற்றமும் உள்ளது,

    ஸ்பார்ஷ் படத்தில் ஒரு நாள் ஷபனா ஆஸ்மியின் பாடலை தற்செயலாக கேட்ட நஸ்ரூதீன் ஷா அவரைத் தனது பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பாட்டு கற்றுதரும்படியான சேவைக்கு அழைக்கிறார், விதவையான ஷபனா ஆஸ்மி தயங்கி ஏற்றுக் கொள்கிறார், இருவரும் பேசிப்பழகி ஒருவரையொருவர் அறிந்துகொள்கிறார்கள், ஷபனாவைக் காதலிக்கத் துவங்குகிறார் நஸ்ரூதீன் ஷா, அவர்களது திருமணம் நிச்சயக்கபடுகிறது, ஆனால் கருத்துவேறுபாடால் திருமணம் நின்று போகிறது, ஷபனா முன்பு போலவே பார்வையற்றோர் பள்ளியில் பாடல் சொல்லிக் கொடுத்தபடியே தனது நாட்களை கழிக்கிறார், முடிவில் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்,

    இப்படத்தின் கதையும் ராஜபார்வையின் கதையும் வேறுபட்டவை, ஒருவேளை ஸ்பார்ஷ் படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அங்கீகாரமும் காரணமாக கமல் ராஜபார்வையை உருவாக்கியிருக்க்கூடும், நஸ்ரூதீன் ஷாவிற்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது, ஆனால் தமிழ் சினிமாவில் அதன்முன்புவரை இப்படியொரு கதாபாத்திரம் உருவாக்கபடவில்லை,

    ஒரு நடிகராக கமலின் இன்னொரு உயரிய பரிமாணம் இப்படத்தில் வெளிப்பட்டுள்ளது, வழக்கமான டுயட்டுகள், சண்டைகாட்சிகள், நகைச்சுவை காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை, படம் முழுவதும் பார்வையற்றவரின் மொழியாக இசையே உள்ளது, அம்மாவிடம் கமல் வயலினில் பேசும் காட்சியில் மாஸ்ட்ரோ இளையராஜாவின் இசை விளையாடுகிறது, பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் மாவிலை பாதமோ என்ற உவமை கண்ணதாசனின் கற்பனையை கொண்டாட வைக்கிறது, அவ்வகையில் இப்பாடல் அழகே அழகு என்று தான் சொல்ல வேண்டும்



    (உயிர்மையில் வெளியாகி வரும் பறவைக்கோணம் பத்தியில் இடம்பெற்றது)

    Beautiful write-up on Raja Paarvai. Please permit me to add on. When Kaviarasu Kannadhasan was approached to write this situational song he inquired as to the film's title and he was replied 'Andhi Mazhai'. Even Vyramuthu had written the title song. Kannadhasan advised Kamalhassan and Chandrahassan that such a title will not bode well for a maiden project (being Kamal's first productions). The word 'andhi' denotes the sun going down and it is sentimentally not suitable, he explained. He, then, suggested the title of 'Raja Paarvai' after listening to the story line. That's how the title was changed from 'Andhi Mazhai' to 'Raja Paarvai'. Even Kamal recollected this incident in a tv media about a few months ago.
    Mahendra Raj

  9. #3285
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பொங்கலுக்கு கத்தரிக்காய் கொத்சு வேண்டாமா சி கே சார்

    எம். எஸ். வி. திரும்பத் திரும்ப கவிஞரிடம் மே மாதம் ஷட்டிங் இருக்கிறது, பாடலை விரைவில் கொடுங்கள் என்றார்.

    மலேசியா செல்வதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பாக்கி என்ற நிலையில் கண்ணதாசனிடம் பேசிய எம். எஸ். வீ. மே மாதம் படப்பிடிப்பு நடத்த வேண்டும், பாடல் எழுதி தருகிறாயா? இல்லை வேறு யாரிடமாவது எழுதி வாங்கி கொள்ளட்டுமா? என்று கேட்டிருக்கிறார்.

    பொறுமை இழந்த கடுப்பான கண்ணதாசன் ‘என்னையா.... சும்மா மே... மே... ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க’ என்ற படியே ஐந்து நிமிடத்தில் பாட்டை எழுதி கொடுத்தாராம்.

    அந்தப் பாடல்தான் ‘அன்பு நடமாடும் கலைக்கூடமே’ என்று தொடங்கும் பாடல். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ‘மே’ என்று முடியும். இந்தப் பாடலில் ‘மே’ என்ற எழுத்து 56 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கவிஞரே கூறியுள்ளார்.

    gkrishna

  10. Likes Russellmai liked this post
  11. #3286
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mahendra raj View Post
    Beautiful write-up on Raja Paarvai. Please permit me to add on. When Kaviarasu Kannadhasan was approached to write this situational song he inquired as to the film's title and he was replied 'Andhi Mazhai'. Even Vyramuthu had written the title song. Kannadhasan advised Kamalhassan and Chandrahassan that such a title will not bode well for a maiden project (being Kamal's first productions). The word 'andhi' denotes the sun going down and it is sentimentally not suitable, he explained. He, then, suggested the title of 'Raja Paarvai' after listening to the story line. That's how the title was changed from 'Andhi Mazhai' to 'Raja Paarvai'. Even Kamal recollected this incident in a tv media about a few months ago.
    excellant and thanks for the information mr.mahender raj

    you are always welcome

    rgds

    gk
    gkrishna

  12. #3287
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    ரஜினி நடித்த ரகுபதி ராகவன் ராஜாராம், ஆயிரம் ஜென்மங்கள், சதுரங்கம் ஆகிய மூன்று படங்களை டைரக்ட் செய்தவர். துரை, ரஜினியுடன் பழகியபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி துரை கூறியதாவது:-

    என் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படம் ரகுபதி ராகவன் ராஜாராம். அண்ணன் தம்பிகள் மூவரை சுற்றிப் பின்னப்பட்ட கதை. கதாநாயகியின் முறை மாப்பிள்ளையான வீரய்யன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார். எஸ்டேட்டில் சைக்கிள் கடை வைத்திருந்த வீரய்யன், யார் வம்புக்கும் போகமாட்டான். வந்த வம்பையும் விடமாட்டான்.

    முறைப்பெண்ணை காதலிக்கும் வீரய்யன், அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதை அறிந்து, ஒதுங்கிக் கொள்வான். இந்த நிலையில், முறைப் பெண்ணை ஒருவன் கெடுத்துவிட்டான் என்பதை அறியும் போது துடித்துப் போவான். உன்னைக் கெடுத்தவனை உயிருடனோ, அல்லது பிணமாகவோ உன் காலடியில் போடும் வரை ஓயமாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு வெளியேறுவான். சொன்னது போலவே வில்லனை கொன்று, பிணத்தை முறைப் பெண் முன் கொண்டுவந்து போட்டுவிட்டு பொலிஸில் சரண் அடைவான்.

    ஆயிரம் ஜென்மங்கள் படப்பிடிப்பு ஆழியார் இணைப் பகுதியில் நடந்தது. அங்கு மூன்று அறைகள்தான் இருந்தன. ஒரு அறை கதாநாயகி லதாவுக்கு, இன்னொரு அறையில் விஜயகுமார் தங்கினார். மூன்றாவது அறை டைரக்டரான எனக்கும், ரஜினிக்கும் ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் ஒரு கட்டில் தான். மற்றொருவருக்காக தரையில் “பெட்” விரிக்கப்பட்டிருந்தது. நீங்கள் கட்டிலில் படுத்துக் கொள்ளுங்கள். நான் தரையில் உள்ள படுக்கையில் படுத்துக்கொள்கிறேன் என்று கூறினேன். அதை ரஜினி ஏற்கவில்லை. நீங்க கட்டிலில் படுங்க. நான் கீழே படுக்கிறேன். என்று கூறி அப்படியே படுத்துக்கொண்டார். அவருடைய பெருந்தன்மை என்னை நெகிழச் செய்துவிட்டது.

    சீரியசான கெரக்டரில் அறிமுகமாகி, ஸ்டைல் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி, சதுரங்கம் படத்தில் பெண்களைப் பார்த்து பயப்படும் அப்பாவியாக நடித்தார். அவர் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினி தொழில் மீது பக்தி மிக்கவர். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிடுவார். கடும் உழைப்பாளி. படப்பிடிப்பு நேரங்களில் தான் அடுத்து நடிக்க வேண்டிய சீன் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பார். அவர் என்னை எங்கு பார்த்தாலும் அன்பாக இரண்டு வார்த்தைகளாவது பேசாமல் போகமாட்டார். இவ்வாறு கூறினார் துரை.
    gkrishna

  13. Likes Russellmai liked this post
  14. #3288
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ரஜினி நடித்த ஆயிரம் ஜென்மங்கள், முக்கியமான படம். அவர் நடித்த முதல் கலர்ப்படம் இதுதான். பல்லவி என்டர்பிரைசஸ் சார்பாக பட அதிபர் எம்.முத்துராமன் (என்.வி.ஆர்முத்து) தயாரித்த படம் இது. இதில் விஜயகுமார்- லதா ஜோடியாக நடித்தனர். லதாவின் அண்ணனாக ரஜினி நடித்தார்.

    இது, ஆவிகள் பற்றிய கதை. மலையாளத்தில், ஷீலா டைரக்சனில் யக்சகானம் என்ற பெயரில் பத்திரிகையாளர் மதி ஒளி சண்முகம் தயாரித்து வெற்றி கண்ட படம். தமிழ்ப்பதிப்புக்கு மதி ஒளி சண்முகம் திரைக்கதை- வசனம் எழுத, துரை டைரக்ட் செய்தார். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

    இந்த படத்தின் கதை புதுமையானது.

    விஜயகுமாரும், பத்மபிரியாவும் காதலர்கள். இருவருக்கும் திருமணம் நடைபெற சில நாட்கள் இருக்கும் தருணத்தில், பத்மபிரியாவை கற்பழிக்க வில்லன் முயற்சிக்கிறான். அவனிடமிருந்து தப்பி ஓடும்போது, நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இறந்து போகிறார் பத்மபிரியா. அதன்பின் ஆவியாக அலைந்து கொண்டிருக்கிறார்.

    சில ஆண்டுகளுக்குப்பின், விஜயகுமாருக்கும், லதாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஒரு சமயம் லதா தனியாக இருக்கும்போது, அவர் உடலுக்குள் பத்மபிரியாவின் ஆவி புகுந்து கொள்கிறது. லதா ஆவியாகத் திரிகிறார். விஜயகுமாரும், பத்மபிரியாவின் ஆவி புகுந்துள்ள லதாவும் தாம்பத்ய உறவு கொண்டால், அந்த ஆவி நிரந்தரமாக லதா உடலிலேயே தங்கி விடும்.

    ரஜினி இதைத் தெரிந்து கொள்கிறார். லதாவின் உடலில் இருந்து பத்மபிரியாவின் ஆவியை வெளியேற்றி, மீண்டும் லதாவின் ஆவியை அதன் உடலுக்குள் புகச் செய்ய அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை வைத்து, கதை புதுமையாகவும், விறுவிறுப்பாகவும் பின்னப்பட்டு இருந்தது.

    10-3-1978-ல் வெளியான இந்தப்படம், நூறு நாள் ஓடியது. மாறுபட்ட வேடத்தில் ரஜினி சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற வெண்மேகமே என்ற பாடல் மிகப்பிரபலம்.

    gkrishna

  15. Likes Russellmai liked this post
  16. #3289
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பொங்கலுக்கு சுட்ட கத்தரிக்காய்கொத்சு தான் கரெக்ட் காம்பினேஷன்..அதான் ஏற்கெனவே ந.தி..தேவிகா ஜோடி இருக்கே அதான் அ. வெ. .சா ந்னு சொன்னேன் கிருஷ்ணா சார்..(மீசைல மண் ஒட்டலை) ஐந்து நிமிஷத்தில் எழுதிய பாடலா..எழுதியிருப்பார் கவிஞர்..

    இந்த ஐந்து நிமிடப் பாடலை விட டெலிஃபோனிலேயே கவிஞரிடம் மெட்டு சொல்லப் பட அவர் ட்டான் டானென்று சொன்னபாடல்.. கையிலேபணமிருந்தால் கழுதை கூட அரசனடி..கைகட்ட ஆளிருந்தால் காக்கைகூட தெய்வமடி.. (இது எங்கோபடித்த நினைவு)

    மகேந்திர ராஜ் தாங்க்ஸ் ஃபார் தெ இன்ஃபோ..

    கண்ணே கலைமானே பாட்டுக்கு கவிஞர் உடல் நிலை குன்றிய சமயம் ஏர்போர்ட்டுக்கு அமெரிக்கா சென்று கொண்டிருந்த தருணத்தில் இளையராஜா அவரிடம் காரிலேயே சென்று எழுதி வாங்கி வந்தாராம்..எழுதிய கவிஞர் கண்ணதாசன் கண்ணே கலைமானே மெட்டுக்கு சோகமாகவும் சிலவரிகள் எழுதிக் கொடுக்க அதை மூன்றாம்பிறையில் இறுதியில் உபயோகப் படுத்தினாராம் இளைய ராஜா (இதுவும் நண்பர் கணேஷ் எழுதியது இதே மய்யத்தில்)

  17. #3290
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    பெண் குழந்தைக்குத்தந்தையான தனக்கு இராணுவ ஜெனரல் விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோதுமனைவி ஒரு குழந்தைக்குத் தாயானதைக்கண்டு அதிர்ச்சியடையும் கதையுடன் 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "ஜெனரல் சக்கரவர்த்தி"

    இராணுவ ஜெனரல் சிவாஜிகணேசன் அவரது மனைவி கே.ஆர்.விஜயா.அவர்களின் மகள் கவிதா, மோகன் ஷர்மாவை (லக்ஷ்மியின் முன்னாள் கணவர் )உயிருக்குயிராகக்காதலிக்கிறார். பருவ வயதில் இருவரும் தம்மை மறந்ததனால் கவிதா கர்ப்பமாகிறார்.காதலன் திடீரென இறந்துவிட செய்வதறியாது தடுமாறிய கவிதா தாயிடம் உண்மையைக்கூறுகிறார்.

    திருமணமாகாத தனது மகள் கர்ப்பமானதையும் அதற்குக்காரணமான மோகன் ஷர்மா இறந்ததையும் அறிந்த தாய் துடிதுடிக்கிறார்.மகளையும் குடும்ப மானத்தையும் காப்பாற்றுவதற்காக தான் கர்பமாக இருப்பதாக கூறி மகளுக்குப்பிறந்த குழந்தையைத்தன் குழந்தை என ஊருக்குக்கூறுகிறார்.

    மனைவி இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதை அறிந்து, தனது மேலதிகாரிகளிடம் குதூகலத்துடன் தகவல் தெரிவிப்பார். வீட்டுக்கு வந்ததும், தன் குழந்தைக்கு மகள் பால் கொடுப்பதைப் பார்த்து, சந்தேகமடைந்து, உண்மையை வெளிவரச்செய்ய, தனக்கு இனி குழந்தை பாக்கியமில்லை என்று மனைவியிடம் பொய் சொல்வார்.

    மகளைக்காப்பாற்றுவதற்காக நடத்திய நாடகத்தினால் கணவன் தன் மீது சந்தேகம் கொள்வதை அறிந்த கே.ஆர்.விஜயா, துடிதுடிக்கிறார்.உணமையைச்சொல்ல முடியாது தடுமாறுகிறார்.திருமணம் செய்யாத மகளின் குழந்தை என எப்படிச்சொல்வதெனத தெரியாது தடுமாறினார்.

    அழுத குழந்தைக்கு மகள் தாய்ப்பால் கொடுப்பதை பார்த்த சிவாஜிக்கு உண்மையைக்கூறுகிறார் மனைவி கே.ஆர்.விஜயா.மகளின் நிலை அறிந்த சிவாஜி நிலை குலைந்து போகிறார் . .இறந்துபோனதாக்க்கூறப்பட்ட மோகன் ஷர்மா உயிருடன் வருகிறார். அதன்பின் அவர்களின் வழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

    சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும் போட்டிபோட்டு நடித்தனர்.உணர்ச்சிகரமான இவர்களின் நடிப்பு ரசிகர்களைக்கலங்க வைத்தது.மனோரமா,கவிதா,மோகன் ஷர்மா,டி.பி.முத்துலக்ஷ்மி ஆகியோர் நடித்தனர்.கதை செல்வபாரதி,வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனம் படத்துக்கு உயிரைக்கொடுத்தது.பாடல்கள் கண்ணதாசன், இசை எம்.எஸ். விஸ்வநாதன்.இயக்கம் டி.யோகானந்.100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம்.

    கே.எஸ்.ராஜவின் மதுரக்குரலில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான இப்படத்தின் விளம்பரங்கள் இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

    படம் முடிகிறபோது, உண்மையிலேயே ஜெனரல் சக்கரவர்த்தியின் மனைவி கர்ப்பமாக இருப்பார். “ஃபிஃப்டி இயர்ஸ்! எப்படி?” என்று கையை மடக்கிக் காட்டி, கண்சிமிட்டுவதோடு ‘வணக்கம்’ கார்டு போடுவார்கள்

    நன்றி ரமணிமித்திரன்


    Last edited by gkrishna; 27th September 2014 at 02:23 PM.
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •